ராகி பழப் பணியாரம்!
ராகி பழப் பணியாரம் தேவையானவை: ராகி மாவு அரை கப், மைதா மாவு அரை கப், கனிந்த மஞ்சள் வாழைப்பழம் - 2, சர்க்கரை, நல்லெண்ணெய் தேவையான அ...
https://pettagum.blogspot.com/2015/02/blog-post_83.html
ராகி பழப் பணியாரம்
தேவையானவை: ராகி மாவு அரை கப், மைதா மாவு அரை கப், கனிந்த மஞ்சள் வாழைப்பழம் - 2, சர்க்கரை, நல்லெண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
ராகி மாவு, மைதா மாவு, சர்க்கரை ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, தண்ணீர் ஊற்றி,
வாழைப்பழத்தை பொடியாக நறுக்கிப் போட்டுக் கலந்து, பணியார மாவு பதத்துக்கு
கரைக்கவும். பணியார சட்டியை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் விட்டு,
குழியில் பாதி அளவுக்கு மாவை ஊற்றி, நன்கு வேகவிட்டு திருப்பிவிடவும்.
இரண்டு பக்கமும் வெந்தவுடன் எடுத்தால்... சுவையான, சத்துமிக்க ராகி பழப்
பணியாரம் தயார்.
Post a Comment