வருமான வரி கணக்கு தாக்கல்... முழுமையான வழிகாட்டி! உபயோகமான தகவல்கள்!!

வருமான வரி கணக்கு தாக்கல்... முழுமையான வழிகாட்டி! மாதச் சம்பளக்காரர் கள் முடிந்த 2013-14-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு (இன்...

வருமான வரி கணக்கு தாக்கல்... முழுமையான வழிகாட்டி!

மாதச் சம்பளக்காரர் கள் முடிந்த 2013-14-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு (இன்கம் டாக்ஸ் ரிட்டர்ன்) விவரத்தை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31, 2014. இதற்கு இன்னும் 25 நாட்கள்தான் இருக்கின்றன. கடைசி வாரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்துகொள்ளலாம் என்று இருந்துவிட்டு, அவசரமாக வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது தவறுகள் ஏற்படக்கூடும். இதைத் தவிர்க்க இப்போதே களமிறங்கிவிடுங்கள்.
வருமான வரிக் கணக்கை எப்படி தாக்கல் செய்ய வேண்டும், எந்த மாதிரியான விஷயங்களையெல்லாம் கவனிக்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் கோபால் கிருஷ்ண ராஜுவிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
''மாத சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப் தொகை மற்றும் லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம், வீட்டுக் கடனுக்கான அசல் மற்றும் வட்டி, பிள்ளைகளின் கல்விச் செலவு உள்ளிட்ட வரிச் சலுகைகளைக் கழித்ததுபோக, மீதி உள்ள தொகைக்கு வரி கட்ட வேண்டும். இந்த முதலீடு, செலவு, வரிச் சலுகை பெற்ற விவரம், வரி கட்டிய விவரத்தை வருமான வரித் துறைக்கு தெரிவிப்பதுதான் வரிக் கணக்கு தாக்கல்' என்று அடிப்படை விளக்கம் சொன்னவர், யாரெல்லாம் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பதைப் பட்டியலிட்டுக் காட்டினார்.
யாரெல்லாம் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்?
நிதியாண்டில் வங்கிச் சேமிப்புக் கணக்கு மூலம் 10,000 ரூபாய்க்குமேல் வட்டி வருமானம் கிடைத்திருந்தால்.
ஒரு நிதியாண்டில் இரண்டு கம்பெனிகளில் பணிபுரிந்தவர்கள்.
சம்பளம் தவிர, இதர வருமானம் உள்ளவர்கள்.
நிதியாண்டில் ஒருவரின் ஆண்டு நிகர வருமானம் (மொத்த வருமானத்தில் வரிச் சலுகைகள் எல்லாம் கழித்தது போக உள்ள தொகை) ரூ.2 லட்சத்தைத் தாண்டும்போது.
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் ஆண்டு நிகர வருமானம் ரூ.2.5 லட்சத்தைத் தாண்டும்போது.
 80 வயதுக்கு மேற்பட்ட மிகவும் மூத்த குடிமக்களின் ஆண்டு நிகர வருமானம் ரூ.5 லட்சத்தைத் தாண்டும் போது.
கூடுதலாக வருமான வரி பிடிக்கப்பட்டு ரீஃபண்ட் பெற வேண்டியிருந்தால்.
 பங்குகள், மியூச்சுவல் யூனிட்கள், சொத்து விற்றது மூலம் மூலதன ஆதாயம் கிடைத்திருந்தால்.
மூலதன ஆதாய இழப்பு ஏற்பட்டு, அதனை அடுத்துவரும் ஆண்டுகளில் ஈடுகட்ட திட்டமிட்டிருந்தால்...
மேலே கூறப்பட்டுள்ள நிலையில் இருப்பவர்கள் அனைவருமே அவசியம் டாக்ஸ் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். அடுத்து, வரி தாக்கல் செய்வதற்காக யார், எந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
யாருக்கு என்ன படிவம்..!
'நம்மில் பெரும்பாலானோருக்கு யார் எந்தப் படிவத்தில் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்கிற குழப்பம் இருக்கிறது. அதைத் தவிர்க்கும் விதமாக அதை விரிவாகத் தந்திருக்கிறோம்.
ஐடிஆர் 1 (சஹஜ்)
சம்பளம் அல்லது ஓய்வூதியம்.
ஒரு வீட்டிலிருந்து வாடகை வருமானம் வருதல்.
வட்டி வருமானம்.
வரி விலக்கு பெற்ற வருமானம் நிதியாண்டில் 5,000 ரூபாய்க்குமேல் இருக்கக் கூடாது.
வெளிநாட்டில் சொத்து இருக்கக் கூடாது.
குறிப்பு:  ஐடிஆர் 1 - படிவத்தில் முதல்முறையாக வீட்டுக் கடன் வாங்குபவர் களுக்கு, 80இஇ பிரிவின் கீழ் வரிச் சலுகை பெற தனியாக இடம் விடப்பட்டிருக்கிறது. வீட்டுக் கடன் ஏப்ரல் 1, 2013 மற்றும் மார்ச் 31, 2014-க்கு இடையில் வாங்கப் பட்டிருக்கிறது எனில், பிரிவு 24-ன் கீழ் வழக்கமாகப் பெறும் வட்டிக்கான வரிச் சலுகை 1.5 லட்சம் ரூபாய் போக, கூடுதலாக 80இஇ-ன் கீழ் 1 லட்சம் ரூபாய் வரிச் சலுகை கிடைக்கும். இதைப் பெற வீட்டின் மதிப்பு 40 லட்சம் ரூபாய்க்குள்ளும், கடன் தொகை ரூ.25 லட்சத்துக்குள்ளும் இருக்க வேண்டும்.
ஐடிஆர் 2
சம்பளம் அல்லது ஓய்வூதியம்.
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலிருந்து வாடகை வருமானம்.
மூலதன ஆதாயங்கள்.
மூலதன இழப்பை அடுத்த ஆண்டுகளுக்குக் கொண்டு செல்லுதல்.
 வட்டி வருமானம்.
வெளிநாட்டில் சொத்து இருந்தால்.
பிசினஸ் வருமானம் இருக்கக் கூடாது.
   குறிப்பு: பிரிவு 10-ன் கீழ் பெறும் வீட்டு வாடகை படி (ஹெச்ஆர்ஏ), விடுமுறை சுற்றுலா படி (எல்டிஏ) போன்றவற்றைத் தனித் தனியாகக் குறிப்பிட்டுக் காட்ட வேண்டும். இதேபோல், பங்கு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட் விற்பனை, சொத்து விற்பனை மூலமான மூலதன ஆதாயத்தையும் தனித் தனியாகக் குறிப்பிட வேண்டும். மேலும், மூலதன ஆதாய வரியைத் தவிர்க்க 80இசி-ன் கீழ் முதலீடு செய்யும் (என்ஹெச்ஏஐ/ஆர்இசி) மூலதன ஆதாய பாண்டுகள் விவரத்தையும் குறிப்பிட வேண்டும்.
  ஐடிஆர் 3
கூட்டு நிறுவனத்தில் பங்குதாரர் களாக இருப்பவர்கள்.
வட்டி, சம்பளம், போனஸ், கமிஷன் / ஊக்கத்தொகை போன்ற வருமானம் உள்ளவர்கள்.
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலிருந்து வாடகை வருதல்.
மூலதன இழப்பை அடுத்த ஆண்டுகளுக்குக் கொண்டு செல்லுதல்.
ஐடிஆர் 4
தனி உரிமையாளர் பிசினஸ்.
வியாபாரம் அல்லது நிபுணத்துவம் (டாக்டர், வக்கீல், ஆடிட்டர் போன்றவர்கள்) மூலம் வருமானம் வருதல்.
இதர வருமானம்.
கமிஷன்.
ஐடிஆர் 4 எஸ் (சுகம்)
ஒப்பந்தக்காரர்கள், சரக்குப் போக்குவரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், குறிப்பாக கணக்கு வழக்கு பராமரிக்காமல் லாபத்தில் 8% வரி கட்டி வருபவர்கள். இவர்களின் பிசினஸ் டேர்னோவர் ரூ.1 கோடிக்குள் இருக்க வேண்டும்.
வரி விலக்கு பெற்ற வருமானம் நிதியாண்டில் 5,000 ரூபாய்க்குமேல் இருக்கக் கூடாது.
ஊக வணிகம் (ஸ்பெக்குலேஷன்) மூலம் வருமானம் பெற்றிருக்கக் கூடாது.
ஐடிஆர் V (ITR- V Form)
இது வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதை உறுதி செய்யும் படிவம்.(Verification Form)
 
வருமான வரி அலுவலகத்தில் நேரில் சென்று வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும். அதில் அலுவலக முத்திரை பதித்துத் தருவார்கள்.வரிக் கணக்கு தாக்கலை உரிய காலத்தில் செய்துவிட்டால், உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது!
ஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்குமேல் இருந்தால், அவர் வரிக் கணக்கை எலெக்ட்ரானிக் முறையில்
(இ-ஃபைலிங்) தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம்.


Related

ஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க ஆன்லைனில் வசதி !

ஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க ஆன்லைனில் வசதி        இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்...

கூடுதல் வீட்டுக்கடன் பெற எளிய வழி! உபயோகமான தகவல்கள்!!

வீட்டுக்கடனை தம்பதியர் கூட்டாக வாங்கும்போது, பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியவில்லை. இதுபற்றிய ஒரு பார்வை: வீடு கட்டுவதற்கோ, வாங்குவதற்கோ அதிக தொகை வீட்டுக்கடனாக தேவைப்படும். இதுப...

வீட்டுக்கடனுக்கு தேவையான ஆவணங்கள்!வங்கியில் பல வகை கடன்கள்!!

இன்றைக்கு பல வங்கிகள், வீட்டுக் கடன் தர தயாராக இருந்தாலும் அதை வாங்குவதற்கு பல படிகளை தாண்டி செல்ல வேண்டி இருக்கிறது. வீட்டுக் கடன் வாங்க வங்கியை எப்படி அணுக வேண்டும்? அதற்கு என்ன தகுதிகள் வேண்டும...

Post a Comment

4 comments

ப.கந்தசாமி said...

நல்ல விவரங்கள்.

Ungal Blog said...

அஸ்ஸலாமு அழைக்கும். உங்கள் வலைதளம் "இஸ்லாமிய இணையங்களின் இணைப்பகம் (http://ungalwebs.blogspot.com)" என்ற இணைய தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

(உங்கள் தளத்தில் எங்களை இணைக்க, இந்த லிங்கை http://ungalwebs.blogspot.com/p/contact.html பார்க்கவும்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஒருவர் நேர்வழியின்பால் அழைத்தால் அவருக்கு அவரைப் பின்பற்றியவர்களின் நற்கூலியைப் போன்று வழங்கப்படும். பின்பற்றியவர்களின் நற்கூலியில் எவ்விதக் குறைவும் ஏற்படாது.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

MohamedAli said...

Palani kanthasamy sir, welcome and thanks by pettagum A.S. Mohamed Ali

MohamedAli said...

அஸ்ஸலாமு அழைக்கும்.
மதிப்பிற்குரிய Abu Nadeem அவர்களின் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்! தொடர்ந்து பெட்டகம் பார்த்து தங்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் விழைகின்றேன் பெட்டகம் A.S.முஹம்மது அலி

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Dec 4, 2024 11:13:33 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,088,996

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item