இஃப்தார் நோன்பு ஸ்பெஷல்! பெப்பர் - ஃப்ரூட் சாட் !
இ ஸ்லாமிய மாதங்களில் ஒன்றான ரம்ஜான் மாதத்தில் 30 நாள்கள் நோன்பிருப்பது கடமையாக்கப்பட்டுள்ளது. ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ஆன்மிக ஈர...

https://pettagum.blogspot.com/2017/05/blog-post_47.html
இஸ்லாமிய
மாதங்களில் ஒன்றான ரம்ஜான் மாதத்தில் 30 நாள்கள் நோன்பிருப்பது
கடமையாக்கப்பட்டுள்ளது. ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ஆன்மிக
ஈர்ப்பு... இவையே நோன்பு வைப்பதன் முக்கிய நோக்கம். சூரிய உதயத்துக்கு
முன்பாகவே (காலை 5 மணி வாக்கில்) நோன்பு தொடங்கிவிடும்.
சூரியன் அஸ்தமனமான பிறகு (மாலை 6 மணி வாக்கில்) நோன்பை முடித்துக்கொள்வது வழக்கம். நோன்பு முடிப்பதற்கு ‘இப்தார்’ என பெயர். இஃப்தாரில் உண்ணுவதற்கான சிறப்பு உணவுகளின் ரெசிப்பிகளை அளிக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஹசீனா செய்யது.
------------------------------------------------------------------------------------------------------------------------
பெப்பர் - ஃப்ரூட் சாட்
தேவையானவை:
புளிக்காத கெட்டித் தயிர் - 3 கப்
வாழைப்பழம் - ஒன்று (தோல் உரித்து, பொடியாக நறுக்கவும்)
ஆப்பிள் - ஒன்று (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்)
மாம்பழம் - ஒன்று (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்)
சர்க்கரை - தேவைக்கேற்ப
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டேபிள்ஸ்பூன்
பால் - ஒரு கப் (காய்ச்சாதது)
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன் (ஒன்றிரண்டாக பொடிக்கவும்)
நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன்
புதினா இலைகள் - 10 (பொடியாக நறுக்கவும்)
எலுமிச்சைச் சாறு - அரைக்கால் டீஸ்பூன்
கறுப்பு உப்பு (காலா நமக்) - கால் டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
செர்ரி - சிறிதளவு
செய்முறை:
தயிரைத் துணியில் போட்டு மூட்டை போல கட்டி மூன்று மணி நேரம் தொங்கவிடவும். பிறகு, தண்ணீர் வற்றிய தயிரை நன்றாக அடிக்கவும். சோள மாவுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைக்கவும், பாலைப் பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்கவிடவும். பால் நன்கு கொதிக்கும்போது சோள மாவு கரைசலைப் பாலில் சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும். நன்கு கெட்டியான பின் இறக்கி ஆறவிடவும். இதனுடன் உப்பு, மிளகு, சீரகத்தூள், சாட் மசாலாத்தூள் சேர்த்துக் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் பழத்துண்டுகள், கறுப்பு உப்பு, சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். இந்தப் பழக்கலவையுடன் பால் கலவை, தயிர் சேர்த்துக் கலக்கவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து. கொத்தமல்லித்தழை, புதினா இலைகள், செர்ரி சேர்த்து அலங்கரித்து, ஜில்லென்று பரிமாறவும்.
குறிப்பு:
திராட்சை, கொய்யா, பேரிக்காய் சேர்த்தும் செய்யலாம்.

Post a Comment