பளிச்சென முகம் பிரகாசிக்க..! ஹெல்த் ஸ்பெஷல்!!
பளிச்சென முகம் பிரகாசிக்க..! 'கல்யாணப் பொண்ணு... இப்படியா களையிழந்து இருக்கிறது?’ என்று கேட்கும் அளவுக்கு வாழ்க்கைமுறை, சுற்று...
https://pettagum.blogspot.com/2014/10/blog-post_1.html
பளிச்சென முகம் பிரகாசிக்க..!
'கல்யாணப்
பொண்ணு... இப்படியா களையிழந்து இருக்கிறது?’ என்று கேட்கும் அளவுக்கு
வாழ்க்கைமுறை, சுற்றுச்சூழல், வேலைப்பளு, உணவுப் பழக்கங்கள் போன்றவை இன்றைய
இளைய தலைமுறையினரைப் பாதிக்கிறது. 
சருமத்தை சோர்வில்லாமல் எப்போதும் பொலிவுடன்வைத்திருக்க
என்ன செய்ய வேண்டும் என்று அழகுக் கலைஞர் சுமதி சக்தியும், சருமப்
பராமரிப்புக்கான விஷயங்களை அரசு மருத்துவர் ஹேமானந்தும், இங்கே விரிவாகத்
தருகின்றனர்.
உணவு
தினசரி மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதன் மூலமும்
உடல் ஆரோக்கியத்தையும், அழகையும் தக்கவைக்கலாம். தினமும் மூன்று
வெவ்வேறுவிதமான பழங்களை எடுத்துக்கொள்வது சருமத்துக்குத் தேவையான
வைட்டமின், நீர்ச்சத்தைத் தந்து, தோலில் வறட்சியைப் போக்கிப்
பளபளப்பாக்கும். உணவில் பொன்னாங்கண்ணி மற்றும் கேரட் தினசரி
சேர்த்துக்கொண்டால், சோர்வு நீங்கி முகம் எப்போதும் பிரகாசிக்கும்.
பாதாம் பருப்பை இரவில் நீரில் ஊறவைத்து காலையில்
சாப்பிடுவது நல்லது. முகப்பருக்கள் வருவதற்கு அதிகக் கொழுப்பும் ஒரு
காரணம். எண்ணெய்ப் பலகாரங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது
நல்லது.
இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, பாலை நன்கு காய்ச்சி அதில் இரண்டு
பேரீச்சம்பழங்களைப் போட்டு, மறுநாள் காலை அருந்தலாம். முகத்தின்
பளபளப்புக்கு பேரீச்சம் பழம் கேரன்டி.
பியூட்டி பார்லர்
அசத்தலான அழகுக்கு! 
வெளியில் சென்றுவிட்டு வந்த பிறகு, கெட்டியான மோரில்
ஒரு வெள்ளைத் துணியை நனைத்து முகத்தின் மீது அப்படியே 10 நிமிடங்கள்
வைத்திருப்பது புத்துணர்ச்சியைத் தரும்.

Post a Comment