பிஸ்கட் சாப்பிடாதீர்கள்! - எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்!

பிஸ்கட் சாப்பிடாதீர்கள்! - எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்!! ப ள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகள் தொடங்கி , வீட்டுக்குவரும்   வி...


பிஸ்கட் சாப்பிடாதீர்கள்! - எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்!!
ள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகள் தொடங்கி, வீட்டுக்குவரும்  விருந்தாளிகள் வரை எல்லோருக்கும் பிஸ்கட் கொடுத்து உபசரிப்பது மரபாகி விட்டது. பெரும்பாலானோரின் தொலைதூரப் பயணங்களில்  பிஸ்கட்தான் உணவாகவே இருக்கிறது.நாலு பிஸ்கட்டில் ஒரு டம்ளர் பாலின் சக்தி கிடைக்கிறது’ என்ற அறிவிப்போடு விற்பனைக்கு வரும் பிஸ்கட்டுகள்  நம் கவனத்தை ஈர்க்கின்றன. இப்படி, நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருக்கும் பிஸ்கட் உண்மையிலேயே நம் உடலுக்கு ஆற்றலைத் தருகிறதா? உணவுக்குப் பதிலாக பிஸ்கட் சாப்பிடலாமா?
நிச்சயம் சாப்பிடக்கூடாது” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம்.

இன்றைய சூழலில் ஆபீஸ் மீட்டிங் தொடங்கி டீ பிரேக் வரை  எல்லா இடங்களிலும் பிஸ்கட் முக்கிய உணவுப்பொருளாக இருக்கிறது. சிலர் பிஸ்கட்டை உணவாகவே உண்டு வாழ்கின்றனர். உண்மையில், பிஸ்கட் என்பது கழுத்தைச்  சுற்றிய பாம்பு போல ஆபத்தான ஓர் உணவு  என்பதைப் பலர் அறிவதில்லை. பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச்சத்து (Hydrogenated Fat) சேர்க்கப்படும். இது காலப்போக்கில் டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) எனப்படும் மோசமான கொழுப்பாக மாறி, உடல் சார்ந்த பல பாதிப்புகளுக்குத் திறவுகோலாக அமையும்.

* பிஸ்கட் எந்த அளவுக்கு மிருதுவாக உள்ளதோ, அந்த அளவுக்கு அதிகப் புரதச்சத்துகளைக் கொண்டது. மிருதுத்தன்மை குறைந்தால், கொழுப்புச்சத்தின் அளவு அதிகமிருக்கிறது என்று அர்த்தம்.

*
சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை, பிஸ்கட்டில் அதிகம் கலக்கப்படுகிறது. இது, உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்னைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும்.

*
சோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு பிஸ்கட்டில் அதிகளவு உள்ளது. உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் போன்றவை ஏற்படும்.

*
கெட்ட கொழுப்புச்சத்து உயர்வதால், பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.

*
சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பிஸ்கட்டுகளில், டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) அளவு பூஜ்யம் என்று குறிப்பிடப்படுகிறது. இது உண்மையாக இருக்கவே முடியாது.
* `லோ இன் கலோரிஸ்’ (Low in Calories) என்று பல பிஸ்கட் பாக்கெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. ஒரு க்ரீம் பிஸ்கட், குறைந்தபட்சம் 40 கலோரிகள் கொண்டது. எனவே பிஸ்கட்டை லோ கலோரி உணவு எனக் குறிப்பிடுவதே தவறு.

*
பிஸ்கட்டை ஸ்நாக்ஸாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான விஷயமல்ல. காலை உணவாக டீ, பாலுடன் பிஸ்கட் சாப்பிடுகிறார்கள். சிறுவயதிலேயே இதைச் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

``
கட்டாயம் பிஸ்கட்டைத் தவிர்க்க அறிவுறுத்தப் படுகிறவர்கள் தவிர மற்றவர்கள் ஒருநாளைக்கு அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று பிஸ்கட் சாப்பிடலாம். க்ரீம் பிஸ்கட் என்றால் ஒன்றோ, இரண்டோ போதும். இது சிறியவர், பெரியவர் அனைவருக்கும் பொருந்தும்’’ என்கிற கற்பகம், வீட்டிலேயே பிஸ்கட் செய்து சாப்பிடுவதுதான் சிறந்த தீர்வு. அதையுமே அளவுக்கு மீறி எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றும் அறிவுறுத்துகிறார்.

குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பது சரியா?

கார்த்திக் சூர்யா, குழந்தைகள்நல சிறப்பு மருத்துவர்.

பிஸ்கட்டின் வேலையே பசியை அடக்குவதுதான். ஒரு குழந்தை மூன்று பிஸ்கட் சாப்பிட்டால், பசியே எடுக்காது. பெரும்பாலானவர்கள், குழந்தைக்குப் பாலில் நனைத்த பிஸ்கட்டைக் கொடுப்பார்கள். இது முற்றிலும் தவறான பழக்கம். க்ரீம் பிஸ்கட்டைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஆரஞ்சு ஃப்ளேவர், சாக்லேட் ஃப்ளேவர் எனப் பலவகை பிஸ்கட்டுகள் கடைகளில் கிடைக்கின்றன. இவையாவும் செயற்கை ஃப்ளேவர்கள். அதேபோல, க்ரீம் பிஸ்கட்டுகளில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். பெரியவர்களே வெள்ளைச் சர்க்கரை சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப் பட்டுவரும் நேரத்தில், வளரும் குழந்தைகளுக்குக் கொடுப்பதென்பது, பல்வேறு பிரச்னைகளுக்குத் திறவுகோலாக அமையும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, காலை பிரேக்கில் சாப்பிட பிஸ்கட் கொடுத்தனுப்பும் பெற்றோரைப் பார்க்கமுடிகிறது. இதனால் மதிய உணவை முழுமையாகச் சாப்பிட முடியாமல் போகும். பிரேக்கில் பழங்களைச் சாப்பிடக் கொடுங்கள். இது பசியைத் தூண்டுவதுடன், கூடுதல் சத்துகளைக் கொடுக்கும். மாலைநேரத்தில் பிஸ்கட் சாப்பிடுவது, அவர்களை மந்தப்படுத்தும் என்பதால், குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.”
 Thanks to vikatan.com

Related

ஃபுட்பாய்சன் பற்றி பாரம்பரிய மருத்துவம் சொல்வது என்ன?

ஃபுட்பாய்சன் பற்றி பாரம்பரிய மருத்துவம் சொல்வது என்ன? - ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜய்பால். “ஃபுட் பாய்சனில் நிறைய விதங்கள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான வீட்டு வைத்தியத்தை நாம் கொட...

தேன், சாப்பிடுவது எப்படி ?

தேன், சாப்பிடுவது எப்படி ? எடை குறைப்பதற்காக, எடை கூட்டுவதற்காக, இருமல் நிற்பதற்காக... என அன்றாடம் தேனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம். இந்நிலையில், நாம் கடைகளில் வாங்கிப...

கல்லை வெல்லும் வாழைத்தண்டு!

கல்லை வெல்லும் வாழைத்தண்டு சுட்டெரிக்கும் அக்னி வெயில் உங்கள் சிறுநீரகத்தில் கற்களைத் தோற்றுவிக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? வெயில் உடலில் த...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Nov 27, 2024 12:18:0 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,119

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item