குழந்தைகளுக்கான கை வைத்தியம்!
குழந்தைகளுக்கான கை வைத்தியம் அம்மைத் தடுப்பு ஊசி போட்ட இடத்தில் புண் ஆகாமல் இருக்க, வேப் பிலையுடன், பசு மஞ்சளை சேர்த்து அரை த்துத் தடவினால்...
அம்மைத் தடுப்பு ஊசி போட்ட இடத்தில் புண் ஆகாமல் இருக்க, வேப் பிலையுடன், பசு
மஞ்சளை சேர்த்து அரை த்துத் தடவினால், விரைவில் தழும்பு ஆறி விடும்.
.
சுக்கு, சித்தரத்தை, ஜாதிக்காய், மாசிக்காய் இவற்றைப் பாலில் போட்டு வேகவிட்டு, நிழலில் உலர்த்தவும். பச்சிளம் குழந்தைக்குத் தலைக் குளிப்பாட்டும் போது பாலில் வேக வைத்த சாமான்கள், கட்டிப் பெருங்காயம், இவற்றை சந்தனக் கல்லில் ஒருமுறை இழைத்து தாய்ப்பால்
சேர்த்துப் புகட்டலாம்.
சுக்கு, பெருங்காயம் வாயுவைக் கலைக்கும். சித்தரத்தை சளி வராமல் தடுக்கும். ஜாதிக்காய் நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். மாசிக் காய் வயிறு பிரச்னை இல்லாமல் செய்யும்.
.
சளி
.
குழந்தை பிறந்து ஐந்தாவது நாள் வெற்றிலைச் சாறு, தாய்ப்பால், ஒரு கடுகு அளவு கோரோஜின் கலந்து புகட்டினால், சளி வெளியேறி விடும்.
.
கற்பூர வல்லி இலையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் கொடுத்தால், சளிகரையும்.
.
ஆறுமாதம் முடிந்த குழந்தைகளுக்கு நொச்சி இலை, நுணா இலை, ஆடா தோடா இலை இந்த மூன்றை யும் தண் ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக்
கொடுத் தால், சளி கரை யும்.
.
கண்டங்கத்திரி இலையை நீரில் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடி கட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம்.
தூதுவளை இலையை நீர் விட்டுக் கொதிக்கவைத்து, தேன் கலந்து வடிகட்டிக் கொடுத்தால், சளி கரையும்.
.
வயிறு
.
பிறந்து
மூன்று நாட்களே ஆன குழந்தைக்கு, ஒரு சொட்டு விளக்கெண்ணெயில் சிறிது
தாய்ப்பால் சேர்த்து நன்றாகக் குழைத்து, குழந்தையின் நாக்கில் தடவுங் கள்.
குழந்தையின் வயிற்றில் தங்கியிருக்கும் கறுப்பு மலம் வெளி யேறிவிடும்.
.
ஏழாம் நாள் தாய்ப்பாலுடன் ஒரு சொட்டு துளசிச்சாறு கலந்து புகட்டனால், சளிகரையும்.
.
கொய்யா இலையுடன் தண்ணீ ர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்துக் கொடுத்தால், பேதி நின்று விடும்.
.
வயிற்றுவலியால் அழும் குழந்தைக்கு நாமக் கட்டியை இழைத்து, தொப்புளில் தடவலாம்.
.
வசம்பை உப்புத் தண்ணீரில் நனைத்து, நல்லெண்ணெய் ஏற்றிய விளக்கில் சுட்டு வைத்துக்கொள்ளவும்.
குழந்தை வயிற்று வலியால் அழும் போது, சந்தனக் கல்லில் ஒரு இழை இழைத்துத் தாய்ப்பால் கலந்து ஒரு பாலாடை புகட்டலாம்.
சுட்ட வசம்பின் சாம்பலை ஒரு வெற்றிலையில் சிறிது தேன் கலந்து, குழைத்து குழந்தையின் நாக்கில் தடவினாலும் வயிற்று வலி சரியாகும்.
.
குழந்தைக்கு வயிறு மந்தமாக இருந்தால், வெற்றிலை, ஓமம், பூண்டு, உப்புக்கல் சேர்த்து
அரைத்து வடிகட்டி, சிறிது சர்க்கரை சேர் த்துப் புகட்டினால் வயிறு மந்தம்
சரியாகி விடும்.
.
வயிற்றில் பூச்சி இருந்து குழந்தை அழு தால், வேப்பங்கொழுந்து, ஓமம், உப்பு சேர்த்து சுடுநீர் விட்டு அரைத்து, வடிகட்டிக் கொடுத்தால், வயிற்றில் பூச்சி இருக்காது.
செல்லக்குழந்தையிடம் நீங்கள் காட்டும் அக்கறையான கவனிப்பே. .. ஆரோக்கியம் காத்திடும். வாழ்த்துகள்!
.
Post a Comment