நிதி ஆண்டு 2015-16, மதிப்பீட்டு ஆண்டு
2016-17 வருமான வரி கணக்குத் தாக்கல் யாருக்கு எந்த படிவம்?
திருமதி. லதா ரகுநாதன்,
ஆடிட்டர்,
எல்ஆர் அசோசியேட்ஸ், சென்னை.
வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது யார் எந்தப் படிவத்தை உபயோகிக்க வேண்டும், கடந்த வருடத்துக்கும்(நிதி ஆண்டு 2014-15, மதிப்பீட்டு
ஆண்டு 2015-16) இந்த (நிதி ஆண்டு 2015-16 மதிப்பீட்டு ஆண்டு 2016-17) வருடத்துக்கும் உள்ள மாறுதல்கள் என்ன, பொதுவாக ஏற்படக்கூடிய தவறுகள் என்ன என்பதைப் பார்ப்போம்.
நிதி ஆண்டு (Financial Year) (2015-16, மதிப்பீட்டு ஆண்டு (Assessment Year)
2016-17-க்கான விவரங்களை பார்ப்போம்.
யாருக்கு எந்தப் படிவம்?
ஐடிஆர்
1 (சகஜ்) / ITR 1 (SAHAJ)
தனிநபர்கள் – அவர்களின் வருமானம் பின்வரும் வகையைச் சார்ந்ததாக இருந்தால், அவர்களுக்கு ஐடிஆர் 1 படிவம்.
1. பென்ஷன் / சம்பளம்.
2. வீட்டு வாடகை – முந்தைய ஆண்டைய இழப்புக்களை (carry forward loss) இந்த ஆண்டுக்கு கொண்டு வரப்படாததாக இருக்க வேண்டும். ஒரே ஒரு சொந்த வீடு மட்டும் இருக்க வேண்டும்.
3. பிற ஆதாரங்களிலிருந்து (சோர்ஸ்) வருமானம் – லாட்டரி சீட்டு, குதிரைப் பந்தய
போட்டி போன்றவைகளிலிருந்து வருமானம் இருக்கக்கூடாது.
4. விவசாய வருமானம் ரூ.5,000க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
5. எந்த இரட்டை வரி விதிப்பு நிவாரணம் (Double Taxation Relief)
(பிரிவு 90/91-ன் கீழ் கழிக்கப்பட்டு) இருக்கக் கூடாது .
ஐடிஆர்
2 / ITR 2
தனிநபர்களும், இந்துக் கூட்டு குடும்ப (HUF) அமைப்புக்களும் – வருமானம் பின்வரும் வகை சார்ந்ததாக இருந்தால், அவர்களுக்கு ஐடிஆர் 2 படிவம்.
1. சம்பளம் / பென்ஷன்
2. வீட்டு வாடகை – வீடுகள் ஒன்றுக்கும் மேற்பட்டு இருந்தால்.
3. மூலதன
ஆதாயங்கள் (Capital gains)
4. பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் – லாட்டரி சீட்டு, குதிரைப் பந்தய
போட்டி
5. தனிநபர்கள், இந்தியர்களாக கருதப்பட்டு வெளிநாட்டு சொத்துகள் இருந்தால் / வெளிநாட்டு வருமானம் வந்தால்.
ஐடிஆர்
2ஏ / ITR 2A
தனிநபர்களும், இந்துக் கூட்டு குடும்ப அமைப்புக்களும் – வருமானம் கீழே
குறிப்பிட்ட பிரிவை வகை சார்ந்ததாக இருந்தால்.
1. சம்பளம் / பென்ஷன்
2. வீட்டு வாடகை – ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து வந்தாலும்
3. பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் – லாட்டரி சீட்டு, குதிரைப் பந்தய
போட்டி சேர்த்து
4. இரட்டை வரி விதிப்பு நிவாரணம் கழிக்கப்பட்டு இருக்கக் கூடாது
5. வெளிநாட்டில் சொத்து / வெளிநாட்டு வருமானம் இருக்கக்கூடாது
|
லதா ரகுநாதன், ஆடிட்டர், எல்ஆர் அசோசியேட்ஸ், சென்னை. |
ஐடிஆர்
3 / ITR 3
தனிநபர்கள், இந்துக் கூட்டுக் குடும்ப அமைப்புகள், கூட்டாண்மை (பார்டனர்ஷிப்) நிறுவனங்களில் பங்குதராக (பார்ட்னர்) இருந்து இவர்கள் வேறு தனி உரிமை (proprietorship) நிறுவனத்திலிருந்து வருமானம் இல்லாது மற்றும் இவர்களின் வருமானம், வட்டி, கமிஷன் அல்லது ஊதியம் மற்றும் போனஸ், இப்படி ஒன்றாக இருந்தால் ஐடிஆர் 3 படிவம் பயன்படுத்த
வேண்டும்.
ஐடிஆர்
4எஸ் - சுகம் / ITR 4S -SUGAM
தனிநபர்கள், இந்துக் கூட்டு குடும்ப அமைப்புகள், கூட்டாண்மை (பார்ட்னர்ஷிப்) நிறுவனங்களாக இருக்கக்கூடாது
1. சம்பளம் / பென்ஷன்
2. வீட்டு வாடகை – இதில் முந்தைய
ஆண்டு நஷ்டம் இருக்கக் கூடாது.
3. பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் - லாட்டரி சீட்டு, குதிரைப் பந்தய போட்டி தவிர்த்து.
4. தொழில் வருமானம் – இந்த வருமானம் பிரிவு 44 ஏடி (44 AD) அல்லது பிரிவு 44 ஏஇ(44 AE)-ன் கீழ் கணக்கிடப்பட்டிருக்க வேண்டும்.
5. விவசாய வருமானம் ரூ.5,000க்கு குறைவாக இருக்க வேண்டும்.
6. பிரிவு 90/91 கீழ் நிவாரணம் கேட்கப்பட்டிருக்கக் கூடாது.
ஐடிஆர்4
/ ITR 4
இது தனி உரிமை நிபுணத்துவ வணிகம் (proprietary business
profession) நடத்துபவர்களுக்கு. வருமான வரம்பு கிடையாது.
சம்பளம், வீட்டு வாடகை, மற்ற எல்லாவித வருமானங்களும், குதிரைப் பந்தய போட்டி, லாட்டரி சீட்டு வருமானம் உட்பட, இந்தப் படிவத்தில் காட்டலாம்.
இதுவரை குறிப்பிட்டவை தனிநபர்களுக்கான படிவங்கள். இவை தவிர, ஐடிஆர் 5, 6, 7 படிவங்கள் இருக்கின்றன. அவை முற்றிலும் நிறுவனங்களுக்கானவை.
Post a Comment