இஞ்சி ரசம் --- சமையல் குறிப்புகள்,
வயிறு அப்செட் ஆனவர்களுக்கும் குழந்தை பெற்றவர்களுக்கும், குழந்தைகளுக்கும்,மற்றும் குளிர் காலத்திலும் செய்து சாப்பிடலாம். சளி, வீசிங் பிர...

வயிறு அப்செட் ஆனவர்களுக்கும் குழந்தை பெற்றவர்களுக்கும், குழந்தைகளுக்கும்,மற்றும் குளிர் காலத்திலும் செய்து சாப்பிடலாம்.
சளி, வீசிங் பிராப்ளம் உள்ள பிள்ளைகளுக்கும் இது ரொம்ப நல்லது
தேவையான பொருட்கள்
•புளி - லெமென் சைஸ்
•தக்காளி - ஒன்று
•துவரம் பருப்பு - ஒன்னற மேசை கரண்டி (வேக வைத்தது)
•மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
•உப்பு - தேவைக்கு
•வருத்து அரைக்க
•நெய் - ஒரு தேக்கரண்டி
•காஞ்ச மிள்காய் - ஒன்று
•மிளகு - 9
•சீரகம் - ஒரு தேக்கரன்டி
•கருவேப்பிலை - சிறிது
•பூண்டு - இரண்டு பல்லு
•முழு தனியா - ஒரு மேசை கரண்டி
•இஞ்சி - இரண்டு அங்குல துன்டு
•தாளிக்க
•எண்ணை - ஒரு தேக்கரண்டி
•கடுகு - அரை தேக்கரண்டி
•கருவேப்பிலை - ஐந்து ஆர்க்
•வெந்தயம் - முன்று
•கொத்து மல்லி தழை - சிறிது
செய்முறை
•துவரம் பருப்பை அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைத்து கொள்ள வேண்டும்.
•புளியை நன்கு முன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்து அதில் தக்காளி பழத்தை இரண்டாக (அ) நான்காக அரிந்து போட்டு உப்பு அரை தேக்கரண்டி , மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி போட்டு கொதிக்க விட வேண்டும்.
•வருத்து அரைக்க கொடுத்துள்ளவைகளை தனியாக நெயில் வருத்து ஆறியதும் அரைத்து தண்ணீர் அரை டம்ளர் சேர்த்து அரைத்து ஊற்றி கொள்ளுங்கள்.
•உப்பு பார்த்து விட்டு கடைசியில் கூட சேர்த்து கொள்ளுங்கள்
•தக்காளி வெந்ததும் வருத்து அரைத்து வைத்துள்ளதையும் போட்டு, வேக வைத்த பருப்பு தண்ணியும் ஊற்றிகொதிக்க விட்டு இரக்க வேண்டும்.
•கடைசியில் கடுகு, கருவேப்பிலை, வெந்தயம் தாளித்து கொட்டி கொத்து மல்லி தழை தூவி
Post a Comment