பிரண்டை துவையல்!
பிரண்டை துவையல் தேவையானவை: இளசானப் பிரண்டை கட்டைவிரல் நீளம் - 10 துண்டுகள் தேங்காய்பத்தை - 4 துண்டு மிளகாய் வற்றல் -4 கடுக...

இளசானப் பிரண்டை கட்டைவிரல் நீளம் - 10 துண்டுகள்
தேங்காய்பத்தை - 4 துண்டு
மிளகாய் வற்றல் -4
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
எள்ளு - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
வெல்லம் - 1 சிறு துண்டு
புளி - 1 சிறு எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு பிரண்டையை சுருள வதக்கவும். பிறகு தேங்காய் தவிர மற்ற பொருள்களை மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு தனியாக வறுக்கவும். வறுத்த எல்லாவற்றுடன் பிரண்டை ,
உப்பு, புளி, தேங்காய், வெல்லம் வைத்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். பிரண்டைத் துவையல் தயார். இதை சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம், தொட்டுக் கொள்ளவும் செய்யலாம். மூட்டு வலிக்கு ஒரு நல்ல மருந்தாகவும் ஆகும்.
Post a Comment