மயக்கும் ருசியில் மஷ்ரூம் பாத்! வாசகிகள் கைமணம் !! சமையல் குறிப்புகள்-சைவம்!
மஷ்ரூம் - பெப்பர் பாத் தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப், மஷ்ரூம் - ஒரு பாக்கெட், தேங்காய்ப் பால் - அரை கப், தண்ணீர் - ஒரு கப், மி...

https://pettagum.blogspot.com/2014/08/blog-post_50.html
மஷ்ரூம் - பெப்பர் பாத்
தேவையானவை:
பாஸ்மதி அரிசி - ஒரு கப், மஷ்ரூம் - ஒரு பாக்கெட், தேங்காய்ப் பால் - அரை
கப், தண்ணீர் - ஒரு கப், மிளகு, சீரகம் - தலா ஒன்றரை டீஸ்பூன், நெய் - 5
டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மஷ்ரூமை
சுத்தம் செய்து கழுவி வைத்துக்கொள்ளவும். கடாயில் இரண்டு டீஸ்பூன்
நெய்விட்டு, மிளகு, சீரகத்தை வறுத்துப் பொடி செய்யவும். மீதியுள்ள நெய்யை
கடாயில் விட்டு, எண்ணெயும் சேர்த்து அதில் மஷ்ரூமை வதக்கவும். அதனுடன்
மிளகு - சீரகப் பொடியை சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்த்து, தேங்காய்ப்
பாலை ஊற்றி, லேசாக சூடேறியவுடன் அடுப்பை அணைக்கவும். பாஸ்மதி அரிசியைக்
கழுவி, தேங்காய் பால் கலவை, ஒரு கப் நீர் சேர்த்து குக்கரில் வைத்து,
இரண்டு விசில் வந்தவுடன் இறக்கி, நன்கு கிளறி பரிமாறவும்.
========================================================================
அவல் - ஜவ்வரிசி சர்க்கரைப் பொங்கல்
தேவையானவை: கெட்டி அவல் - 100 கிராம், ஜவ்வரிசி - 50 கிராம், முந்திரி - 10, ஏலக்காய் - 5, பாகு வெல்லம் - 100 கிராம், நெய் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில்
ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரியை வறுக்கவும். ஏலக்காயையும் தனியாக
வறுத்து எடுத்து பொடி செய்யவும். அவலையும், ஜவ்வரிசியையும் முந்திரி வறுத்த
நெய்யிலேயே லேசாக வறுத்து எடுக்கவும். அவல், ஜவ்வரிசியுடன், அவை வேகத்
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து, 2 விசில் வந்ததும்
இறக்கவும். வாணலியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அடுப்பை பற்றவைத்து,
வெல்லத்தைப் போட்டு கரையும் வரை வைத்து எடுத்து வடிகட்டவும். இதை வாணலியில்
மீண்டும் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும். வேகவைத்த அவல், ஜவ்வரிசி கலவையை
வெல்லப்பாகில் போட்டு நன்கு கிளறவும். நெய்விட்டு மேலும் கிளறவும். இதனுடன்
முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
தேவைப்பட்டால், சிறிதளவு கேசரி பவுடரை பாலில் கலந்து சேர்க்கலாம்.
இந்தப் பொங்கலை சூடாக சாப்பிட வேண்டும்.... சுவை ஆளை அசத்தும்.
Post a Comment