கோதுமை பக்கோடா--சமையல் குறிப்பு
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு கப், நறுக்கிய வெங்காயம் - அரை கப், நறுக்கிய பச்சைமிளகாய் - 2, பெருங்காயத்தூள் - 2 சிட்டி...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_1783.html
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு கப், நறுக்கிய வெங்காயம் - அரை கப், நறுக்கிய பச்சைமிளகாய் - 2, பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: கோதுமை மாவு, அரிசி மாவு இரண்டையும் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும். அதில் பச்சைமிளகாய், பெருங்காயத்தூள், வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து பிசையவும். மாவு கலவையை எண்ணெயில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டுப் பொரிக்கவும். பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
கோதுமை பக்கோடா: மாவு கலவையுடன் பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
Post a Comment