என்ஆர்ஐ-களுக்கான வரிகள் தொடர்பான கேள்வி-பதில்! -I
என்ஆர்ஐ-களுக்கான வரிகள் தொடர்பான கேள்விகளுக்கு ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் அளித்த பதில்கள்... சிங்கப்பூரில் வேலை நிமித்தமாக வசிக்கும் நான்...

https://pettagum.blogspot.com/2015/09/blog-post_11.html
என்ஆர்ஐ-களுக்கான வரிகள் தொடர்பான
கேள்விகளுக்கு ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் அளித்த பதில்கள்...
சிங்கப்பூரில் வேலை நிமித்தமாக வசிக்கும் நான் தமிழ்நாட்டில் வீடு வாங்க விரும்புகிறேன். திரும்பக் கட்டும் கடனில் எனக்கு வருமான வரிச் சலுகை கிடைக்குமா?
‘‘வாங்கும் வீட்டை வாடகைக்குவிடப் போகிறீர்களா அல்லது சொந்தமாக உபயோகப்படுத்த போகிறீர்களா என்பதைப் பொறுத்து உங்கள் கேள்விக்கான பதில் மாறுபடும். சொந்தமாக உபயோகப்படுத்துகிறீர்கள் என்றால் நீங்கள் வாங்கும் கடனுக்காகச் செலுத்தவேண்டிய வட்டியினை ரூ.2,00,000 வரை பிரிவு 24-ன்படியும், அசலினை ரூ.1,50,000 வரை பிரிவு 80C-ன் படியும் ஆண்டு வருமானத்திலிருந்து நீக்கி வரிச் சலுகை பெற முடியும். இதுவே வாடகைக்குவிடப் போகிறீர்கள் என்றால் நீங்கள் செலுத்திய முழு வட்டிக்கு வரிச் சலுகை கிடைக்கும்.’’
நான் கடந்த ஆறு வருடங்களாக மலேசியாவில் வேலை பார்த்து வருகிறேன். என் செலவுகள் போக இந்திய மதிப்பில் ரூ.40 லட்சம் சேர்த்து வைத்திருக்கிறேன். வழக்கமாக மணிகிராம் மூலம் அனுப்பும்போது 2% தொகை கட்டணமாக வசூலிக்கப்படும். என் 40 லட்சம் தொகையை என் குடும்பத்துக்கு மணிகிராம் மூலமாக இல்லாமல் வேறு எப்படி அனுப்புவது? இதற்கு வருமான வரி கட்ட வேண்டி வருமா?
‘‘நீங்கள் வங்கிகள் மூலம் பணம் அனுப்பினால் அதிகக் கட்டணம் இல்லாமல் செலுத்த முடியம். வெளிநாட்டிலிருத்து சம்பாதித்து இந்தியாவுக்கு பணம் கொண்டுவரும்பட்சத்தில் அந்தப் பணத்துக்கு இந்தியாவில் வரி கட்ட வேண்டியதில்லை. ஆனால், அந்தப் பணத்தின் மூலம் இந்தியாவில் சம்பாதிக்கும் பணத்துக்கு அதற்கு அடுத்த ஆண்டுகளில் வருமான வரி வரம்பை பொறுத்து வரி கட்ட வேண்டும்.’’
என்ஆர்ஐ-ஆன என்னிடம் ரூ.3 லட்சம் இருக்கிறது. இதனை இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகிறேன். கிடைக்கும் வருமானத்துக்கு வரி எதுவும் செலுத்த வேண்டுமா?
‘‘இந்திய வாழ் வரிதாரர்களுக்கான வரிச் சட்டம் இந்தியாவில் பெறும் அனைத்து வருமானத்துக்கும் உங்களுக்கும் பொருந்தும். என்ஆர்ஐ என்பவர் இந்தியாவில் பெறப்படும் வருமானத்துக்கு வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால், வரிச் சலுகை பெற்ற மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளிட்டவைகளில் முதலீடு செய்து (குறிப்பிட்ட காலம் அதனை உங்களிடம் வைத்திருக்கும்பட்சத்தில்) அதிலிருந்து வரும் ஈவுத் தொகைக்கு (dividend) வருமான வரி எதுவும் செலுத்த வேண்டியதில்லை. மேலும், உங்களது மொத்த இந்திய வருமானம், வருமான வரி அடிப்படை வரம்புக்கு உட்பட்டு இருந்தால் வரி ஏதும் செலுத்த தேவையில்லை.’’
ஒருவர் வெளிநாட்டு வாழ் இந்தியர் (என்ஆர்ஐ) என்பது எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது?
‘‘ஒருவர் இந்தியாவை விட்டு வெளியே சென்ற மறுநிமிடமே ஒருவர் வெளிநாட்டு வாழ் இந்தியராகக் கருதப்பட மாட்டார். வருமான வரிச் சட்டம் மற்றும் FEMA இந்தியாவை விட்டுச் செல்லும் ஒரு நபரின் குடியிருப்பு அந்தஸ்தை இருவேறு முறையில் விவரித்துள்ளன. வருமான வரிச் சட்டத்தில் வெளிநாட்டு வரிதாரர் என்ற அந்தஸ்து ஒருவர் இந்தியாவில் தங்கிய நாட்களை வைத்துக் கணக்கிடப்படுகிறது. அதன்படி முந்தைய நிதி ஆண்டில்,
1) 182-க்கும் குறைவான நாட்கள் (அல்லது)
2) முந்தைய நிதி ஆண்டில் 60 நாட்கள் (மற்றும்) முந்தைய நான்கு நிதி ஆண்டுகளில் 365-க்கும் குறைவான நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்தால், அவர் வெளிநாட்டு வரிதாரர் என்ற அந்தஸ்தை பெறுவார்.
என்.ஆர்.ஓ.(NRO), என்.ஆர்.இ.(NRE), எஃப்.சி.என்.ஆர்.(FCNR) கணக்குகளுக்கிடையே என்ன வேறுபாடு?
NRO கணக்கு:
வேலை அல்லது ஒரு தொழில் செய்வதற்காக இந்தியாவை விட்டுச் செல்பவர் மட்டுமே என்.ஆர்.ஓ. கணக்கைத் திறக்க முடியும். சாதாரண வங்கிக் கணக்கு போன்றே என்.ஆர்.ஓ. கணக்கும் செயல்படும். இந்தக் கணக்குகளை, வெளிநாட்டு கணக்குகளிலிருந்து பணம் அனுப்பி தொடங்க முடியும். இந்தக் கணக்கு ரூபாயில் வகுக்கப்பட்டிருக்கும். இந்தியாவில் என்.ஆர்.ஓ. கணக்கில் அனுமதிக்கப்பட்ட வைப்புகள் வருமாறு:
என்.ஆர்.இ. கணக்குகளில் இருந்து அனுப்பப்படும் பணம். இந்தியாவுக்கு வெளியே பெறப்படும் வருமானம். தற்காலிக வருகையின்போது கணக்கில் செலுத்தப்படும் பணம்.
வாடகை, ஈவுத்தொகை, ஓய்வூதியம், வட்டி போன்ற உள்ளூர் வருமானம் சொத்துக்களை விற்று வாங்கிய தொகை.
என்.ஆர்.ஓ. கணக்கில் அனுமதிக்கப்பட்ட எடுப்புகள்: உள்ளூர் செலவுகள்
என்.ஆர்.இ. கணக்குகளில் செலுத்துவதற்காகப் பணம் எடுத்தல்.
NRE கணக்கு!
இதுவும் என்.ஆர்.ஓ. கணக்கைப் போலவே செயல்படும். ஆனால், ஒரு சில மாற்றங்கள் உண்டு. அவற்றைக் கீழே காண்போம்.
1. கூட்டுக் கணக்குகள்: இரண்டு அயல்நாடு வாழ் இந்தியர்கள் சொந்தமாக ஒரு கூட்டுக் கணக்கை என்.ஆர்.இ. அல்லது என்.ஆர்.ஓ. கணக்கில் இயக்க முடியும். இந்தியாவில் உள்ள நெருங்கிய உறவினர்களோடு சேர்ந்து என்.ஆர்.ஒ. கணக்கைத் துவங்கலாம். ஆனால், என்.ஆர்.இ. கணக்கில் கூட்டு உரிமையாளராக ஒரு குடியாளரை சேர்க்க முடியாது.
2. வரிச் சலுகை: என்.ஆர்.இ. கணக்கிலிருந்து ஈட்டிய வட்டி இந்தியாவில் வரிக்கு உட்பட்டது இல்லை. ஆனால், என்.ஆர்.ஓ. கணக்கில் வரும் வட்டிக்கு 30 சதவிகித வரியை கழித்துவிட்டு பாக்கியை மட்டுமே அளிப்பர்.
3. வெளிநாட்டுக்குப் பணத்தைத் திரும்ப அனுப்புதல்: என்.ஆர்.இ. கணக்குகளில் (அசல் மற்றும் வட்டி) இருந்து வெளிநாட்டுக்கு எந்தத் தடையுமின்றிப் பணத்தைத் திரும்ப அனுப்பலாம். என்.ஆர்.ஓ. கணக்கில் இருந்து அனுமதி பெற்றபின்தான் பணம் அனுப்ப முடியும். ஒரு வருடத்தில் 1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகராக மட்டுமே வெளிநாட்டுக்குப் பணம் அனுப்ப முடியும். அதற்கும் ஆடிட்டரிடமிருந்து வருமான வரி செலுத்திவிட்டதற்கான சான்றிதழ் பெற வேண்டும்.
4. கடன் பெறுதல்: என்.ஆர்.ஓ மற்றும் என்.ஆர்.இ. வைப்புகளுக்கு எதிராக ரூபாய் கடன் பெறலாம். ஆனால், அந்நிய செலாவணியில் கடன் பெற என்.ஆர்.இ. வைப்புகள் மட்டுமே உதவும்.
5. உள்நாட்டு வருமானத்தைச் செலுத்துதல்: என்.ஆர்.இ. கணக்கில், உள்நாட்டு வருமானத்தை நேரடியாகச் செலுத்த முடியாது.
6. வட்டி விகிதம் : என்.ஆர்.ஓ. மற்றும் என்.ஆர்.இ வைப்புகளுக்கு, சாதாரண வைப்புகளுக்குத் தரும் வட்டியைவிட, வட்டி விகிதம் அதிகமாகவே உள்ளது. வட்டி வழங்குவதில் வங்கிகளுக்கு எந்த வரம்பும் அளிக்கப்படுவதில்லை.
குடும்பத்தின் நிதி தேவைகளைப் பொறுத்து எந்தக் கணக்கை பராமரிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தியாவில் அவசர தேவைகள் இருந்தால், என்.ஆர்.ஓ. கணக்கிலும், எளிதாக வெளிநாட்டுக்குப் பணம் அனுப்ப என்.ஆர்.இ. கணக்கிலும், வட்டி சம்பாதிக்க ஒரு வைப்பு வைத்துகொள்வதாக இருந்தால் எஃப்.சி.என்.ஆர். கணக்கிலும் பணத்தை முதலீடு செய்வது பொருத்தமாக இருக்கும்.

Post a Comment