மெனோபாஸ் பருவத்தினருக்கான நலம் டிப்ஸ்!
மெனோபாஸ் பருவத்தினருக்கான நலம் டிப்ஸ்! 1. உடற்பயிற்சி மிக அவசியம். இதுவரை நடைப்பயிற்சி இல்லை என்றாலும், இனி மிக அவசியம். அது மட்டுமே பு...

https://pettagum.blogspot.com/2014/07/blog-post_12.html
மெனோபாஸ் பருவத்தினருக்கான நலம் டிப்ஸ்!
1. உடற்பயிற்சி மிக அவசியம். இதுவரை நடைப்பயிற்சி இல்லை
என்றாலும், இனி மிக அவசியம். அது மட்டுமே புற்றின் அபாயத்தைக் குறைப்பதில்
பெரும் பங்கு வகிக்கும்!
2. மனப் பதற்றம், பயம், படபடப்பு, திடீர் வியர்வை
அவஸ்தைகளுக்கு, பிராணாயாமமும், 'சூரிய வணக்கம்’ யோகாசனப் பயிற்சியும்
பெரும் பலன் அளிக்கின்றன. பாரம்பரிய மருத்துவ முறைகள், சூரிய
வணக்கத்தின்போது உடலின் ஆறு சக்கரங்களை (யோகாவில் ஏழு என்கிறார்கள்)
வலுப்படுத்தி, ஹார்மோன்களைச் சீராக்க உதவும்.
3. 30 சதவிகித உணவு, இனி பழங்களாக இருக்கட்டும்.
குறிப்பாக சிவந்த நிறமுள்ள மாதுளை, சிவப்பு கொய்யா, பப்பாளி... ஆகியவை
கர்ப்பப் பை மற்றும் மார்புப் புற்று இரண்டின் வருகையையும் தடுப்பவை.
ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன் நிறைந்த தொலி உளுந்து, நவதானியக் கஞ்சி, டோஃபு எனும்
சோயா கட்டி, இரும்புச்சத்து நிறைந்த கம்பும், கால்சியம் நிறைந்த கேழ்வரகும்
உணவில் அடிக்கடி வேண்டும்.
4. பால் சேர்க்காத தேநீர், குறிப்பாக பச்சைத் தேநீர்
(கிரீன் டீ) சிறப்பான பானம். அதே சமயம் தேநீரைக் கஷாயம் போடுவதுபோல
காய்ச்சி எடுப்பது தவறு. அது தேநீர் அளிக்கும் பலனைக் குறைக்கும்.
கொதிக்கும் வெந்நீரில் தேயிலையைப் போட்டு 4-5 நிமிடங்கள் வைத்துவிட்டு,
பின்னர் வடிகட்டி ஆறவைத்துக் குடிக்க வேண்டும்!
நவீன அறிவியல் பரிந்துரைக்கும் பாரம்பரிய உணவுப் பட்டியல்!
1. காலை - நீராகாரம் அல்லது தேநீர்... முந்தைய தினம் ஊறவைத்த பாதாம் பருப்பு - 2.
2. காலைச் சிற்றுண்டி - கம்பு, சோள, உளுந்து மாவில்
சுட்ட தோசையுடன் பிரண்டை சட்னி அல்லது வெங்காயச் சட்னி. அத்திப்பழம் - 2,
வாழைப்பழம் - 1.
3. முற்பகல் - மோர் (2 குவளை)
4. மதிய உணவு - கருங்குறுவை (அ) மாப்பிள்ளை சம்பா (அ)
கவுனி அரிசி (அ) வரகரிசியில் சோறு. வாழைத்தண்டு பச்சடி, பீன்ஸ், அவரை,
சிவப்பு கொண்டைக் கடலை சேர்ந்த தொடுகறிகள். முருங்கை/பசலை கீரை,
சுரைக்காய்க் கூட்டு, சுண்டைக்காய் வற்றல் மற்றும் குதிரைவாலி மோர் சோறு.
5. மாலை - முருங்கைக்காய் சூப் உடன் ராகி பனைவெல்ல உருண்டை, நவதானியச் சுண்டல் உடன் தேநீர்.
6. இரவு - கேழ்வரகு தோசை அல்லது உளுந்து கஞ்சி. (உங்கள் குடும்ப மருத்துவர் கண்டிப்பாகப் பரிந்துரைத்தால் மட்டும், பால்).
இவற்றை மட்டுமே தினமும் கெடுபிடியாகச் சாப்பிட வேண்டும்
என்பது இல்லை. உணவுப்பழக்கத்தை, வாரம் 2-3 நாட்கள் இப்படி
அமைத்துக்கொள்வது, மெனோபாஸ் பருவத்தை மென்மையாகக் கடக்கவைக்கும்!
Post a Comment