பாட்டி சொல்லைத் தட்டாதே! குழந்தைக்கு உரை மருந்து !
முன்பெல்லாம் பாட்டிகள்தான் பல வீடுகளில், குழந்தைகள் நல மருத்துவர்கள், அதெல்லாம் ஒரு காலம். பிறந்ததிலிருந்து பள்ளிசெல்லும் வரைக்குமாக பா...
சுக்கு, திப்பிலி, வசம்பு, ஜாதிக்காய், கடுக்காய், மாசிக்காய், மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம் போன்றவற்றை நான்கு வாண்டுகளிடமும் காண்பித்து அதனதன் பெயர்களை சொன்னோம். அவற்றை அடுத்து அறைகளில் ஒளித்து வைத்தோம். பாக்கிலட்சும் பாட்டி. ஒவ்வொரு அட்டையாக காட்டிட, அதற்குரியதை எடுத்து வந்து அவரிடம் தர வேண்டும் என்பது தான் கேம். தேஜஸ்வினி (வயது 8) தான், அதிக எண்ணிக்கையில் எடுத்து வந்து பாட்டியிடம் காண்பித்து முதலிடம் பிடித்தாள். அது சரி, இனி பாட்டி சொல்லும் வைத்தியம்....
* குழந்தை பிறந்து முப்பது நாட்கள் ஆனவுடன், தவறாமல் குழந்தைக்கு உரை மருந்து புகட்டப்படும். உரை கல் மீது உரசித் தரப்படுவதால் அது உரைமருந்து என்றானது. ஜாதிக்காய், மாசிக்காய், கடுக்காய், வசம்பு, சுக்கு, பெருங்காயம், பூண்டு ஆகியவற்றை ஒவ்வொன்றாக உரைக் கல்லில் உரசி அதுவும் இலேசாக ஒரே உரசி உரசி தண்ணீர் தொட்டு ஒரு மாதக் குழந்தையின் வாயில் வைத்துப் புகட்ட வேண்டும். குழந்தை குடிக்கின்ற தாய்ப்பால் செரிமானத்துக்கு, இந்த உரை மருந்துதான் திறவுகோல்.
* சில நேரங்களில் குழந்தை வயிற்று வலியால் தொடர்ந்து அழும். அந்த வயிற்று வலியை உடனே நிறுத்த வசம்புதான் சிறந்த கை மருந்து. நல்லெண்ணெய் விளக்க தீபத்துல வசம்பைக் காட்ட. அதன் நுனி எரிஞ்சு தீய்ஞ்சு கருப்பாகிடும். அதை இரண்டு சொட்டுத் தண்ணீர் விட்டு உரசி குழந்தையோட வாயில் விடணும். குழந்தையின் வயிற்று வலி போயே போச்சு. இந்த இடத்துல ஒரு கண்டிஷன். குழந்தையோட வாயில வசம்பு தடவும்போது சும்மா துளியூண்டுதான் தரணும். அளவுக்கு அதிகமா வசம்பு தந்துட்டா அவ்வளவுதான் திக்குவாய் பழக்கம் தொத்திக்கும்.
*மூணு மாசத்துக்கு மேலான குழந்தைக்கு அஜீரணக்கோளாறா? சுக்கை தாய்ப்பால்ல உரசி குழந்தையோட நாக்குல இலேசா தடவி விடணும்.
* பத்து மிளகு கையில இருந்த பகையாளி வீட்லயும் விருந்து சாப்பிட்டு வரலாம்னு சொல்லுவாங்க. மிளகு அந்தளவுக்கு நச்சுக் கிருமி நாசினி. ஒரு ஸ்பூன் மிளகு ஒரு தம்ளர் தண்ணீர் வறுத்த மிளகுத்தூள் தண்ணீர் கால் பங்கு ஆகும் அளவுக்கு காய்ச்சி எடுக்கவும். ஒரு வயசுக்கு மேல இந்த மிளகு நீரை அளவுடன் குழந்தைக்கு தந்து வந்தால் நல்லது.
* சீரகத்தண்ணீர் (கொதிக்க வைத்து ஆறிப்போனது), பித்தம் போக்கும்.
* குழந்தைகளுக்கு என்றல்ல சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும், ஆசனவாய் பகுதியில் புண்கள் வந்துவிட்டால், வேறெதுவும் செய்ய வேண்டாம். கடுக்காயை தண்ணீரில் உரசி, ஆசனவாய்ப் பகுதியில் தடவி வந்தால், புண்கள் குணமாகும்.
* அஜீரணத்தின் போது குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் நாக்கில் வெண்மை படர்ந்திருக்கும். மாசிக்காயைத் தண்ணீரில் ஊற வைத்து, நாக்கில் உரசி வந்தால் போதும். அந்த வெண்மை மாறிவிடும்.
* கசகசாவைப் பொன் முறுவலாக வறுத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து மிக்சியில் போட்டு அறைச்சு குழந்தைகளுக்கு கால் பங்கு புகட்டினால், வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.
மேற்கண்ட பாட்டி வைத்திய முறைகளை நமக்கு டிப்ஸ் ஆகச் சொல்லி உதவியவர் துறையூர் சித்த வைத்தியர் எஸ். விஜயலட்சுமி.
Post a Comment