கால்நடைகளைத் தாக்கும் வெப்ப நோய்கள்... கைகொடுக்கும் பாரம்பர்ய மருத்துவம்!
த ற்போது நிலவிவரும் கோடைப்பருவத்தில்... வெப்பநிலை அதிகரிப்பால் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களைத் தடுக்கும் முறைகள் குறித்துத் தஞ்சாவூ...
வெந்தயத்தை ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்து, நிழலில் உலர்த்தி, மாவாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு மாட்டுக்கு ஒரு கைப்பிடி வெந்தய மாவு என்ற அளவில், தீவனத்தில் கலந்து கொடுத்துவந்தால் மாடுகளின் உடல் குளிர்ச்சியடையும். அதேபோல ஒரு மாட்டுக்கு ஒரு கைப்பிடி அளவு பெருநெல்லிக்காயை இடித்துத் தீவனத்தில் கலந்துகொடுக்கலாம். நெல்லிக்காய்க்குப் பதிலாக ஒரு கைப்பிடி நெல்லி வற்றலைத் தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்தும் கொடுக்கலாம். தினமும் ஒரு கட்டு வீதம் அகத்திக்கீரை, 2 மொந்தன் வாழைப்பழம் எனக் கொடுத்து வந்தால் மாடுகளை வெப்ப நோய்களிலிருந்து காப்பாற்றலாம்.கோடைக்காலத்தில் மாடுகளுக்கு மடி அம்மை நோய் வர வாய்ப்புகள் உண்டு. இந்த நோய் வந்தால், மாடுகளின் மடியில் கொப்புளங்கள் உருவாகி மாடுகள் பாதிக்கப்படும். ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள், பூண்டு 2 பல், தலா ஒரு கைப்பிடி துளசி, வேப்பிலை, திருநீற்றுப்பச்சிலை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து... வெண்ணெயில் குழைத்து, தினமும் மூன்று வேளைகள் மடியில் தடவிவந்தால் மடி அம்மை குணமாகும். ஆடுகளுக்கு அம்மை நோய் தாக்கினாலும் இதே மருந்தைப் பயன்படுத்திக் குணமாக்கலாம்.
தலா ஒரு ஸ்பூன் வெந்தயம், மிளகு, சீரகம் ஆகியவற்றை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதோடு 2 பூண்டு, 1 ஸ்பூன் மஞ்சள்தூள், 2 கைப்பிடி நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றை அரைத்துச் சேர்க்க வேண்டும். அக்கலவையுடன் ஒரு மூடி தேங்காய் துருவல் சேர்த்துப் பிசைந்து மாடுகளுக்குத் தினமும் ஒருவேளை வீதம் 3 நாள்களுக்குக் கொடுத்தால்... வாய்ப்புண், காய்ச்சல் மற்றும் கோமாரி உள்ளிட்ட பாதிப்புகள் வராது.
கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோயைத்தடுக்க... ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு கைப்பிடி கீழாநெல்லி ஆகியவற்றை இடித்துத் தூளாக்கி, தனியாகவோ அல்லது அரிசி குருணையோடோ கலந்து கொடுக்க வேண்டும். இது 10 கோழிகளுக்கான அளவு. 3 முதல் 5 நாள்களுக்குக் கொடுத்துவந்தால் போதுமானது.”
தொடர்புக்கு, கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி, செல்போன்: 98424 55833.
மாடுகளுக்குப் பாரம்பர்ய முறை மூலம் வைத்தியம் செய்துகொள்கிறார், தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி மகேஷ். ஒரு காலைவேளையில் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த மகேஷைச் சந்தித்தோம்.
தொடர்புக்கு, மகேஷ், செல்போன்: 87549 69831.
Post a Comment