குதிகால் வெடிப்பை சரிசெய்யும் சில சிம்பிளான வைத்தியங்கள்!
குதிகால் வெடிப்பை சரிசெய்யும் சில சிம்பிளான வைத்தியங்கள்! எலுமிச்சை, உப்பு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் தினமும் இரவில் படுக்கும் ...

https://pettagum.blogspot.com/2014/10/blog-post_55.html
குதிகால் வெடிப்பை சரிசெய்யும் சில சிம்பிளான வைத்தியங்கள்!
எலுமிச்சை, உப்பு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் தினமும் இரவில் படுக்கும் போது ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, அதில் உப்பு, எலுமிச்சை சாறு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, அதில் பாதங்களை 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு குதிகால்களை தேய்த்து கழுவி விட்டு தூங்கினால், கால்களில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, வெடிப்புகள் மறைய ஆரம்பிக்கும்.
வாழைப்பழம் வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதனை குதிகால் வெடிப்பின்
மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்து
வந்தாலும், வெடிப்பு மறையும்.
வேஸ்லின் மற்றும் எலுமிச்சை சாறு இரவில் படுக்கும் முன், பாதங்களை
நன்கு கழுவி உலர வைத்து, பின் பாதங்களை வெதுவெதுப்பான நீரில் 15-20 நிமிடம்
ஊற வைத்து, மீண்டும் உலர வைக்க வேண்டும். பின்பு 1 டீஸ்பூன் வேஸ்லின் உடன்
சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, குதிகால்களில் வெடிப்பு உள்ள
இடத்தில் தடவி தேய்த்து, இரவு முழுவதும் ஊற வைத்து வந்தால், நல்ல பலன்
கிடைக்கும்.
Post a Comment