டிப்ஸ்... டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள்,
வீ ட்டைப் பூட்டிவிட்டு ஒன்றிரண்டு நாட்கள் வெளியூர் சென்று திரும்பினால்... வீடு முழுக்க எறும்பு, பூச்சிகள் என்று சமயங்களில் படுத்தி ...

https://pettagum.blogspot.com/2013/07/blog-post_8502.html
வீட்டைப்
பூட்டிவிட்டு ஒன்றிரண்டு நாட்கள் வெளியூர் சென்று திரும்பினால்... வீடு
முழுக்க எறும்பு, பூச்சிகள் என்று சமயங்களில் படுத்தி எடுத்துவிடும்.
ஊருக்குப் புறப்பட்டால்... எல்லா அறைகளின் (குளியலறையும் சேர்த்து) நான்கு
மூலைகளிலும் பூச்சி மருந்து அடியுங்கள். சமையலறை சிங்க், வாஷ்பேஸின்
ஆகியவற்றின் துவாரங்களில் நாஃப்தலின் உருண்டைகளைப் போடுங்கள். சமையலறை
அலமாரிகளின் ஓரங்களில் லஷ்மண் ரேகாவினால் கோடு வரையுங்கள். அதன் பிறகு
பாருங்கள்... பூச்சிகள் அண்டவே அண்டாது.
============================================================
நீங்கள்
தயாரிக்கும் பதார்த்தம் எல்லாம் தேங்காய் எண்ணெய் மணத்துடன் இருக்க
வேண்டுமா? மாவுடன் ஒன்றிரண்டு ஸ்பூன் துருவிய தேங்காய் கொப்பரையை (துருவிய
கொப்பரையை 'டெஸிகேடட் கோகனட்' என்று டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில்
வாங்கலாம்.) சேர்த்துப் பிசையுங்கள்.... தேங்காய் எண்ணெய் சேர்க்காமலேயே
சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்!
===========================================================
கட்டிப்
பெருங்காயத்தை சாம்பாரில் சேர்ப்பதாக இருந்தால், பருப்பை வேக வைக்கும்போதே
அதனுடன் சேர்த்து விடுங்கள். இதனால் மணம் தூக்கலாக இருப்பதுடன், குறைந்த
அளவு பெருங்காயமே போதுமானதாக இருக்கும்.
===========================================================
குழந்தைகள்
வீட்டில் விளையாடும்போது, பொம்மைகள் அத்தனையையும் எடுத்துப் போடாதீர்கள்.
வெகு விரைவில் அவற்றைப் பார்த்து சலிப்படைந்து விடுவார்கள். ஒவ்வொரு நாளும்
ஒன்றிரண்டு பொம்மைகளாகக் கொடுத்து விளையாடச் செய்தால், விளையாட்டு ஆர்வம்
பொங்குவதோடு, சலிப்பும் வராது. எதை வைத்து விளையாடுவது என்கிற குழப்பமும்
வராது.
===========================================================
ஒரு
கரண்டி லேசான அவல், 3 கரண்டி பால், ஒரு ஸ்பூன் துருவிய தேங்காய்,
இனிப்புச் சுவைக்கு தேவையான சர்க்கரை அல்லது தேன் அல்லது மில்க்மெய்ட்
ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கலந்து கொள்ளுங்கள். பொடித்த பாதாம், உலர்ந்த
திராட்சை, முந்திரி... எது கை வசம் இருந்தாலும் மேலே தூவி கிண்ணங்களில்
நிரப்பி ஸ்பூனுடன் குழந்தைகளுக்கு கொடுங்கள். ஆவலுடன் சாப்பிடுவார்கள்.
முன்னதாகவே தயாரித்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்தும் கொடுக்கலாம்.
Post a Comment