பஞ்சவர்ணப் பொங்கல் அம்மா ரெசிபி --- சமையல் குறிப்புகள்,

''81 வயதாகும் என் அம்மாவுக்கும், என் கணவருக்கும் என் சமையல்தான் ரொம்பப் பிடிக்கும்.  அதிலும் சத்து நிறை...

''81 வயதாகும் என் அம்மாவுக்கும், என் கணவருக்கும் என் சமையல்தான் ரொம்பப் பிடிக்கும்.  அதிலும் சத்து நிறைந்த சிறு, குறு தானியங்களைக்கொண்டு நான் செய்யும் பஞ்சவர்ணப் பொங்கலை விரும்பிச் சாப்பிடுவார்கள். எளிதில் ஜீரணமாகும். சாதாரணப் பொங்கலைவிட, அதிகச் சுவையுடன் இருப்பதால், நெய் தேவைப்பட்டால் மட்டுமே சேர்த்துக் கொள்ளலாம்.  குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது, நெய்யில் முந்திரியை வறுத்துச் செய்து தருவேன்.  
 தினமுமே சிறு தானியங்களில், காலையில் தினைக் கஞ்சி. மத்தியானம் அரிசியுடன் வரகு சேர்த்த சமையல். சாயங்காலம், அரிசி கறுப்பு உளுந்துடன், கோதுமை, ராகி மாவுகளைக் கலந்து தோசை செய்வேன். வீட்டில் இருக்கும் வயதானவர்களும் ஆரோக்கியமாக இருப்பதற்கு இதுதான் காரணம்.'' - சிலாகித்துச் சொல்லும் திருச்சியைச் சேர்ந்த மீனாட்சி மோகன், பஞ்சவர்ணப் பொங்கல் செய்வது பற்றிச் சொல்கிறார்.
தேவையானவை:  தினை, வரகு, அரிசிக் குருணை, கோதுமை ரவை, பாசிப் பருப்பு இவற்றைச் சம அளவு கலந்து அதில், ஒரு தம்ளர் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும்.
இஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன், மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயம், நெய் - சிறிதளவு, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: தானியக் கலவையை வெறும் கடாயில் லேசாக வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு சிறிது தண்ணீர் விட்டுக் களைந்து சுத்தம்செய்து எண்ணெய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து  குக்கரில் குழைய வேகவிடவும். கடாயில் சிறிது எண்ணெய்விட்டு இஞ்சி, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுப் பொரித்து, கடைசியில் மிளகுத் தூளை லேசாக வறுக்கவும்.  வேகவைத்த தானியக் கலவையில் இதைச் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
சித்த மருத்துவர் கண்ணன்: புரதம், நார்ச் சத்து, மாவுச் சத்து, தாது உப்புகள் சிறு குறு தானியங்களில் நிறைந்து இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  இதயம் வலுவாகும்.  உடல் பருமனைக் குறைக்கும்.  சர்க்கரையின் அளவைக் குறைக்கும். இதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஊட்டச் சத்துக் குறைபாடின்றி, உடல் நன்றாக வலுவடையும்.

Related

சமையல் குறிப்புகள் 783733661875232899

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Thursday - Nov 28, 2024 3:25:53 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,393

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item