காவி அலப்பறை - கவிதை!
யுகபாரதி -- கவிதை, படம்: அருண்டைட்டன் கா வி தரிச்ச சாமியாரு கவர்மென்ட்டு எப்படி - உ.பி மாநிலமே அவரக்கண்டு ஆகுதுங்க பல்பொடி பசுவ ...

https://pettagum.blogspot.com/2017/10/blog-post_11.html
யுகபாரதி-- கவிதை, படம்: அருண்டைட்டன்
காவி தரிச்ச சாமியாரு
கவர்மென்ட்டு எப்படி - உ.பி
மாநிலமே அவரக்கண்டு
ஆகுதுங்க பல்பொடி
பசுவ வளக்க பாடுபட்டு
படுத்துறாரு மக்கள - பச்ச
சிசுக மரிச்ச செய்திகேட்டும்
பதறிப்போயி நிக்கல
காதல் வாழும் தாஜுமகால்
அவரு கண்ணக் குத்துது - காசி
மாநகரும் வேதாந்தமும்
மனசுக்குள்ள சுத்துது
கோயில்கட்ட இடமொதுக்கி
கொடுக்குறாரு சில்லற - ஏழ
குடியிருக்க வழியில்லேன்னா
எழுப்புறாரு கல்லற
மதத்த வச்சு ஆட்சிசெய்ய
அரைக்கிறாரு அம்மிய - ஒலக
அதிசயத்த வெலக்கிப்புட்டு
அடிக்கிறாரு கும்மிய
கீதயென்ன சொல்லுதுன்னு
சொல்லுறாரு சுத்தமா - சம
நீதி செத்துப்போனதுன்னா
சிரிக்கிறாரு சத்தமா
மடத்தப்போல கட்டியாள
நாடென்ன திண்ணையா - இல்ல
கண்ணபிரான் வழிச்சி நக்க
கட்டியான வெண்ணெயா?
ஒறவுபோல வாழும் எங்க
உசுரக்கொல்ல திட்டமா - போலித்
துறவுவேஷம் போட்ட அவரு
வச்சதுதான் சட்டமா?
பொறுத்து நாங்க போகும்வர
போடுவாரு குஸ்திய - ஆட்சி
வெறுத்துப்போயி வெகுண்டெழுந்தா
கரைக்கவேணும் அஸ்திய
கோட்டத் தாண்டி அவருசெய்யும்
கோக்குமாக்கு எத்தன - எண்ணி
ஓட்டுப்போட்ட எங்களுக்கு
வேணும் இந்த தண்டன.
Thanks to ஜூனியர் விகடன் - 11 Oct, 2017
காவி தரிச்ச சாமியாரு
கவர்மென்ட்டு எப்படி - உ.பி
மாநிலமே அவரக்கண்டு
ஆகுதுங்க பல்பொடி
பசுவ வளக்க பாடுபட்டு
படுத்துறாரு மக்கள - பச்ச
சிசுக மரிச்ச செய்திகேட்டும்
பதறிப்போயி நிக்கல
காதல் வாழும் தாஜுமகால்
அவரு கண்ணக் குத்துது - காசி
மாநகரும் வேதாந்தமும்
மனசுக்குள்ள சுத்துது
கோயில்கட்ட இடமொதுக்கி
கொடுக்குறாரு சில்லற - ஏழ
குடியிருக்க வழியில்லேன்னா
எழுப்புறாரு கல்லற
மதத்த வச்சு ஆட்சிசெய்ய
அரைக்கிறாரு அம்மிய - ஒலக
அதிசயத்த வெலக்கிப்புட்டு
அடிக்கிறாரு கும்மிய
கீதயென்ன சொல்லுதுன்னு
சொல்லுறாரு சுத்தமா - சம
நீதி செத்துப்போனதுன்னா
சிரிக்கிறாரு சத்தமா
மடத்தப்போல கட்டியாள
நாடென்ன திண்ணையா - இல்ல
கண்ணபிரான் வழிச்சி நக்க
கட்டியான வெண்ணெயா?
ஒறவுபோல வாழும் எங்க
உசுரக்கொல்ல திட்டமா - போலித்
துறவுவேஷம் போட்ட அவரு
வச்சதுதான் சட்டமா?
பொறுத்து நாங்க போகும்வர
போடுவாரு குஸ்திய - ஆட்சி
வெறுத்துப்போயி வெகுண்டெழுந்தா
கரைக்கவேணும் அஸ்திய
கோட்டத் தாண்டி அவருசெய்யும்
கோக்குமாக்கு எத்தன - எண்ணி
ஓட்டுப்போட்ட எங்களுக்கு
வேணும் இந்த தண்டன.
Thanks to ஜூனியர் விகடன் - 11 Oct, 2017
Post a Comment