பசலைக்கீரை… இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப் பிரசாதம்!
பசலைக்கீரை… இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப் பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த அற்புதமான பசலைக்கீரை, உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகள...

இதனால் குழந்தைகளின் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அதுமட்டுமின்றி, பசலைக் கீரையில் வளமான அளவில் இரும்புச் சத்து இருப்பதால், இதனை உட்கொண்டால் ரத்த சோகையில் இருந்து விடுபடலாம். மேலும் இது ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு சிறப்பான உணவுப்பொருள்.
முக்கியமாக உடல் பருமனால் அவஸ்தைப் படுபவர்கள், இதனை தினமும் டயட்டில் சேர்த் தால் நல்ல பலன் கிடைக்கும். இது மாதிரி பசலைக் கீரையை உட்கொண்டால், கிடைக்கும் நன்மைகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம்.
இங்கு அந்த பசலைக்கீரையை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைக் கொடுத்துள் ளோம். அதைப் படித்தால், நிச்சயம் இந்த கீரையை உணவில் சேர்க்காமல் இருக்க மாட் டீர்கள். குறைந்த கலோரி பசலைக்கீரையில் கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால், இதனை உணவில் தினமும் சேர்த்தால், நிச்சயம் உடல் எடையைக் குறைக்கலாம்.
மருத்துவப்பயன்கள்
அதிக வைட்டமின்கள்: பசலைக்கீரையில் வைட்ட மின் `ஏ’, `கே’ மற்றும் `ஈ’ அதிகம் உள்ளது. இதனால் பல்வேறு நோய்த் தொற்றுகளான சுவாசக்கோளாறு, சிறுநீரகப் பாதை தொற்று போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம்.
மலச்சிக்கலில் இருந்து விடுதலை: தினமும் ஒரு கப் பசலைக் கீரையை உணவில் சேர்த்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப் பதால், செரிமான மண்ட லம் சீராக செயல்படும்.
ரத்த அழுத்தம் குறையும்: பசலைக்கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந் துள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், உயர் ரத்த அழுத்தத்தினால் உண்டாகும் மோசமான நிலையில் இருந்து பாதுகாக்கும்.
புற்றுநோயை எதிர்க்கும்: பசலைக் கீரையில் ஃப்ளே வோனாய்டு என்னும் அத்தி யாவசிய பைட்டோ நிïட்ரி யண்ட்டுகள் இருக்கிறது. மேலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளும் அதிகம் உள்ளது. அதிலும் இந்த பசலைக்கீரை புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.
சீரான ரத்த அழுத்தம்: இந்த கீரையில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.
ஆரோக்கியமான இதயம்: ஃபோலேட் அதிகம் உள்ள பசலைக்கீரையை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால், இதயத்தை நன்கு ஆரோக் கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
கொழுப்பை கரைக்கும்: பசலைக்கீரையில் உள்ள கரோட்டினாய்டு என்னும் லுடின், கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மைக் கொண் டவை. ஆகவே தினமும் இதனை உணவில் சேர்த்தால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தங்குவதைத் தவிர்க்கலாம்.
சரும பாதுகாப்பு: பசலைக்கீரையில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் கனி மச்சத்துக்கள், சருமத்தில் எண்ணெய் பசையைத் தக்க வைத்து, சரும வறட்சியில் இருந்து நிவாரணம் தரும். அதுமட்டுமின்றி, இது சரும பிரச்சனைகளான முகப்பரு மற்றும் சுருக்கங்களில் இருந்தும் விடுதலை அளிக்கிறது.
கண்ணுக்கு பாதுகாப்பு: பசலைக்கீரையில் உள்ள லுடின், கண் புரை மற்றும் இதர கண் பிரச்சனைகளில் இருந்தும் கண்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும்.
மூளை, நரம்பு மண்டலம்: பசலைக்கீரையில் நல்ல அளவில் செலினியம், நியாசின் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இவை மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சத்துக்களாகும்.
எலும்புகளின் அடர்த்தி: ஒரு கப் வேக வைத்த பசலைக்கீரையில் வைட்டமின் `கே’ வளமான அளவில் உள்ளது. மேலும் இதில் எலும்புகளின் அடர்த்தி மற்றும் வலிமையை அதிகரிக்கும் வகையில், எலும்புகளில் ஆஸ்டியே கால்சின் என்னும் புரோட்டினை அதிகரிக்கிறது.
மூட்டு வலியில் இருந்து விடுதலை: மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருந்தால், அதனை சரிசெய்ய பசலைக்கீரையை அதிகம் உட்கொண்டால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள், அந்த வலி யைக்குணப்படுத்தும்.
ரத்த சோகை: பசலைக்கீரையில் இரும்புச் சத்து வளமாக இருப்பதால், இதனை தினமும் உட்கொண் டால், உடலில் ரத்தத்தின் அளவு அதிகரித்து, ரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.
நீரிழிவு, இரத்தக் குறைவு, கால் விரல்களில் உள்ள வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தப் பசலைக்கீரை மிகவும் உதவுகின்றது. இதன் சாறு, சிறுநீரில் கற்கள் இருந்தால் அவற்றைக் கரைக்க உதவுகின்றது. கற்களைக் கரைத்து வெளியேற்றும் சக்தி அதற்கு உள்ளது. சிறுநீரகக் கோளாறுகளையும் இது அகற்றுகின்றது. இதன் சாற்றைக் கொப்பளித்தால் தொண்டைப்புண் குணமாகின்றது.
இலைகளை (1 லிருந்து 10 வரை)க் கக்ஷாயம் வைத்து அருந்தினால் காய்ச்சல்கள், கல்லடைப்பு, சுவாசப்பைகளிலும் குடல்களிலும் ஏற்பட்டுள்ள வீக்கங்கள், சுவாசிப்பதில் சிரமம், வேகமாக இயங்கும் சுவாசம் ஆகியவை குணமாகின்றன. இத்தகைய நோய்களின் போது இது எரிச்சலைத் தணிக்கின்றது. துவர்ப்பு மருந்தாக உதவுகின்றது, சிறுநீரைப் பெருக்குகின்றது. வளரும் இளம்பெண்கள் பசலைக் கீரையை ஏராளமாக உண்ணவேண்டும், அதில் இரும்புச் சத்து ஏராளமாக உள்ளது, சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது.
வைட்டமின் சத்துக்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி ‘ ஆகியனவும், பொட்டாசிய உப்பின் காரச்சத்தும் ஏராளமாக உள்ளன. வைட்டமின் ‘ஏ’ பார்வைக் கோளாரைக் குணப்படுத்தும், இரத்த விருத்தி உண்டாக்கும். இதில் உள்ள இரும்புச் சத்து மிகவும் சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது. சோடியம், போலாசின், கால்சியம் உள்ளன. ஆனால் கொழுப்பு சத்துக்கிடையாது. பசலைக்கீரை மிகவும் சுலபமாக செரிகின்றது, குளிர்ச்சி தருகின்றது, ஊட்டச்சத்து உள்ளது. எரிச்சலைத் தணிக்கின்றது, மிக உயர்ந்த உணவாக உள்ளது. பித்தம், நீர்தாரை, வெட்ட நோய்கள் குணமாகின்றன.
தோல்நோய்கள், மேகம், சீதபேதி குறைகின்றது. இதன் இலைச் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்க நீர்கோவை குணமாகும்.
இந்தக் கீரை சாப்பிடும் போது தாது கெட்டி படும். மூளைக்கு சக்தியைக் கொடுக்கும். இலையை வாட்டி தலையில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.
இதை சிறிதளவு தண்ணீரில் சமைக்க வேண்டும். சமைத்த பின் தண்ணீரை வெளியில் கொட்டிவிடக் கூடாது ஏனெனில் அதில் மிகுந்த ஊட்டச்சத்துப் பொருள்கள் உள்ளன.
மிளகு, பூண்டு, தக்காளி சேர்த்து ரசம் வைக்கலாம். பசலைக்கீரையின் இளம், மென்மையான முளைகளைச் சமைக்காத பச்சடிகளில் பயன்படுத்தலாம்.
இவற்றைப் பச்சடிக் கீரையின் கொழுந்துகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். இது நல்ல பசியைத் தூண்டிவிடுகின்றது. பருப்புகளுடன் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளும் கீரை வகைகள் மிகவும் நன்மை தருகின்றன.
பசலைக்கீரை மலத்தை நன்றாக இளகச் செய்கின்றது. எரிச்சலைத் தணிக்கின்றது. திசுக்களின் அளிவை இது குறைக்கின்றது. இதில் உடல் வறட்சிக்கு எதிரான பெரிபெரி என்னும் வீக்க நோயிக்கு எதிரான, கரப்பான் வியாதிக்கு எதிரான சத்துக்கள் கணிசமான அளவில் உள்ளன. கொழுந்தாக உள்ள கொடிச் சுருளைப் பச்சையாகவே உண்பது மிகுந்த நன்மையைத் தருகின்றது.
பாஸ்ட் புட், ஹைபிரிட் காய் கறிகள், எந்திரத்தனமான வாழ்க்கை முறை, ஓய்வற்ற உழைப்பு…,இவை அனைத்தும் நம்மை மருந்து, மாத்திரைகள் என்ற உலகத்திற்கு அழைத்து செல்கிறது. நொறுங்க தின்றால் நூறு வயது என்பது பழமொழி. ஆனால் இன்று அனைத்தையும் நாம் ரெடிமேட் என்ற உலகத்திற்குள் கொண்டு வந்துவிட்டோம்.
எனவே நமது வாழ்வை சற்று இறைவன் அளித்த இயற்கையோடு இணைந்து கடப்போம். அதில் ஒன்றுதான் கீரை வகைகள். அந்த வகையில் இந்த பசலைக்கீரைக்கு என்றுமே முதலிடம்தான்.
பசலைக்கீரை நம் எதிர்கால சந்ததியினருக்கும் காண்பித்து அவர்களுக்கும் இந்த கீரையின் பலாபலன்களை எடுத்துக்கூறி ஆரோக்கியமான இதயம், ஆரோக்கியமான எலும்பு, ஆரோக்கியமான சருமம், ஆரோக்கியமான கண்கள் என்று ஆரோக்கிய வாழ்வு வாழச்செய்யுங்கள்.
ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்கள் பசலைக் கீரையை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், டானிக் எதுவும் தேவையில்லை. பசலைக்கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும். பசலைக்கீரையுடன் பாசிப் பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால்... உடல் உஷ்ணம், மலச்சிக்கல் நீங்கும்.
பசலைக்கீரையின் இளந்தளிரை சாறு எடுத்து தேன் அல்லது சர்க்கரை கலந்து சிறுவர்களுக்குக் கொடுத்து
வந்தால், உடல் ஆரோக்கியம் பெறும். மேலும், எந்த வகையிலாவது பசலைக்கீரையை சாப்பிட்டு வந்தால்... வாந்தி, ஈரல் உபாதைகள்,
நீரடைப்பு, மூத்திரக்கடுப்பு நோய்கள் குணமாகும்.
பசுவெண்ணெயுடன் பசலைக்கீரை சேர்த்து அரைத்து தடவினால், அக்கி சரியாகும். பசலைக்கீரையுடன் பூண்டு சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டால், ஆண்மைக்குறைபாடு நீங்கும்.
சில சமையல் வகைகள்:
இதை பச்சையாக சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம்.
வெங்காயம் தக்காளி சேர்த்து கடைதல்,
தேங்காய், மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்துக் கூட்டு செய்தல்,
புளி, பருப்பு போட்டு குழம்பு,
மோர், தேங்காய் அரைத்து மோர்க்குழம்பு இப்படி நிறைய முறையில் சமைக்கலாம்.
பசலைக்கீரை எலுமிச்சை பொரியல்
2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் சோயா சாஸ், இரண்டு பல் பூண்டு, லவங்கம் பட்டைத்தூள் கொஞ்சம் சேர்த்து எல்லாவற்றையும் அரை டீஸ்பூன் எண்ணெயில் வதக்கி அதில் வேகவைத்த கீரையை போட்டு நன்றாக புரட்டி எடுக்கவும்.
கீரை தக்காளி தயிர் சப்ஜி
சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.
தேவையான பொருள்கள்: ஒரு கட்டு கீரை, ஒரு சின்ன கப் தயிர், தக்காளி 2, பெரிய வெங்காயம் 2, பச்சைமிளகாய் 2, 1 டீஸ்பூன் எண்ணெய்.
செய்முறை: கீரையை சிறிது தண்ணீர் தெளித்து வேகவிட்டு மசித்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். இவற்றை எண்ணெயில் வதக்கி பிறகு மசித்த கீரையை சேர்க்கவும் கடைசியாக தயிர் சேர்த்து கிளறி இறக்கி விடவும்.
பசலை ரிஸோட்டா
தேவையான பொருட்கள்: எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம் 1, நறுக்கிய கீரை 3 கப், பூண்டு 2 பல், அரிசி 1 கப், காய்கறி வெந்த தண்ணீர் அல்லது சாதாரண நீர் 3 கப், புதினா இலை 1/2 கப், சீஸ் துருவியது 1/2 கப், உப்பு, மிளகுப் பொடி தேவைக்கேற்ப.
செய்முறை: வெங்காயம், பூண்டை நறுக்கிக் கொள்ளவும். எண்ணெயை காய வைத்து அதை போட்டு வதக்கவும். அதில் அரிசியை களைந்து போட்டு சில நிமிடங்கள் புரட்டவும். காய்கறி நீர் அல்லது தண்ணீரைத் தனியாக கொதிக்க வைத்து அதிலிருந்து பாதி தண்ணீரை அரிசியில் ஊற்றவும். நீர் சுண்டியதும் இன்னும் கொஞ்சம் நீர் சேர்த்து வற்றியதும் நறுக்கிய கீரை, புதினா இலைகளைச் சேர்த்து இன்னும் கொஞ்சம் நீர் சேர்க்க வும். அரிசி, கீரை வெந்து நீர் வற்றியதும் உப்பு, மிளகுப்பொடி சீஸ் போட்டு இறக்கவும்.
1 comment
நல்ல பகிர்வு.
Post a Comment