டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு --- ஹெல்த் ஸ்பெஷல்,

ஆரோக்கியம் தொடர்பாக ஆயிரத்தெட்டு சந்தேகங்கள் நமக்குள் ஓடிக் கொண்டேதான் இருக்கும். ஒருவர் சரி என்று சொல்லும் முற...

ஆரோக்கியம் தொடர்பாக ஆயிரத்தெட்டு சந்தேகங்கள் நமக்குள் ஓடிக் கொண்டேதான் இருக்கும். ஒருவர் சரி என்று சொல்லும் முறையை, இன்னொருவர் தவறு என்பார். எதுதான் சரி என்று ஒவ்வொன்றுக்கும் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியுமா? நம் அனைவரின் சந்தேகங்கள், அவற்றின் தீர்வுகள் குறித்து சகல விஷயங்களையும் ஆராயும் பகுதிதான், 'டாக்டர் எனக்கு ஒரு டவுட்!’ 
'சாப்பிடும்போது நடுநடுவுல தண்ணீர் குடிக்கக் கூடாதுன்னு சொல்றாங்களே? குறைவா குடிச்சா, உடலுக்குக் கேடு. அதிகமா குடிச்சாலும் ஆபத்துனு  அடிக்கடி பேப்பர்ல வருது. இதில் எது சரி... எது தவறு? ஒரு மனுஷன் எப்ப, எந்த அளவுக்குத் தண்ணீர் குடிக்கணும்?’ போன்ற பல சந்தேகங்களைக் களைகிறார் உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் கிருஷ்ணமூர்த்தி.
''ஜீரண சக்திக்கு, உடல் சூட்டை ஒரே சீராக வைக்க, ஹார்மோன் மாற்றத்திற்கு, சருமப் பொலிவுக்கு என உடலுக்கு தண்ணீர் அவசியம்.  சராசரியாக ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தால், ஒன்றரை லிட்டர் தண்ணீர் வெளியில் போகும். இந்த நீர்ச் சத்து உடலுக்குத் தண்ணீர் மூலம் நேரடியாகவும், சாம்பார், ரசம், ஜூஸ், காய்கறிகள், பழங்கள், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற உணவின் மூலமாகவும் உடலில் சேர்ந்துவிடும்.    
எவ்வளவு?
 சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு 1,500 மில்லி அதாவது ஒன்றரை லிட்டர் தண்ணீர் அவசியம். ஏழு முதல் எட்டு தம்ளர் வரை அவசியம் தேவை.
 கோடைக் காலத்தில் சருமத்தின் மூலமாக வியர்வை வெளியேறுவதால், வறட்சி, போன்ற காரணங்களால் தண்ணீரின் தேவை இன்னும் கூடுதலாக மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தேவைப்படும்.
 விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சியாளர்கள், வெயிலில் அதிகம் அலைபவர்கள் தண்ணீர் அதிகமாக குடிப்பது நல்லது.
எப்படி?
 வெறும் வயிற்றில் இரண்டு தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
 சாப்பிட்டவுடன், தொடர்ந்து மருந்து சாப்பிடுபவராக இருந்தால், அரை தம்ளர் முதல் ஒரு தம்ளர் வரை குடிக்கலாம்.
 காலையில் டிபன் சாப்பிட்டதும், இரண்டு தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
 சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பும், சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின்பும் என தண்ணீரை குடிப்பது நல்லது.
 உணவு உண்ணத் தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்கச் செய்வதற்கான திரவம் சுரக்கத் தொடங்கும். வாயில் உள்ள உமிழ்நீரே உணவை உள்ளே தள்ளப் போதுமானது. கூடுதலாகத் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தும்போது, தண்ணீர் ஜீரணத் திரவத்துடன் சேர்ந்து, வயிற்றின் ஜீரணப் பணியை மந்தமாக்கும். சாப்பிடும்போது நடுநடுவே தண்ணீர் அருந்தக் கூடாது.
 அதிக உப்பு, காரம் சேர்த்து சாப்பிடும்போது, தாகத்தைத் தூண்டி அதிக தண்ணீரை கேட்கும். தவிர்ப்பது நல்லது.
 உணவை வேகமாக சாப்பிடும்போதும் தண்ணீரின் தேவை அதிகரிக்கும்.  நிதானமாக சாப்பிடப் பழகுங்கள்.  
 நமது உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்திப் பெற்றுக்கொள்ளும். ஒவ்வொருவரின் உடல்வாகு, வசிப்பிடம், மற்றும் வெப்பநிலை நிலை பொறுத்து, தண்ணீரின் தேவை அளவு மாறும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 1955740024837342244

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item