என்ஆர்ஐ-களுக்கான வரிகள் தொடர்பான கேள்வி-பதில் II (விரிவாகப் படிக்க)
1. சிங்கப்பூரில் வேலை நிமித்தமாக வசிக்கும் நான் தமிழ்நாட்டில் வீடு வாங்க விரும்புகிறேன். திரும்பக் கட்டும் கடனில் எனக்கு வருமான வ...

வாங்கும் வீட்டை வாடகைக்கு விட போகிறீர்களா, அல்லது சொந்தமாக உபயோகப்படுத்த போகிறீர்களா என்பதை பொருத்து பதில் மாறுபடும். சொந்தமாக உபயோகப்படுத்துகிறீர்கள் என்றால் நீங்கள் வாங்கும் கடனுக்கான செலுத்த வேண்டிய வட்டியினை ரூ. 2,00,000 வரை பிரிவு 24ன் படியும், அசலினை ரூ. 1,50,000 வரை பிரிவு 80C ன் படியும் ஆண்டு வருமானத்திலிருந்து நீக்கி வரிச் சலுகை பெற முடியும். இதுவே வாடகைக்கு விட போகிறீர்கள் என்றால் நீங்க்ள் செலுத்திய முழு வட்டிக்கு வரிச் சலுகை கிடைக்கும்.
2 வருமான வரி விஷயத்தில் இந்தியர்களுக்கும் என்ஆர்ஐகளுக்கும் என்ன வித்தியாசங்கள் உள்ளன?
இந்தியா வாழ் வரிதாரர்களுக்கு உலகில் எங்கு இருந்து வருமானம் வந்தாலும் அதற்கான வரியை இந்தியாவில் செலுத்த வேண்டும். ஆனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு இந்தியாவில் இருந்து வரும் வருமானத்திற்கு மட்டும் வரி செலுத்தினால் போதும்.
3.வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கு அனுப்பும் பணத்துக்கு சேவை வரி ஏதுவும் கட்ட வேண்டுமா?
வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கு அனுப்பும் பணத்துக்கு சேவை வரி ஏதுவும் கட்ட வேண்டியதில்லை.
4. வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கு அனுப்பும் பணத்துக்கு சேவை வரி ஏதுவும் கட்ட வேண்டுமா?
வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கு அனுப்பும் பணத்துக்கு சேவை வரி ஏதுவும் கட்ட வேண்டியதில்லை.
5 நான் கடந்த 10 ஆண்டுகளாக துபாயில் வேலை செய்து வருகிறேன். என் பெயரில் சில சொத்துகளை துபாயிலேயே வாங்கி இருக்கிறேன். அடுத்து 3 வருடங்களில் நான் வேலையிலிருந்து ஓய்வு பெற இருக்கிறேன். இந்த சொத்துகளை விற்றுவிட்டு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வர வரி ஏதாவது கட்ட வேண்டுமா?
நீங்கள் துபாயில் சம்பாதித்த பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வரும்பட்சத்தில் இந்தியாவிl வரி ஏதும் கட்டத் தேவையில்லை.
6. நான் கடந்த பல வருடங்களாக பல நாடுகளில் கூலி வேலை செய்து வருகிறேன் தற்போது 6 வருடங்களாக மலேசியாவில் ஒரு நல்ல வேலை பார்த்து வருகிறேன்.என் செலவுகள் போக இந்திய மதிப்பில் ரூ. 40 லட்சம் சேர்த்து வைத்திருக்கிறேன். வழக்கமாக மணி கிராம் மூலம் மூலம் அனுப்புவது 2 சதவிகிதம் தொகை கட்டணமாக வசூலிக்கப்படும். என் 40 லட்சத்தை தொகையை என் குடும்பத்திற்கு மணி கிராம் மூலமாக இல்லாமல் வேறு எப்படி அனுப்புவது?. நான் அதிக பணத்தை கட்டணம் இல்லாமலும் பாதுகாப்பாகவும் செய்ய ஒரு வழி சொல்லுங்கள்? இதற்கு வருமான வரி கட்ட வேண்டி வருமா?
நீங்கள் வங்கிகள் மூலம் பணம் அனுப்பினால் அதிக கட்டணம் இல்லாமல் செலுத்த முடியம். வெளிநாட்டிலிருத்து சம்பாதித்து இந்தியாவிற்க்கு பணம் கொண்டுவரும்பட்சத்தில் அந்த பணத்திற்கு இந்தியாவில் வரி கட்ட வேண்டியதில்லை. ஆனால், அந்த பணத்தின் மூலம் இந்தியாவில் சம்பாதிக்கும் பணத்திற்கு அதற்கு அடுத்த ஆண்டுகளில் வருமான வரி வரம்பை பொருத்து வரிக் கட்ட வேண்டும்.
7 .என் வயது 30. நான் தற்போது அமெரிக்காவில் ஒரு புகழ்பெற்ற பல்கலைகழகத்தில் கல்வி உதவித் தொகையுடன் முதுகலை படிப்பு படித்து வருகிறேன். என் குடும்பம் தமிழ் நாட்டிலும், என் தந்தை வேலை காரணமாக குவைத்திலும் இருக்கிறார். இப்போது நான் பார்ட்டைமாக சம்பாதித்த பணம் 20,000 டாலர் (ஆதாரம் இருக்கிறது). இந்தத் தொகைக்கு எப்படி வரி கட்ட வேண்டும்?
நீங்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் அமெரிக்காவில் சம்பாதித்த பணத்திற்கு இந்தியாவில் வரி ஏதும் கட்ட தேவையில்லை.
8. என்ஆர்ஐ ஆன என்னிடம் ரூ.3 லட்சம் இருக்கிறது. இதனை இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகிறேன். கிடைக்கும் வருமானத்துக்கு வரி எதுவும் செலுத்தாத திட்டம் ஏதும் இருக்கிறதா?
இந்திய வாழ் வரிதாரர்களுக்கான வரிச் சட்டம் இந்தியாவில் பெறும் அனைத்து வருமானத்திற்கும் உங்களுக்கும் பொருந்தும். என்ஆர்ஐ இந்தியாவில் பெறப்படும் வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால், வரிச் சலுகை பெற்ற மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளிட்டவைகளில் முதலீடு செய்து (குறிப்பிட்ட காலம் அதனை உங்களிடம் வைத்திருக்கும்பட்சத்தில்) அதிலிருந்து வரும் ஈவுத் தொகைக்கு (dividend) வருமான வரி ஏதுவும் செலுத்த வேண்டியதில்லை. மேலும், உங்களது மொத்த இந்திய வருமானம், வருமான வரி அடிப்படை வரம்புக்கு உட்பட்டு இருந்தால் வரி ஏதும் செலுத்த தேவையில்லை.
9.நான் அபுதாபியில் பணி புரிகிறேன். அபுதாபியில் வருடத்திற்கு 195 நாட்களும், மீதமுள்ள நாட்கள் இந்தியாவிலும் வசித்து வருகிறேன். எனக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர் சலுகைகள் கிடைக்குமா?
நீங்கள் கூறிய கணக்குப்படி இந்தியாவில் ஆண்டிற்கு 183 நாட்களுக்குக் குறைவாக இருந்து வருகிறீர்கள். இந்நிலையில் வருமான வரி சட்டப்பிரிவு 6இன் கீழ் நீங்கள் வெளிநாட்டு வாழ் இந்தியராகக் கருதப்படுவீர்கள். இதன் மூலம் வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்திற்கு இந்தியாவில் வரி ஏதும் செலுத்த வேண்டியதில்லை. மேலும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்கைத் துவக்கி அதிலிருந்து வரும் வட்டிக்கும் வரி ஏதும் செலுத்தாத சலுகையையும் பெறுவீர்கள்.
10. வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இரட்டை வரி ஒப்பந்தம் என்பது என்ன?
எந்த நாட்டிலும் ஒரு வரிதாரர், ஒரே வருமானத்திற்கு இரண்டு நாடுகளில் வரி செலுத்துவது என்பதை தவிர்க்க இருநாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம்தான் இரட்டை வரி ஒப்பந்தம் (Double taxation avoidance agreement).
உதாரணமாக, ஒருவர் இந்தியாவில் 183 நாட்களுக்கு மேல் இருந்தால் உலகில் எங்கிருந்து வருமானம் பெற்றாலும் அதற்கான வரியைச் செலுத்த வேண்டும். அவர் நான்கு மாதம் அமெரிக்காவில் சம்பளம் பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம், அந்த வருமானமும் இந்தியாவில் வரிதாக்கல் செய்யப்படும்போது சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். ஆனால் அந்த நான்கு மாத வருமானத்திற்கான வரிப் பிடித்தம் அங்கே செய்யப்பட்டிருந்தால், இந்தியாவில் மொத்த வருமானத்திற்கான வரியில் அமெரிக்காவில் பிடித்த வரி போக மீதமுள்ள வரியைக் கட்டினால் போதுமானது. இது போன்ற நிகழ்வுகளுக்கான வரி ஒப்பந்தம்தான் இரட்டை வரி ஒப்பந்தம்.
இது நாட்டிற்கு நாடு வேறுபடும். இது குறித்த விவரமான ஒப்பந்தம்தான் இரட்டை வரி ஒப்பந்தம் எனப்படுகிறது.
11.ஒருவர் வெளிநாட்டு வாழ் இந்தியர் (என் ஆர் ஐ) என்பது எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது?
ஒருவர் இந்தியாவை விட்டு வெளியே சென்ற மறு நிமிடமே ஒருவர் வெளிநாடு வாழ் இந்தியராக கருதப்பட மாட்டார். வருமான வரி சட்டம் மற்றும் FEMA இந்தியாவை விட்டு செல்லும் ஒரு நபரின் குடியிருப்பு அந்தஸ்தை இரு வேறு முறையில் விவரித்துள்ளன.
வருமான வரி சட்டத்தில் வெளிநாட்டு வரிதாரர் என்ற அந்தஸ்த்து ஒருவர் இந்தியாவில் தங்கிய நாட்களை வைத்து கணக்கிடப்படுகிறது.
அதன்படி முந்தைய நிதி ஆண்டில்,
1) 182 க்கும் குறைவான நாட்கள். (அல்லது)
2) முந்தைய நிதி ஆண்டில் 60 நாட்கள் (மற்றும்) முந்தைய நான்கு நிதி ஆண்டுகளில் 365க்கும் குறைவான நாட்கள்
இந்தியாவில் தங்கியிருந்தால், அவர் வெளிநாட்டு வரிதாரர் என்ற அந்தஸ்த்தை பெறுவார்.
12. NRO கணக்கு, NRE கணக்கு, FCNR கணக்கு வேறுபாடு என்ன?
வெளிநாடு செல்லும் ஒருவர் ரிசர்வ் வங்கி அனுமதி எதுவும் இல்லாமல் வைத்துக் கொள்ள முடிந்த மூன்று பொதுவான கணக்கு வகைகள் இவை.
• FCNR
• குடியாளர் அல்லாத சாதாரண ரூபாய் கணக்கு (NRO கணக்கு)
• குடியாளர் அல்லாத (வெளிப்புற) ரூபாய் கணக்கு (NRE கணக்கு)
FCNR கணக்குகளை 1 ஆண்டு முதல் 5 ஆண்டு வரையான நிரந்தர வைப்பு நிதியாக மட்டுமே துவங்க முடியும். வெளிநாட்டிலிருந்து வங்கிகள் மூலமாக அனுப்பும் அந்நிய செலாவணியிலேயே இக்கணக்கை வைத்துக் கொள்ளலாம். FCNR கணக்குகளிலிருந்து வரும் வட்டி வருமான வரிக்கு உட்படுத்தப்படாது.
இங்கிருந்து வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லவும் எந்த தடையும் இல்லை. FCNR வைப்புக்கள் உள்ளூர் வைப்புகளை விட உங்கள் வெளிநாட்டு நாணயத்திலிருந்து அதிக வருமானத்தை சம்பாதிக்க சிறந்த வழியாக உள்ளது. சில வங்கிகள் வைப்புகளின் மேல் 85% வரை கடன் அளிக்க தயாராக உள்ளன.
NRO கணக்கு
வேலை அல்லது இந்தியாவுக்கு வெளியே ஒரு தொழில் நிறுவுவதற்காக இந்தியாவை விட்டு செல்பவர் மட்டுமே திறக்க முடியும் என்ற ஒரே வேறுபாட்டைத் தவிர ஒரு சாதாரண வங்கி கணக்கு போன்றே NRO கணக்கு செயல்படும். இந்த கணக்குகளை , வெளிநாட்டு ரூபாய் கணக்குகளிலிருந்து பணம் அனுப்பி திறக்க முடியும். இக்கணக்கு ரூபாயில் வகுக்கப்பட்டடிருக்கும்.
இந்தியாவில் NRO கணக்கில் அனுமதிக்கப்பட்ட வைப்புகள்:
• NRE கணக்குகளில் இருந்து அனுப்பப்படும் பணம்.
• இந்தியாவுக்கு வெளியே பெறப்படும் வருமானம்.
• தற்காலிக வருகையின் போது கணக்கில் செலுத்தப்படும் பணம்.
• வாடகை , ஈவுத்தொகை , ஓய்வூதியம், வட்டி போன்ற உள்ளூர் வருமானம்
• சொத்துக்களை விற்று வாங்கிய தொகை
NRO கணக்கில் அனுமதிக்கப்பட்ட எடுப்புகள்:
• உள்ளூர் செலவுகள்
• NRE கணக்குகளில் செலுத்துவதற்காக பணம் எடுத்தல்.
NRE கணக்கு
NRE கணக்கும் கிட்டத்தட்ட NRO கணக்கைப் போலவே செயல்படும். ஒரு சில மாற்றங்கள் மட்டும் இருக்கும். அவற்றை கீழே காண்போம்.
1. கூட்டுக் கணக்குகள்: இரண்டு அயல்நாடு வாழ் இந்தியர்கள் சொந்தமாக ஒரு கூட்டு கணக்கை NRE அல்லது NRO கணக்கில் இயக்க முடியும். இந்தியாவில் உள்ள நெருங்கிய உறவினர்களோடு சேர்ந்து NRO கணக்கைத் துவங்கலாம். ஆனால் NRE கணக்கில் கூட்டு உரிமையாளராக ஒரு குடியாளரை சேர்க்க முடியாது.
2. வரிச் சலுகை: NRE கணக்கிலிருந்து ஈட்டிய வட்டி இந்தியாவில் வரிக்கு உட்பட்டது இல்லை. ஆனால் NRO கணக்கில் வரும் வட்டிக்கு 30% வரியை கழித்துவிட்டு பாக்கியை மட்டுமே அளிப்பர்.
3. வெளிநாட்டிற்கு பணத்தை திரும்ப அனுப்புதல்: NRE கணக்குகளில் (அசல் மற்றும் வட்டி) இருந்து வெளிநாட்டிற்கு எந்த தடையும் இன்றி பணத்தை திரும்ப அனுப்பலாம். NRO கணக்கில் இருந்து அனுமதி பெற்ற பின் தான் பணம் அனுப்ப முடியும். ஒரு வருடத்தில் 1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகராக மட்டுமே வெளிநாட்டிற்கு பணம் அனுப்ப முடியும். அதற்கும், பட்டயக் கணக்காளரிடமிருந்து வருமான வரி செலுத்திவிட்டதற்கான சான்றிதழ் பெற வேண்டும்.
4. கடன் பெருதல் : NRO மற்றும் NRE வைப்புகளுக்கு எதிராக ரூபாய் கடன் பெறலாம். ஆனால் அந்நிய செலாவணியில் கடன் பெற NRE வைப்புகள் மட்டுமே உதவும்.
5. உள்நாட்டு வருமானத்தை செலுத்துதல் : NRE கணக்கில், உள்நாட்டு வருமானத்தை நேரடியாக செலுத்த முடியாது.
6. வட்டி விகிதம் : NRO மற்றும் NRE வைப்புகளுக்கு, சாதாரண வைப்புகளுக்கு தரும் வட்டியை விட, வட்டி விகிதம் அதிமாகதான் உள்ளது. வட்டி வழங்குவதில் வங்கிகளுக்கு எந்த வரம்பும் அளிக்கப்படுவதில்லை.
குடும்பத்தின் நிதி தேவைகளைப் பொறுத்து எந்த கணக்கை பராமரிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தியாவில் அவசர தேவைகள் இருந்தால், NRO கணக்கிலும், எளிதாக வெளிநாட்டிற்கு பணம் அனுப்ப NRE கணக்கிலும், வட்டி சம்பாதிக்க ஒரு வைப்பு வைத்துகொள்வதாக இருந்தால் FCNR கணக்கிலும் பணத்தை முதலீடு செய்வது பொருத்தமாக இருக்கும்.
Post a Comment