வாசகி கைமணம் - கலக்குது கோல்டன் கோகனட் !
கோகனட் கோல்டன் ஸ்வீட் தேவையானவை: தேங்காய் துருவல் - 4 கப், சர்க்கரை - ஒரு கப், வேர்க்கடலை - ஒரு கப், நெய் 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ப...
https://pettagum.blogspot.com/2012/12/blog-post_2723.html
கோகனட் கோல்டன் ஸ்வீட்
தேவையானவை: தேங்காய் துருவல் - 4 கப், சர்க்கரை - ஒரு கப், வேர்க்கடலை - ஒரு கப், நெய் 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை: அடி கனமான வாணலியில் தேங்காய், சர்க்கரை இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் கிளறவும். சர்க்கரை கரைந்து, லேசான பிசுபிசுப்போடு வரும்போது சிறிது நெய் விட்டு கிளறி, அடுப்பை அணைத்துவிடவும். இதுதான் பூரணம். வேர்க்கடலையை சிறிதளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் அரைத்து வைத்துக் கொள்ளவும். இதுதான் மேல் மாவு.
வாணலியில் எண்ணெயை ஊற்றி காய வைக்கவும். பூரணத்தை உருண்டைகளாக உருட்டி, வேர்க்கடலை மாவில் முக்கி எடுத்து காயும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
நினைத்ததும் செய்யக்கூடிய, மிகவும் சுவையான இந்த ஸ்வீட்டை 4,5 நாட்கள் வைத்து சாப்பிடலாம். வேர்க்கடலையை ஒரு மணி நேரம் ஊற வைத்தால் சீக்கிரம் அரைபடும்.
Post a Comment