பீட்ரூட் அல்வா --- சமையல் குறிப்புகள்,
என்னென்ன தேவை? பீட்ரூட் - அரை கிலோ, வாழைப்பழம் - 10, தேங்காய் - 1, வெல்லம் - கால் கிலோ, ஏலக்காய் - 5 கிராம், முந்திரி - 25 கிராம்...

என்னென்ன தேவை?
பீட்ரூட் - அரை கிலோ,
வாழைப்பழம் - 10,
தேங்காய் - 1,
வெல்லம் - கால் கிலோ,
ஏலக்காய் - 5 கிராம்,
முந்திரி - 25 கிராம்,
திராட்சை - 50 கிராம்,
பாதாம் - 10.
எப்படிச் செய்வது?
பீட்ரூட்டை தோல் நீக்கித் துருவிக் கொள்ளவும். தேங்காயை பல் பல்லாக நறுக்கிக் கொள்ளவும். வெல்லத்தைக் கட்டிகள் இல்லாமல் பொடித்துக் கொள்ளவும். வாழைப்பழத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பீட்ரூட் துருவல், வாழைப்பழம், வெல்லத்தூள், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை ஒரு பெரிய பாத்திரத்தில் நன்றாகக் கலந்து கொள்ளவும். அத்துடன் பொடித்த முந்திரி, பாதாம், திராட்சை கலந்து, ஏலக்காய் தூள் சேர்த்துக் குளிர வைத்துப் பரிமாறவும்.
Post a Comment