தமிழில் 'ஆஃப்லைன் அகராதி'யை இலவசமாக வழங்கும் இ-கலைவன்!

(டவுன்லோடு இணைப்பு கீழே) இணையத்தில் உலா வரும் தமிழர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் உதவும் நோக்கத்தில் ஆஃப்லைனிலேயே இயங்கக்கூடி...

(டவுன்லோடு இணைப்பு கீழே)

இணையத்தில் உலா வரும் தமிழர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் உதவும் நோக்கத்தில் ஆஃப்லைனிலேயே இயங்கக்கூடிய ‘ஆங்கிலம் - தமிழ்' அகராதி மென்பொருளை உருவாக்கி இருக்கிறார், திருப்பூரைச் சேர்ந்த சேகர்.

தொழில்நுட்பத் துறையைக் கல்வி நிலையத்தில் படிக்காமல், தனது முயற்சிகளால் தாமாகவேத் தேடிப் பயின்று, இளம் மாணவர்களுக்கு கற்றுதரும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார், இந்த 40 வயது இ-கலைவன். கோவை - சரவணம்பட்டியில் குமரகுரு கல்லூரிக்கு அருகில், 'இ-கலை' கணினி என்ற தொழில்நுட்ப பயிற்சி மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

ஓர் ஆண்டு காலம் முழுமையாக உழைத்து, இவர் யுனிகோடில் உருவாக்கி இருக்கும் அகராதியின் பெயர் - ‘களஞ்சியம் அகராதி'.

ஆன்லைனிலும், தொழில்நுட்ப உலகிலும் தாம் கடந்து வந்த பாதையை விவரித்த சேகர், ‘‘நான் பிறந்த ஊர் போத்தம்பாளையம் என்னும் குக்கிராமம். எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத எங்கள் நெசவு குடும்பம் திருப்பூருக்கு குடிபெயர்ந்தது. அங்கு ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அறிவை கற்றுக்கொள்ளும் சூழ்நிலை ஏதுவாக இல்லை. இந்நிலையில் வானொலியிலும், பத்திரிகைகளிலும் வரும் அறிவியல் சம்பந்தமான் கட்டுரைகளை கேட்டும், படித்தும் ஆராய்ந்தும் திறமையை வளர்த்துக்கொண்டேன்.

எங்கள் கிராமத்து பள்ளியில் நாங்கள் ஆசிரியர்கள் வந்தால் "காலை வணக்கம் ஐயா'' என்றும், அட்டென்டன்ஸ் எடுக்கும்போது "உள்ளேன் ஐயா" என்றும் 10 வருடங்கள் பழகிய நாக்கு, நகரத்துக்கு வந்து “Good morning Sir”, "Present Sir”-ருக்கு பழக பல மாதங்கள் ஆகிவிடும். அந்தப் பள்ளி மாணவர்களிடம் கேட்டால் அவமானமாகிவிடும் என்பதால் அவர்களிடமும் கேட்கமாட்டோம். Dictionary என்பது படிக்கும் காலம் வரை ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். காரணம் அப்பொழுதெல்லாம் வாத்தியார் எழுதி கொடுக்கும் நோட்டு புத்தகங்கள்தான் வீட்டில் வாங்கி தருவார்கள். அதில் Dictionary இருக்காது.

கிராமத்தில் உள்ளவர்களுக்கு எப்படி தொடங்கவேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்று விளக்கமளிக்கூடியவர்கள் குறைவாக உள்ள காரணத்தால், மாணவர்கள் புரியாமல் படிப்பதனால் கால விரயத்துடன் படித்தது பயனற்றதாக ஆகிவிடுகிறது. அதைப் போக்க அனைத்தும் அடங்கிய எளிமையான ஒரே ஒரு நூல் தமிழில் இருந்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

ஆங்கிலத்தில் கணினி, மருத்துவம் மற்றும் தொழில் நுட்ப அறிவுள்ள புத்தகங்கள் ஏராளம். அவற்றில் வரும் வார்த்தைகளை புரிந்துகொள்வது மாற்று மொழிக்காரர்களுக்கு அதிலும் தமிழ் மொழி கொண்டவர்களுக்கு எப்போதுமே சவால்தான். இன்னும் நிறைய பேருக்கு உச்சரிப்பில் "Message”- “மெஜேஜ்'' ஆகிவிடும், “Fan" - “ஸ்பேன்" ஆகிவிடும்.

இன்றைய கணினி பயன்பாட்டில் இணையத்தில் இருந்து ஏராளமாக நமக்கு வேண்டிய புத்தகங்களை PDF, EBUP போன்ற கோப்புகளில் இலவசமாக Download செய்து கொண்டு படிக்கலாம். ஆனால், இங்கும் பிரச்னை வார்த்தைகளுக்கான பொருள்தான். இணையம் இருந்தால் இணையத்தில் தேடிக்கொள்ளலாம். அதில் நமது கவனமும், நேரமும் வீணாகும். இன்டர்நெட்டில் எலி பிடிக்கபோய் குரங்கை பிடித்து வருவோம்.

பத்தாவது வரை தமிழில் படித்தேன். அதுவரை தமிழில் கற்றதால் ஆங்கிலம், அறிவியல் கணினி சம்பந்தபட்ட வார்த்தைகள் மிகப் புதிதாகக இருந்தன. அதற்கு விளக்கம் தேடி நூலகம் சென்று படிப்பேன். இருந்தபோதும் ஒரு முழுமையாக என் தேடல்களுக்கான தீர்வுகள் கிடைக்கவில்லை. இதை அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டு வர வேண்டுமென்ற என்னுடைய கனவு கணினியில் சாத்தியம் என்பது புரிந்தது. இது சம்பந்தமான தேடல்களில் கணினி மொழிகளை பலவற்றையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் பிறந்தது.

நான் கணினியில் புரோகிராமிங் கற்றுக்கொள்ள PDF கோப்புகளில் உள்ள ஆங்கில புத்தகங்களை படிக்கும்போது ஏற்பட்ட இடர்கள் ஏராளம். “For loop”, “If condition”-க்கு எல்லாம் பொருள்தேடியவன் நான். இதைப்போன்ற இடர்பாடுகள் தமிழில் படிப்பவர்களுக்கு இருக்கக்கூடாது என்று அவர்களுக்கு பயன்படும் வகையில் ஒரு மென்பொருளை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம் உதித்தது. English-English ஏராளமான அகராதிகள் உண்டு. ஆனால், தமிழில் ஒரு சிலவே உண்டு. அவையும் கால மாற்றத்திற்கு ஏற்ப ஒருங்கு குறிக்கு (Unicode) மாற்றமடையவில்லை, அது தவிர, புதிய Windows 7, Windows 8 போன்ற நவீன இயங்கு தளங்களில் இயங்காது. தமிழில் Unicode அகராதிகள் ஆன்லைனில் உண்டு. ஆனால் Desktop-ல் இயங்கும் அகராதி இல்லை. இதன் விளைவாக உருவானதுதான் ‘களஞ்சியம் அகராதி'.

என்னுடைய கணினி அனுபவ அறிவைப் பார்த்து ஒரு சில மென்பொருள் கம்பெனிகள் அழைத்தபோதும், எனக்கு ஆங்கில அறிவு போதிய அளவு இல்லாமையால் அந்த வாய்ப்புகள் தவறிவிட்டன. என்னைப் போல சிரமப்படும் மாணவர்களுக்கு என்னால் இயன்ற வரையில் HTML, CSS, Javascript, Java, C, C# , SQL, Animation, Electronics மற்றும் Embedded Project போன்றவற்றை தமிழில் மாணவர்களுக்கு கற்றுத்தருகிறேன்.

கல்வியில் உயர்ந்த சமுதாயமே உலகின் உயர்ந்த சமுதாயம். அந்த உயர்ந்த நோக்கோடு தான் தமிழக அரசு அனைத்து மாணாக்கர்க்கும் மடிக்கணினி தந்துள்ளது. அதனால் மாணவர்களின் அறிவு மிகவும் மேம்பாடு அடையும். அதற்கு கூடுதல் உந்து சக்தியாக இருக்க கல்வி பயன்பாட்டிற்கான இந்த களஞ்சியம் அகராதி இலவசமாக இணையத்தில் Download செய்துகொள்ளலாம்.

இன்றைய இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் படிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் படிப்பை கெடுப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இருந்தாலும் நம் ஒவ்வொருவருக்கும் இந்த சமுதாயத்திற்கும், உலகிற்கும் செய்ய நிறைய கடமைகள் இருக்கின்றன என்பதை கருத்தில் கொண்டால் வெற்றியடைவது என்பது நிச்சயம். இந்த உலகில் வெறும் 2% மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீதி 98% Dark Mater-ராக இன்னும் கண்டுபிடிக்கபடாமல் உள்ளன. அதில் வருங்காலத்தில் தமிழகத்தின் கண்டுபிடிப்பின் பங்கு அதிகமாக இருக்கட்டும்.

எனக்கு பிடித்த பொன்மொழி உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். "என்னை தலை குனிந்து படி, உன்னை தலை நிமிரச் செய்வேன்- என்று சொன்னது புத்தகம்."

இந்த உலகம் என்பது நமக்கு சொந்தமல்ல. இதை நம் எதிர்கால சந்ததியிடம் இருந்து கடன் வாங்கியுள்ளோம். அதை பத்திரமாக, நாம் அனுபவிக்கும் இத்தனை வசதிகளுடனும் அவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும். அதுதான் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் இப்போதுள்ள தலையாய கடமை. எனவேதான் எனது ஆஃப்லைன் அகராதியை இலவசமாகவே வழங்குகிறேன்'' என்றார் சேகர்.

களஞ்சியம் அகராதியின் சிறப்புகள்:

* ஒருங்குகுறி (Unicode) கொண்டு உருவாக்கப்பட்டது.

* 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிப்பட்ட வார்த்தைகளுக்கான பொருள் கொண்டது.

* 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருள் தரும் இணைப்பு வார்த்தைகள்.

* ஆங்கிலம் - தமிழ், ஆங்கிலம் - ஆங்கிலம், தமிழ் - தமிழ் மற்றும் பல்கலைகழகக் பேரகராதி ஆகிய அனைத்து அகராதிகளையும் உள்ளடக்கியது.

* 3000-க்கும் அதிகமான படங்கள்.

* உலக நாடுகளின் கண்டம், வரைபடம், கொடி கொண்டது.

* தமிழில் (Built-in Tamil Typing) தட்டச்சு செய்து வார்த்தைகளுக்கு பொருள் தேடும் வசதி.

* தமிழிலும், ஆங்கிலத்திலும் படித்துச் சொல்லும் (LH-Michelle & LH-Michael).

* கணினியில் எங்கிருந்தும் ஒரு வார்த்தையை தேர்வு செய்துகொண்டு Shortcut key (Ctrl + ~) அழுத்தினால் வார்த்தைக்கான பொருள் கிடைக்கும்.

* தானியக்க இருமொழித் தேடுதல் (Automatic encoding)

* புதிய வார்த்தை, பொருள் மற்றும் படங்களை பயனாளரே இணைத்து கொள்ளும் வசதி.

* Free Software (இலவச மென்பொருள்)

* தமிழில் முதல் மேஜைபயன்பாட்டு (Windows Desktop) ஒருங்குகுறி (Unicode)  அகராதி.

* Destop-ல் விரும்பிய வார்த்தைகளை விரும்பிய வண்ணங்களில், எழுத்துருக்களில் அமைத்துக் கொள்ளலாம்.

* Windows XP, Windows 7, Windows 8  சார்ந்த இயங்கு தளங்களில் இயங்கும்.

சேகர் உருவாக்கியுள்ள களஞ்சியம் அகராதியை டவுன்லோடு செய்ய க்ளிக்க வேண்டிய இணைப்பு -


*

சேகரின் அதிகாரப்பூர்வ தளம் www.ekalai.com
தொடர்புக்கு - 9790057454

Related

உபயோகமான தகவல்கள் 8701713840679562972

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item