எளிய இய‌ற்கை வைத்தியம்--2

36. சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும். சர்க்கரை வியாதிக்கு முருங்கை கீ...

36. சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும். சர்க்கரை வியாதிக்கு முருங்கை கீரை கண் கண்ட மருந்து பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் 1 தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும். குறிஞ்சாக் கீரையும் சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாகும். 37. மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தி, நன்றாகப் பொடி செய்து, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளி வந்து விடும். மூல நோயும் குணமாகும். மாத விடாய் அதிகமாக போவதும் நின்று விடும். கொசுக்களை விரட்ட மாம்பூக்களைப் பொடி செய்து, சாம்பிராணி போல புகைபோட்டால் கொசுக்கள் ஓடி விடும். 38. இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்துக் இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம். 39. கொத்துமல்லி தழையை அரைத்து சர்க்கரை போட்டு பால் சேர்த்து தினம் 100 கிராம் சாப்பிட மன நோய் நீங்கும். மல்லி நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளிச்சிடும். தாகத்தைத் தணிக்கும். பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவை கட்டுப்படும். இதன் விதை எண்ணெய் சுளுக்கு நீக்கியாகப் பயன்படும். 40. பூண்டைச் சேர்த்து எந்த வகை உணவு சாப்பிட்டாலும் வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் குறையும். இதனை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, அதைத் தேய்த்தால் வாத வலி போகும். பூண்டுத் தழையை உப்பிட்டு அரைத்து சாற்றைப் பிழிந்து சுளுக்குக்குத் தடவ, சுளுக்கு விட்டுப் போகும். 41. சிரங்கு தொல்லையா? சிரங்கு : 100மி.லி., தேங்காய் எண்ணெய்யில் 5 வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவ நல்ல குணம் கிடைக்கும். 42. தினமும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை மண்ணில்லாமல் சுத்தம் செய்து, பச்சையாகவே மென்று சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். பித்தமும் நீங்கும். 43. இரவின் பூவன் பழத்தை செங்குத்து வாக்கில் இரண்டாகப் பிளந்து, அதில் சீரகத்தை வைத்து மூடி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூலவியாதி முச்சு காட்டாது. 44. சீரகத்தை நல்லெண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலை பாரம், பித்த மயக்கம் நீங்கும். 45. வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து பசுமோர் கலந்து அருந்திவர வயிற்று வலி தீரும் 46. முக சுருக்கம் நீங்க பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும். 47. தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக் தேயுங்கள். அதில் உள்ள அமிலம் கரும்புள்ளிகளைக் கரைத்துவிடும். 48. கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும். 49. தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும். 50. கசகசாவை நைசாக அரைத்து குழந்தையின் தொப்புள் சுற்றி தடவினால் குழந்தையின் அழுகை நின்றுவிடும். 51. மெலிந்த உடல் பருக்க 1. கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும். 2.தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும். 3. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக் கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும். 4. மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும். 5. சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலி குறையும். 6. துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும். 7. கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும். 52. இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த குணமாகும். எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது. 53. சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும். நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும். 54. வயிற்றுவலியா? ஒரு டம்ளர் கொதிநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வலி பறந்துவிடும். 55. காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் ஜீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும். 56. உடல் அசதியா? முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும். 57. காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும். 58. மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும். 59. இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும். 60. சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.

Related

இய‌ற்கை வைத்தியம் 1050742187050719962

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item