தால் வித் பொட்டேடோ பால்ஸ் --- வாசகிகள் கைமணம்!
தால் வித் பொட்டேடோ பால்ஸ் தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு, ரவை - தலா ஒரு சிறிய கப், பச்சரிசி - 2 டேபிள்ஸ்பூன்,...

https://pettagum.blogspot.com/2013/07/blog-post_2170.html
தால் வித் பொட்டேடோ பால்ஸ்
தேவையானவை: துவரம்பருப்பு,
கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு, ரவை - தலா ஒரு சிறிய கப், பச்சரிசி - 2
டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை - சிறிதளவு, உருளைக்கிழங்கு (வேகவைத்து மசித்தது) - ஒரு கப்,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பருப்பு
வகைகளுடன், காய்ந்த மிளகாய், பச்சரிசி சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து
அரைக்கவும். ரவையை கால் மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து, அப்படியே
சேர்க்கவும். மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்
ஆகியவற்றை மாவுடன் சேர்க்கவும். பிறகு, வாணலியில் எண்ணெயை காய வைத்து, இந்த
மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸ்
உடன் பரிமாறவும்.
தால் வித் பொட்டேடோ பால்ஸ்: மாவில் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து தயாரித்தால், சாப்ஃட்டாக வரும்.
Post a Comment