பாசிபருப்பு தோசை --- சமையல் குறிப்புகள்,
தேவையான பொருட்கள் : பாசிபருப்பு - ஒரு கப் காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4 சிறிய வெங்காயம் - கால் கப் பெரிய வெங்காயம் - ஒன்று கறிவேப்பில...

பாசிபருப்பு - ஒரு கப்
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
சிறிய வெங்காயம் - கால் கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
கறிவேப்பிலை கொத்தமல்லி - தேவையான அளவு
சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
பாசிபருப்பை நன்கு ஊற வைக்கவும். சிறிய வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும்
பாசிப்பருப்பை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அதனுடன் மிளகாய், சிறிய வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம், உப்பு சேர்க்கவும்
தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து விடவும்
தோசைக்கல்லை சுட வைத்து அதில் மாவை தோசையாக வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் விடவும்
சிவந்ததும் திருப்பி போட்டு வேக விடவும். இது நன்கு வேக வேண்டும். மிதமான தீயிலேயே சுட வேண்டும்.
சூடான சத்தான பாசிபருப்பு தோசை ரெடி.
Post a Comment