தாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்? --- ஹெல்த் ஸ்பெஷல்,
தாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்? தா ய்ப்பாலைவிட நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட சிறந்த உணவோ ம...
https://pettagum.blogspot.com/2012/12/blog-post_3724.html
தாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்?
''தாய் என்ன சாப்பிடுகிறாரோ அதுதான் குழந்தைக்குச் சத்தாக சென்று சேரும். அதனால், தாய்மார்கள் குழந்தைகளுக்காகவாவது தாங்கள் சாப்பிடும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக, எடுத்துக் கொள்ளும் உணவை மொத்தமாக ஒரே சமயத்தில் சாப்பிட்டுவிடாமல், இரண்டு மணி நேர இடைவெளியில், நாள் ஒன்றுக்கு ஏழு முறை என்று உணவைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளலாம். அது மட்டுமின்றித் தினமும் வேக வைத்த முட்டை, மீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கோழி இறைச்சிக்குப் பதிலாக ஆட்டு இறைச்சியைச் சாப்பிடலாம். முள்ளங்கி, பீட்ரூட், தக்காளி போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் குழந்தைக்குச் சளிப் பிடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இவற்றைத் தவிர்த்து கேரட், அவரைக்காய், சுரைக்காய், புடலங்காய் போன்ற நார்ச்சத்து மிகுந்த உணவுகளைத் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரை வகைகளில் பொன்னாங்கண்ணிக் கீரையில் அதிக அளவில் புரதமும், மாவுச்சத்தும், வைட்டமின்களும் இருக்கின்றன. வாரம் இருமுறை இந்த கீரையை சேர்த்துக் கொள்ளலாம். இது பெண்களின் ஹார்மோன்களின் உற்பத்தியைப் பெருக்கித் தாய்ப்பாலை அதிகம் சுரக்க செய்யும். பேரீச்சம்பழம், திராட்சை, கேழ்வரகு, அவல், கோதுமை, சோயாபீன்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.'' என்கிறார் திவ்யா விளக்கமாக.
தாய்ப்பாலைத் தவிர்க்காதீங்க தாய்மார்களே!
1 comment
nice mom good like me
Post a Comment