ரத்த விருத்திக்கு திராட்சைப் பழரசம்!
‘மூலிகை மூதாட்டி’ கல்யாணி சுவாமி ரத்த ...

‘மூலிகை மூதாட்டி’ கல்யாணி சுவாமி
என்னதான் பார்த்துப் பார்த்து வாங்கினாலும் சிலசமயம் திராட்சை புளிப்பா அமைஞ்சுடும். அதை வேஸ்ட் பண்ணாம ரசம் வெச்சு சாப்பிட லாமே!
அதை எப்படி பண்றதுனு சொல்றேன்.. முதல்ல அரை டம்ளர் துவரம்பருப்பை குழைய வேகவிட்டு, நிறைய தண்ணி விட்டு விளாவி வச்சுக்குங்க.
அடுத்ததா, முற்றிய புளிப்பு திராட்சையா ஒரு கப் எடுங்க. இதுல ரெண்டு கப் அளவுக்கு சுடுதண்ணி ஊத்தி, நல்லா கசக்கி, சாறை மட்டும் எடுத்துக்குங்க. இதுல அஞ்சு பச்சை மிளகாயைக் கீறிப் போடுங்க. சின்னதா மூணு தக்காளியை பொடியா நறுக்கிப் போடுங்க. அரை டீஸ்பூன் மஞ்சள்பொடி, தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடுங்க. விரும்பினா அரை டீஸ்பூன் ரசப்பொடி சேர்த்துக்கலாம்.
இது கொதிச்சு வந்ததும் தாராளமா பெருங் காயத்தூள் தூவி, பருப்பையும் தண்ணியோட சேர்க்கணும். ரசம் நுரைச்சு வர்றப்போ (கொதிக்க விடக்கூடாது) இறக்கி, கைப்பிடி பச்சை கொத்துமல்லியை பொடியா நறுக்கி, ரசத்துல சேருங்க. ஒரு டீஸ்பூன் நெய்யில ஒரு டீஸ்பூன் கடுகு, ரெண்டு சிவப்பு மிளகாய் தாளிச்சு கொட்டினா ரசம் எட்டூருக்கு வாசனை தூக்கும். கமகமனு மணக்கறதோட ரொம்ப சுவையாவும் இருக்கும் இந்த திராட்சைப் பழ ரசம்.
பழம் சாப்பிட படுத்தற குழந்தைகளுக்கு இப்படி பண்ணிக் கொடுக்கலாம். இதை சாதத்துல ஊத்தியும் சாப்பிடலாம்.. வெறுமனே ஒரு கப்புல ஊத்தி சூப் மாதிரியும் குடிக்கலாம்.
Post a Comment