சமையல் நேரத்தை மிச்சப்படுத்தும் சூட்சுமங்கள்!
சமையல் நேரத்தை மிச்சப்படுத்தும் சூட்சுமங்கள்! *எல்லா அசைவ சமையலுக்கும், குருமாக்களுக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் அவசியம் அதை இஞ்சி அரை கில...
*எல்லா அசைவ சமையலுக்கும், குருமாக்களுக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் அவசியம் அதை இஞ்சி அரை கிலோ , பூண்டு கால் கிலோ அளவில் உரித்து சுத்தம் செய்து அரைத்து வைத்து கொள்ளலாம். அரைத்ததும் அதனுடன் சிறிது உப்பு தூள்,கலந்து வைக்கவேண்டும்.
சின்ன பேமிலிக்கு ஒரு மாதம் வரை போதும். நல்ல ஒரு பெரிய பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவும். வேண்டுமானால் நாலில் ஒரு பங்கை எடுத்து பிரீஜரிலும் வைக்கலாம்.
*தேங்காய் நிறைய இருந்தால் அதில் உப்பை தடவி வைப்பார்கள், அதற்கு பதில் பத்தைகளாக போட்டோ (அ) பொடியாக அரிந்தோ அதை ஒரு பாக்கெட்டில் போட்டு பிரீஜரில் வைத்து கொள்ளலாம். தேவையான போது சட்னிக்கு,குருமாவிற்கு கொஞ்சம் எடுத்து சிறிது நேரம் தண்ணீரில் போட்டுவைத்தால் உடனே கழண்டு வந்துவிடும்.
*தினம் இஞ்சி டீ குடிப்பவர்கள் அதை போட்டு தட்டி கொண்டு இருக்காமல் ஒரு பெரிய துண்டு அளவிற்கு கொர கொரப்பாக ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து கொண்டால் தினம் டீ கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து போட்டு கொள்ளலாம்.அல்லது கேரட் துருவியில் தினம் ஒரு துண்டு துருவிக்கொள்ளலாம்
*பொரித்த எண்ணை மறுபடி பயன் படுத்தும் போது அதை வடிகட்டி கொள்ளுங்கள். முடிந்த வரை கொஞ்சமா எண்ணை பயன் படுத்தி பொரிக்கவும். மீதியை முன்று நாட்களுக்குள் முடிக்க பாருங்கள்.
*முருங்கக்காய் அதிகமாக இருந்தால் அதை அப்ப்டியே பிரிட்ஜில்வைத்து காயவிடாதீர்கள்.அதை தோலெடுத்து ஒரு விரல் நீளத்துக்கு அரிந்து ஒரு கவரில் போட்டு பிரீசரில் போட்டு வையுங்கள். முருங்கக்காய் சேர்த்து சமைக்கும் போது அப்ப எடுத்து அப்படியே கழுவி சேர்த்து கொள்ளலாம், இரண்டு நிமிடத்தில் வெந்துவிடும்.
*குருமாக்களில் தேங்காயின் அளவை குறைத்து கொண்டு பாதம் சேர்த்து அரைத்து ஊற்றலாம். இது கொலஸ்ராயிலின் அளவை கட்டுபடுத்தும் குழந்தைகளுக்கும் மூளை வளர்சி அதிகரிக்கும். ரிச் டேஸ்டும் கிடைக்கும்.
*கருவேப்பிலை பிரெஷாக வாங்கி அதை கழுவி தண்ணீரை வடித்து ஒரு பேபப்ரில் சுருட்டி பிரிட்ஜில் வைத்தால் கொஞ்சம் நாள் ஆனதும் பொடித்தால் தூளாகிவிடும், அதை பிஸிபேளாபாத் இட்லி பொடி, மற்றும் பொடித்த கருவேப்பிலை சேர்த்து வதக்கி அரைக்கும் சமையலுக்கு பயன் படுத்தலாம்.
*சேமியா ,ரவை போன்றவைகளை தேவைக்கு வறுத்து வைத்து கொண்டால் நிமிஷத்தில் உப்புமா, சேமியா பிரியாணி ஈசியாக தயாரித்து விடலாம்.
*ஒரு கிலோ அளவிற்கு தோசைமாவு அரைத்து வைத்து கொண்டால் அந்த வாரம் முழுவதும் இட்லி, தோசை, ஆப்பம், ஊத்தாப்பம், குழிபணியாரம் என வாரமுழுவதும் டிபன் டென்ஷன் இருக்காது. அவசரத்துக்கு கை கொடுக்கும் தோசை மாவு.
*கொண்டைக்கடலையை நிறைய ஊறவைத்து வேகவைத்து பிரீஜரில் போட்டு வைத்தால் சுண்டல், பூரிக்கு சென்னா, சாலட் , ஹமூஸ் போன்றவை எளிதாக தயாரிக்கலாம்.
*மோர் குழம்புக்கு வறுத்து அரைக்க வேண்டியவைகளை நிறைய செய்து வைத்து முன்று பாகமாக பிரித்து பிரீஜரில் வைத்தால் சட்டுன்னு மோர்குழம்பும் ரெடி.
*தினம் சப்பாத்தி சாப்பிடுபவர்கள் மாவு நிறைய குழைத்து பாக்கெட்டுகளாக போட்டு ஃபீரிஜரில் வைக்கலாம்.
Post a Comment