சுண்ட வத்தக்குழம்பு சுட்ட அப்பளம் --- சமையல் குறிப்புகள்,
சுண்ட வத்தக்குழம்பு சுட்ட அப்பளம் தேவையான பொருட்கள் ; காய்ந்த சுண்ட வத்தல் - ஒரு கைபிடியளவு நல்ல எண்ணெய் - 100 மில்லி + 2 டேபிள்ஸ்...

சுண்ட வத்தக்குழம்பு சுட்ட அப்பளம்
காய்ந்த சுண்ட வத்தல் - ஒரு கைபிடியளவு
நல்ல எண்ணெய் - 100 மில்லி + 2 டேபிள்ஸ்பூன்
முழுமல்லி - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1டீஸ்பூன்
மிளகு - அரைடீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 6-8
கடுகு - கால்ஸ்பூன்
வெந்தயம் - கால்ஸ்பூன்
கடலை பருப்பு- 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
மிள்காய்த்தூள் - அரைடீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
பூண்டு பெரிய பல் -3
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு
முதலில் வெறும் வாணலியில் மல்லி,சீரகம்,மிளகு,கடுகு,வெந்தயம்,கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு ஆகியவற்றை வறுத்து எடுக்கவும்.ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றலை வறுத்து எடுக்கவும்,அதிலேயே பாதி சுண்டவத்தலை(15-20) வறுத்து எடுத்து அரைக்க எடுத்து வைக்கவும்.பாதியை குழம்பில் போட வைக்கவும்,இதனில் பாதி சுண்ட வத்தலையும் சேர்த்து அரைப்பதால் குழம்பு காரம்,கசப்பு,புளிப்பு என்று சுவை அருமையாக இருக்கும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பாதி சுண்டவத்தலை எண்ணெயில் போட்டு பொரிய விடவும்.
Post a Comment