பால் கொழுக்கட்டை --- சமையல் குறிப்புகள்,
தேவையானவை: பச்சரிசி- 1 கப் பொடி செய்த வெல்லம்- 2 கப் பச்சரிசி மாவு தேவையானது ஏலப்பொடி- 1 ஸ்பூன் தேங்காய்த்துருவல்- அரை க...

பச்சரிசி- 1 கப்
பொடி செய்த வெல்லம்- 2 கப்
பச்சரிசி மாவு தேவையானது
ஏலப்பொடி- 1 ஸ்பூன்
தேங்காய்த்துருவல்- அரை கப்
செய்முறை:
பச்சரிசியை ஊற வைத்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீர் போதுமானது சேர்த்து நன்கு மைய அரைக்கவும்.
இத்துடன் போதுமான அரிசி மாவு சேர்த்துப்பிசையவும்.
பிசையும் பதம் வழுவழுவென்று முறுக்கு உரலில் போட்டுப் பிழியக்கூடியதாய் இருக்க வேன்டும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
ஒரு முறுக்கு உரலில் காராசேவு அச்சு போட்டு மாவை உள்ளே வைத்து மூடி கொதிக்கும் தண்ணீருக்கு மேல் உரலைப் பிடித்து தண்ணீரில் விழுமாறு மாவைபிழியவும்.
பால் கொழுக்கட்டை வெந்து மேலே வந்ததும் அடுத்த பாட்ச் பிழியவும்.
இது போல எல்லா மாவையும் பிழிந்து முடிக்கவும்.
எல்லாம் பிழிந்து மேலே வரும்போது பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் தளர இருக்க வேண்டும். அதனால் தண்னீர் பற்றாவிடில் போதுமான வெந்நீர் ஊற்றிக்கொள்ளவும்.
பிறகு வெல்லப்பொடி, ஏலம் சேர்க்கவும்.
ளல்லாம் கலந்து குழைந்து வரும்போது தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.
5 நிமிடங்கள் மெதுவான தீயில் வைத்திருந்து விட்டு பாத்திரத்தை இறக்கவும்.
சுவையான பால் கொழுக்கட்டை தயார்!!
Post a Comment