ஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்? உபயோகமான தகவல்கள்!

(கோப்புப் படம்) வாகன ஓட்டுநர் உரிமம் தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.வேலுசாம...


(கோப்புப் படம்)
(கோப்புப் படம்)

வாகன ஓட்டுநர் உரிமம் தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.வேலுசாமி.
# வாகன ஓட்டுநர் உரிமம் பெற என்னென்ன சான்றுகள் தேவை?
இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டை, எல்.ஐ.சி. பாலிசி சான்று, வயதுச் சான்றாக பள்ளி மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) போன்ற அரசு வழங்கிய சான்றுகள், பாஸ்போர்ட் அளவில் 3 புகைப்படங்களுடன் பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.) பெறுவதற்கு ‘படிவம் 2’-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
50 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மருத்துவச் சான்றிதழுடன் ‘படிவம் 1’-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மேலும், இரு சக்கர வாகன பழகுநர் உரிமம் பெற ரூ. 30-ம், அதனுடன் சேர்த்து நான்கு சக்கர வாகன பழகுநர் உரிமம் பெற ரூ. 60-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
# பழகுநர் உரிமம் பெற்று எத்தனை மாதங்களுக்குள் ஓட்டுநர் உரிமம் பெறலாம்?
பழகுநர் உரிமம் 6 மாதம் வரை செல்லுபடியாகும். பழகுநர் உரிமம் பெற்று, ஒரு மாதத்துக்கு பின்னரே ஓட்டுநர் உரிமம் பெற முடியும். ஒரு மாத கால இடைவெளி, வாகனங்களை நன்றாக ஓட்டிப் பழகுவதற்காக வழங்கப்படுகிறது. பழகுநர் உரிமம் பெறும்போது, வாகனத்தை ஓட்டிக் காட்டுவதோடு சாலை விதிகள் குறித்த கேள்விகளுக்கும் சரியான பதில் அளிக்க வேண்டும்.
# மாற்றுத் திறனாளிகள் ஓட்டுநர் உரிமம் பெறமுடியுமா?
மாற்றுத் திறனாளிகளின் உடல் சார்ந்த பிரச்சினைக்கு ஏற்ப அவர்கள் எளிதில் இயக்கும்படி வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். நடக்க இயலாத மாற்றுத் திறனாளிகள் இரு சக்கர வாகனங்களை இயக்க கூடுதல் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் பின்னால் வரும் வாகனங்களின் ஒலியைக் கேட்க இயலாது என்பதால் அவர்களது வாகனத்தின் டேஷ் போர்டு சிக்னல் காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வாகனம் சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளி பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மாற்றுத் திறனாளிகள் வாகன ஓட்டுநர் உரிமம் பெறலாம்.
# ஓட்டுநர் உரிமத்தின் கால அளவு எத்தனை ஆண்டுகள்?
அது வயதை பொருத்தது. ஒருவர் 20 வயதில் ஓட்டுநர் உரிமம் பெற்றால் அவருக்கு 40 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். பின்னர், புதுப்பிக்க 20 ஆண்டு கால அளவு வழங்கப்படும். 39 வயதில் ஒருவர் ஓட்டுநர் உரிமம் பெற்றால் ஓர் ஆண்டு வரை- அதாவது 40 வயது வரை மட்டுமே உரிமம் வழங்கப்படும். 40 வயதுக்கு பின்பு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். அதற்கு ரூ.250 கட்டணம்.
(மீண்டும் நாளை சந்திப்போம்)

Related

இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்! உபயோகமான தகவல்கள்!!

இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்! இந்திய அரசின் அனைவருக்கும் ஓய்வூதிய திட்டத்தைப் பற்றிய போதிய விழிப்புணர்வு நம்மில் பலருக்கு இல்லை. ஆனால், இது அனைத்து வங்கிகளிலும், குறிப்பாக தென் இந்திய வங்கிகளில் அ...

வாட்டர் ஹீட்டர்... ஸ்விட்ச் ஆஃப் செய்த பிறகே குளிக்கணும்! உபயோகமான தகவல்கள்!!

வாட்டர் ஹீட்டர்... ஸ்விட்ச் ஆஃப் செய்த பிறகே குளிக்கணும்! காலையில் எழுந்தவுடன் ஒரு குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரும் வெந்நீர் வைத்து குளிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.  ...

கொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு?உபயோகமான தகவல்கள்!!

கொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு? தொலைதூரப் பயணங்களின்போது அரிதாக ஹோட்டல் உணவுகளைப் பயன்படுத்தியவர்களுக்குக்கூட, இன்று ஹோட்டல் உணவு அத்தியாவசியமாகிவிட்டது. சட்னி, சாம்பார் த...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Dec 4, 2024 8:48:46 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,088,981

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item