மேஜர் ஆனதும்... மறக்காமல் செய்யுங்கள்!
மேஜர் ஆனதும் ... மறக்காமல் செய்யுங்கள் ! வாக்காளர் அடையாள அட்டை ! புதிதாக வாக்காளர் அடை யாள அட்டை பெற , மாவட்ட தால...
https://pettagum.blogspot.com/2015/10/blog-post_61.html
மேஜர்
ஆனதும்... மறக்காமல் செய்யுங்கள்!
வாக்காளர்
அடையாள அட்டை!
புதிதாக
வாக்காளர் அடை யாள அட்டை
பெற, மாவட்ட தாலுகா அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங் களில் படிவம் - 6 எனும் விண்ணப்பம் பெற வேண்டும் (தேர்தல்
ஆணையத்தின் இணையதளத்தில் ஆன் லைன் மூலமாகவும்
விண்ணப் பிக்கலாம்). விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் அந்த
ஊரில் இருப்பவராக இருக்க வேண்டும். நிரந்தர முகவரிக்கான ஆதாரம் (குடும்ப அட்டை, பாஸ் போர்ட், ஓட்டுநர்
உரிமம், வீட்டு வரி ரசீது, மின்சாரக்
கட்டண அட்டை, காஸ் வாங்கும் ரசீது,
தண்ணீர் கட்டண ரசீது, சமீபத்திய டெலிபோன் பில், வங்கி மற்றும் அஞ்சலகக் கணக்குப் புத்தகம் இவற்றில் ஏதாவது ஒன்றின் நகல்), வயதுச் சான்றிதழ் (பிறப்புச் சான்று/பள்ளி மதிப்பெண் பட்டியல் நகல்) இணைக்க வேண்டும்.
ஓட்டுநர்
உரிமம்!
கியர்
உள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் இலகு ரக வாகனத்துக்கான
ஓட்டுநர் உரிமம், 18 வயது நிரம்பியதும் பெறலாம்.
முன்னதாக, எல்.எல்.ஆர்
எனும் பழகுநர் உரிமம் (LLR - Learner’s
License Registration) பெற
வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் மருத்துவச் சான்று, உடல் தகுதிச் சான்று
(தேவை இருப்பின்), மற்றும் முகவரிக்கு ஆதாரச் சான்று (பிறப்புச் சான்று, பள்ளிச் சான்று, பாஸ்போர்ட் இவற்றில் எதாவது ஒன்றின் நகல்), பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மூன்றும்
இணைத்து, அடிப்படைக் கட்டணத்துடன் வட் டார போக்குவரத்து
அலுவலரிடம் சமர்ப்பிக்க, அன்றே எல்.எல்.ஆர்
கிடைக்கும். அதிலிருந்து 30 நாட்கள் கழித்தே ஓட்டுநர் உரிமம் பெற முடியும்.
ஒட்டுநர்
உரிமத்துக்கான விண்ணப்பப் படிவத்துடன், உங்கள் வாகனத்தின் ஆர்.சி.புக்,
இன்ஷூரன்ஸ் சான்று, சாலைவரிச் சான்று, மாசுக்கட்டுப்பாடு சான்று, சொந்த வாகனம் இல்லையென்றால் வாகன உரிமையாளரின் அனுமதிச்
சான்று மற்றும் மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கட்டணம்
250 ரூபாய், சேவைக்கட்டணம் 100 ரூபாய் சேர்த்து வட்டார போக்குவரத்து அலுவலரிடம் சமர்ப்பித்து, ஓட்டுநர் உரிமம் பெறலாம்.’’
நிரந்தர
கணக்கு அட்டை
(PAN - Permanent Account Number)
வங்கி
கணக்குத் துவங்குவதற்கு, பங்குச் சந்தையில் முதலீடு செய்ய, ரூபாய் 5 லட்சத்துக்கு மேல் அசையா சொத்துக்கள்
வாங்கும்போது, 50,000 ரூபாய்க்கு மேல் வங்கியில் ஃபிக்ஸட்
டெபாசிட் செய்யும்போது, வருமான வரி ரிட்டர்ன் தாக்கல்
செய்யும்போது என எல்லாவற்றுக்கும் பான்
கார்டு அவசியம். இதைப் பெற வருமான வரித்துறையின்
படிவம்-49ஏ பூர்த்தி செய்து,
அத்துடன் வயதுச் சான்று மற்றும் முகவரிச் சான்றையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இது குழந்தைகளுக்கும் வழங்கப்படும்.
இதற்கு காப்பாளர் அவசியம். மேஜர் ஆனதும், இதே எண் தொடரும்.
பேங்க்
அக்கவுன்ட்
புதிதாக
கணக்குத் துவங்க, சம்பந்தப்பட்ட வங்கியிலிருந்து பெறப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், அடையாளச்
சான்று நகல் (பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், அங்கீகரிக்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை இதில் ஏதாவது ஒன்று), முகவரிச் சான்று நகல் (மின் கட்டண ரசீது,
தொலைபேசி ரசீது, குடும்ப அட்டை), தமது அக்கவுன்ட்டில் செலுத்த
வேண்டிய குறைந்தபட்ச தொகை (வங்கிக்கு வங்கி மாறுபடும்). வங்கியிலிருந்து உங்கள் புகைப்படம் மற்றும் பெயருடன் கூடிய பாஸ்புத்தகம், ஏ.டி.எம்
மற்றும் டெபிட் கார்டு இரண்டு வாரத்துக்குள் கிடைக்கும். குழந்தைகளுக்கும் வங்கிக் கணக்கு துவங்க முடியும். இதற்கும் காப்பாளர் அவசியம். இந்தக் கணக்கையே மேஜர் ஆனதும், தொடரலாம்.
Post a Comment