வேப்பம்பூ மாங்காய் பச்சடி 2 ---- சமையல் குறிப்புகள்,
தேவையான பொருட்கள்: சின்ன மாங்காய் - 1 பச்சை மிளகாய் - 5-6 வெல்லம் - 1 கரண்டி வேப்பம்பூ - 1 ஸ்பூன் எண்ணெய் - தேவைக்கேற்ப நெய் - 1 ஸ்பூன்...
https://pettagum.blogspot.com/2013/07/2_7.html
தேவையான பொருட்கள்:
சின்ன மாங்காய் - 1
பச்சை மிளகாய் - 5-6
வெல்லம் - 1 கரண்டி
வேப்பம்பூ - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
நெய் - 1 ஸ்பூன்
கடுகு - தாளிக்க
கறிவேப்பிலை
கொத்தமல்லி - தாளிக்க
செய்முறை:
மாங்காய்களை பெரிய துண்டங்களாய் நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்
ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் உப்புடன் மாங்காய்
துண்டங்களைச் சேர்த்து வேகவிடவும்.
நன்றாக குழைந்து போகுமளவு வேகவிடாமல்,
பதமாக இறக்கவும்.
தனியாக வெல்லப்பாகு செய்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
வேகவைத்த
மாங்காயில் வெல்லப்பாகைச் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
மற்றொரு வாணலியில் நெய் ஊற்றி கடுகு தாளித்து, மாம்பூக்களைச் சேர்த்து
வறுக்கவும்.
நன்கு கறுக்க வறுத்து, புகை வரும் அளவும் வதக்கவும். பின் இதை
வேகவைத்த மாங்காயில் சேர்த்து கலக்கவும்.
அலங்காரத்துக்கு கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவவும்.
வேப்பம்பூ மாங்காய் பச்சடி ரெடி!
Post a Comment