சமையல் குறிப்புகள்! நெத்திலி திதிப்பு
நெத்திலி திதிப்பு தேவையான பொருட்கள் நெத்திலி மீன் - 1/2 கிலோ தேங்காய் - 1/4 மூடி முந்திரி பருப்பு - 4 கசகசா - 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_7379.html
நெத்திலி திதிப்பு
தேவையான பொருட்கள்
நெத்திலி மீன் - 1/2 கிலோ
தேங்காய் - 1/4 மூடி
முந்திரி பருப்பு - 4
கசகசா - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பல்
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
தயிர் - 1/2 குழிக்கரண்டி
எண்ணை - 1/2 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
பட்டை - 2
லவங்கம் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
* மீனை சுத்தம் செய்து மண்போக அலசிக் கழுவிக் கொள்ளவும். கல் உப்பு சிறிது சேர்த்து அலசினால் நன்கு சுத்தமாகிவிடும்.
* தேங்காய், கசகசா, முந்திரிப் பருப்பை மசிய அரைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயையும் அரைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், பட்டை, லவங்கம், சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
* நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* மஞ்சள் தூள், தனியாத் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து கிளறவும்.
* அரைத்த மசாலாக்களை கலந்து, தேவையான உப்பு சேர்க்கவும்.
* குழம்பு கொதித்ததும், நெத்திலியைச் சேர்த்து குறைந்த தீயில் வேகவிடவும்.
* குழம்பை இறக்கும் முன் தயிர் சேர்த்து, உப்பை சரி பார்க்கவும்.
Post a Comment