சமையல்....டிப்ஸ்... டிப்ஸ்...!
டிப்ஸ்... டிப்ஸ்... க த்திரிக்காய், வாழைக்காய் போன்ற காய்கள் நறுக்கியதுமே கறுத்துவிடும். இதைத் தவிர்க்க, தண்ணீரில் ஒரு கரண்டி பாலை ஊ...
https://pettagum.blogspot.com/2015/02/blog-post_44.html
டிப்ஸ்... டிப்ஸ்...
==========================================================================

குருமா,
கிரேவி வகைகளில் காரம் அதிகமாகிவிட்டால்... வாணலியில் ஊற்றி, ஒரு டம்ளர்
காய்ச்சின பாலை சேர்க்கவும், பிறகு, கரண்டியால் நன்கு கலக்கிவிட்டால்,
காரம் வெகுவாகக் குறைந்திருக்கும்.
==========================================================================
==========================================================================
==========================================================================
==========================================================================
==========================================================================
கண்ணாடி பாட்டில்கள் குறுகியதாக இருந்தால் அதை சுத்தம் செய்யும்போது கைவிரல்கள்
உள்ளே போகாது. அத்தகைய பாட்டில்களை சுத்தம் செய்ய ஒரு எளிய வழி...
எலுமிச்சம்பழத்தை சிறிதாக துண்டுகள் செய்து பாட்டிலில் போட்டு அதன் உள்ளே
பாதியளவு தண்ணீர் விட்டு குலுக்கினால் கறைகள் போய்விடும். பாட்டில்களை வாஷ் பண்ண மிகவும் சுலபமானவழி நியூஸ் பேப்பரை சிறுதுண்டுகளாக
பிச்சு பாட்டிலில் போட்டு துளி உப்பும் சேர்த்து குலுக்கவும் பிறகு வாஷ்
பண்ணால் போதும் சுத்தமா கரைகள் நீங்கிடும்
==========================================================================
==========================================================================
==========================================================================
==========================================================================
பீர்க்கங்காய் தோலை ஒரு நாள் முழுவதும் வெயிலில் உலர்த்தி, தேவையான அளவு மிளகாய்
வற்றல், சிறிதளவு புளி, உப்பு, பூண்டு பற்கள் சேர்த்து மிக்ஸியில்
கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு,
பெருங்காயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் தாளித்து,
அரைத்த பொடியைப் போட்டு நன்கு வதக்கி பொலபொலப்பாக எடுத்தால்...
பீர்க்கங்காய் பொடி தயார்!

Post a Comment