ஒன்ஸ் மோர்......இந்த நாள் இனிய நாள்!
ஒருமுறை முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் தான் எழுதிய ஒரு புத்தகத்தை ஒரு மாணவியிடம் கொடுத்து, "நீ என்னவா...

அவள் சொன்னது என்ன தெரியுமா?
"I want to live in a developed country instead of a developing country.''
அப்துல் கலாமையே அதிர வைத்த அணுகுண்டு பதில் அவளுடையது! எவ்வளவு உயர்ந்த ஆசை அவளுக்கு!
பாரதி சொன்னார்: "இறைவா! ஒரு முதியவருடைய அறிவு முதிர்ச்சியை எனக்குக் கொடு! நடு வயதுக்காரனின் மனத்திட்பத்தைக் கொடு! இளைஞனுடைய உற்சாகத்தை எனக்குக் கொடு! குழந்தையின் இதயத்தைக் கொடு!'' என்று கேட்டார்.
நல்ல உள்ளம், நிறைந்த உழைப்பு, மிகுந்த பணிவு இவைதான் இளமை. இவைதான் இறைமை!
நிறையை நோக்கி நடக்கின்ற பயணத்தை நிறுத்தாதவன் எவனோ, அவனே இளைஞன். பூரணத்தை நோக்கிப் போய்க்கொண்டே இருப்பவன் எவனோ, அவனே இளைஞன்.
எப்போதும் உற்சாகமாக, துடிப்புடன், மகிழ்ச்சியுடன் எதையாவது கற்றுக்கொண்டே, தன்னைத்தானே செதுக்கிக்கொண்டே இருப்பதுதான் இளமை.
எப்போதும் துளிர் விட்டுக் கொண்டே, புதுப்பித்துக் கொண்டே, உயர்ந்துகொண்டே இருப்பதுதான் இளமை. எப்போதும் வளர்ந்துகொண்டே இருப்பதுதான் இளமை!
நிறைவு என்பது என்ன, அது முடிவைக் குறிப்பது அல்ல. ஓர் அத்தியாயத்தின் முடிவு, இன்னொரு அத்தியாயத்தின் துவக்கம்.
செடியின் நிறைவு மலர்கள்
மரத்தின் நிறைவு கனிகள்
காற்றின் நிறைவு தென்றல்
குயிலின் நிறைவு கூவல்
நகரின் நிறைவு தெருக்கள்
தடாகத்தின் நிறைவு தாமரை
கடலின் நிறைவு அலைகள்
வானின் நிறைவு நிலா
பெண்ணின் நிறைவு கற்பு
மனிதனின் நிறைவு ஒழுக்கம்
பதவியின் நிறைவு பணிவு
சிந்தனையின் நிறைவு செயல்.
கற்றுக் கொண்டது மிக மிகச் சிறியது.
கற்றுக் கொள்ள வேண்டியது மிக மிகப் பெரியது.
இந்த வேட்கை இருந்தால்தான் உங்களால் உயர முடியும். கடைசி எல்லை வரை உயர முடியும்.
அதற்குத் தேவை ஒழுக்கமும் உண்மையான உழைப்பும். பலபேர் தவறான வழிகளில் போய்ச் சம்பாதிக்கிறார்கள். சம்பாதிப்பது அல்ல நமது நோக்கம்.
இளைஞர்களே! நினைவில் கொள்ளுங்கள்... நாம் சாதிக்கப் பிறந்திருக்கிறோம். சம்பாதிப்பதற்கு மட்டும் அல்ல.
விதைகள் சிறிதுதான். ஆனால் அதில்தான் ஆயிரமாயிரம் ஆலமரங்கள் அடக்கம்.
இளைஞனே! நீ ஒரு வெள்ளைக் காகிதம்! நீ பத்திரம் எழுதப் பயன்பட வேண்டும். பாத்திரம் துடைக்க நீ பயன்பட்டு விடக் கூடாது!
ஒவ்வொருவரும் ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்ள வேண்டும். அவரவர் துறைக்கு ஏற்ப ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அதன் உச்சத்தை அடைய வேண்டும்.
உண்மை, உழைப்பு, நாணயம், நேர்மை, தூய்மை இவை இருந்தால் இன்றைக்கு அல்ல, என்றைக்காவது ஒருநாள் இமயத்தின் உச்சியை எட்டிப் பிடிப்பது நிச்சயம்.
தாமஸ் ஆல்வா எடிசனாக நாம் ஒவ்வொருவரும் மாற வேண்டும். இந்தியா இப்போது ஒளிமயமான எதிர்காலத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.
"வளரும் அறிவியல் களஞ்சியம்' என்ற நூலில்
மயில்சாமி அண்ணாதுரை,
Post a Comment