வைரமுத்துவிடம் 3 கேள்விகள். அவசரத்திலும் அசராத பதில்கள்; அசாதாரணமான பதில்கள். இதோ...! பெட்டகம் சிந்தனை!!
'' நீங்கள் ரசித்துக்கேட்ட அனுபவ மொழி?'' ''முஸ்லிம் பெரியவர் ஒருவர் சொன்னது: 'நீ ராஜாவோ... பிச்சைக்காரனோ......

https://pettagum.blogspot.com/2014/07/3.html
''முஸ்லிம் பெரியவர் ஒருவர் சொன்னது: 'நீ ராஜாவோ...
பிச்சைக்காரனோ... உண்டது, உடுத்தது, கொண்டது, கொடுத்தது... இந்த நாலும்தான்
மிச்சம்’!''
''ஒரு குறுங்கதை சொல்ல முடியுமா?''
''பார்வையற்ற பெண்ணைக் காதலித்தான் ஒருவன். 'பார்வை
கொடுத்தால் உன்னையே மணப்பேன்’ என்றாள் அவள். அவனும் பார்வை கொடுத்தான்.
கண்திறந்து பார்த்தவள் தன் காதலன் கண் இல்லாதவன் என்பதை கண்டு, 'நான் உன்னை
மணக்க மாட்டேன்’ என்று மறுத்துவிட்டாள். காதலன் கண்ணீரோடு முணுமுணுத்தான்,
'என்னை நிராகரித்தவளே... என் கண்ணை நிராகரிக்க முடியாதல்லவா?’ ''
''இந்த 60 என்ன சொல்கிறது?''
''சமூகம் உன்னை நினைக்க வேண்டும் என்று செயல்படாதே; சமூகத்தை நினைத்து நீ செயல்படு!''
Post a Comment