மீண்டும் டெங்கு! மீள்வது எப்படி?--ஹெல்த் ஸ்பெஷல்,

மீண்டும் டெங்கு! மீள்வது எப்படி? த மிழகம் மட்டும் இன்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் மீண்டும் குலைநடுங்க வைத்திருக்கிறது டெங்கு. டெங...


மீண்டும் டெங்கு! மீள்வது எப்படி?

மிழகம் மட்டும் இன்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் மீண்டும் குலைநடுங்க வைத்திருக்கிறது டெங்கு. டெங்கு ஏற்படுத்தும் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் மக்கள் மத்தியில் கூடுதல் பயத்தை உருவாக்கி இருக்கின்றன. டெங்குவை எப்படி எதிர்கொள்வது? ராஜபாளையம் பொது மருத்துவர் கு.கணேசன், சென்னை சித்த மருத்துவர் ஜி. சிவராமன், மதுரை ஆயுர்வேத மருத்துவர் ஸ்ரீதேவி ராஜீவ் வாரியார் ஆகியோர் வழிகாட்டுகின்றனர்.
  கொசு தவிர்ப்போம்! பயம் தெளிவோம்!
மழைக் காலத்தில் சளி, காய்ச்சல் வருவது சகஜம். எல்லாக் காய்ச்சலும் டெங்கு காய்ச்சல் அல்ல. எனவே, காய்ச்சல் வந்தாலே பதற வேண்டியது இல்லை. டெங்கு காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்களிலேயே மொத்தம் நான்கு வகைகள் உண்டு. இந்த வைரஸ்களை 'ஏடிஸ் எஜிப்டி’ என்ற வகை கொசுக்களே பரப்புகின்றன. பொழுது விடியும் நேரத்திலும் பொழுது சாயும் நேரத்திலும் இந்தக் கொசுக்களின் வருகை அதிகம் இருக்கும். பகல் நேரத்திலும் இவை கடிக்கும். எனவே, வீட்டைச் சுற்றி கொசுக்கள் உருவாகாத வண்ணம் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமாக, தண்ணீர் தேங்குவதைத் தவிருங்கள். பகலோ, இரவோ... டெங்கு அபாயம் போகும் வரை கொசு விரட்டிகளைப் பயன்படுத்துங்கள். டெங்கு காய்ச்சல் தும்மல், இருமல் போன்றவை மூலம் பரவக் கூடியது அல்ல. ரத்தம் வழியாக - கொசு வழியாக மட்டுமே பரவக் கூடியது. எனவே, தொற்று வியாதி பயம் தேவையற்றது!
கொசுவை எப்படித் தவிர்ப்பது?
சுத்தமான சுற்றுச்சூழல் தவிர, வீட்டுச்சுவர்கள் மீது 'டி.டி.டி.’ மருந்தைத் தெளித்தல்,  வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் 'டெல்டாமெத்திரின்’ மருந்தைத் தெளித்தல், மக்கள் நெருக்கடி மிகுந்த குடியிருப்புகளில் 1000 கன அடி இடத்திற்கு 4 அவுன்ஸ் 'கிரிசால்’ வேதிப் பொருளைப் புகையவிடுதல் ஆகிய நடவடிக்கைகள் கொசுக்களை ஒழிக்க உதவும்!
டெங்கு வந்தால் என்ன செய்யும்?
கொசுக்கள் மூலம் உடலுக்குள் நுழையும் டெங்கு கிருமிகள் 3 முதல் 13 நாட்களுக்குள் பல்கிப் பெருகும். பொதுவாக இவை 5 முதல் 8 நாட்களுக்குள் அறிகுறிகளாக வெளிப்படும். அதிகமான காய்ச்சல் - அதாவது 104 டிகிரி பாரன்ஹீட் வரையிலான காய்ச்சல் - முதல் அறிகுறி. உடல் சோர்வு எப்போதும் இருக்கும். கூடவே கண் வலி, உடல் வலி, தலை வலி, மூட்டுவலி ஆகியவை கடுமையாக இருக்கும். வாந்தி இருக்கலாம். உடலில் அரிப்பு இருப்பதோடு, சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். உடலில் ரத்தத் தட்டுகள் எண்ணிக்கை குறைவதுதான் டெங்கு ஏற்படுத்தும் பெரும் அபாயம். இதற்கான அறிகுறி நுரையீரல், வயிறு, பல் ஈறு, சிறுநீர்ப் பாதை போன்ற இடங்களில் ரத்தக் கசிவு ஏற்படுவது. 'எலிசா’ ரத்தப் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் டெங்கு பாதிப்பை உறுதிசெய்யலாம்!
சித்தர்கள் அருளிய கொடை!
சித்த மருத்துவத்தில் டெங்கு காய்ச்சலை எதிர்கொள்ள மிகச் சிறந்த நிவாரணிகள் உள்ளன. நிலவேம்பும் ஆடாதொடையும். அனைத்து நாட்டு மருந்துக் கடைகள் மட்டும் இல்லாமல், அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவுகளிலும் நிலவேம்பு நீரும் ஆடாதொடை நீரும் கிடைக்கும். காலை உணவுக்கு முன்பு நிலவேம்புக் குடிநீர் 2 டீ ஸ்பூனை 200 மி.லி. தண்ணீரில் விட்டு, கால் டம்ளர் ஆகும் வரை கொதிக்க வைத்து, வடிகட்டிக் குடிக்க வேண்டும். இதேபோல, இரவு உணவுக்கு முன்பு ஆடாதொடை நீர் 2 டீ ஸ்பூன் எடுத்து, 200 மி.லி. தண்ணீரில் விட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டிக் குடிக்க வேண்டும். தினமும் இந்தக் கஷாயத்தை 7 நாட்கள் குடித்துவந்தால் நோய் குணமாகும். கடந்த 2006-ல் சிக்குன்குன்யா நோயால் பாதிக்கப்பட்டபோது, தமிழகம் இந்த நிலவேம்புக் குடிநீர்க் கஷாயத்தின் துணையோடுதான் அந்த நோயை எதிர்கொண்டது என்பது இங்கே  நினைவுகூரத்தக்கது!
மழைக்காலத்தை மூலிகை டீயோடு கொண்டாடுங்கள்!
பொதுவாகவே, மழைக்காலத்தில் நோய்கள் அண்டாமல் இருக்க, மூலிகை டீ உதவியாக இருக்கும். சுக்கு, பனங்கற்கண்டு, துளசி, மாதுளம் பழத்தோல், கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் தூள்... இவற்றில் எவை எல்லாம் கிடைக்கிறதோ அவற்றை எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் போட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டிக் குடிக்கலாம்
 டெங்கைக் கொல்ல மருந்து என்ன?
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கத் தடுப்பு பூசி, மருந்துகள் ஏதும் கிடையாது. அதேபோல, ஆங்கில மருத்துவத்தில் இதற்கெனப் பிரத்யேகமான சிகிச்சையும்  கிடையாது. சாதாரணக் காய்ச்சலுக்கான மருந்து மாத்திரைகள்தான் டெங்குவுக்கும். ஆனால், சிறப்புக் கவனம் அளிப்பது முக்கியம். உடலில் லட்சக் கணக்கில் உள்ள ரத்தத்தட்டுகளை வெறும் ஆயிரம் என்கிற அளவுக்குக் குறைத்துவிடக் கூடியது டெங்கு. இதனால், நோய் எதிர்ப்புத் திறன் முற்றிலுமாகக் குலைந்து மரணத்தைக் கொண்டுவந்துவிடும். எனவே,  இவர்களுக்கு ரத்தம் செலுத்துதல், ரத்தத் தட்டு அணுக்கள் செலுத்துதல் போன்ற சிகிச்சைகள் அவசியம் தேவைப்படும். ஆகவே, துரிதமாகச் செயல்பட வேண்டியது மிக முக்கியம்!
நல்லாச் சாப்பிடுங்க!
டெங்கு பெரிய அளவில் பாதிப்பை உருவாக்குவது யாரிடம் தெரியுமா? முதியவர்களிடமும் குழந்தைகளிடமும். காரணம்... நோய் எதிர்ப்புச் சக்தி இவர்களுக்குக் குறைவு. பொதுவாகவே இப்படிப்பட்ட நோய்கள் பரவும்போது, அதை எதிர்கொள்ள நல்ல உணவு முக்கியம். நாட்டுக்கோழி ரசம், நல்லி எலும்பு சூப், பேரீச்சை, முட்டை, பால், காய் - கனிகள்... இஷ்டம்போல வெட்டுங்க பாஸ்

Related

ஹெல்த் ஸ்பெஷல் 378476462623973285

Post a Comment

1 comment

அரையாய் நிறை said...

payanulla pathivu..nandri.
சுத்தமான சுற்றுச்சூழல் தவிர, வீட்டுச்சுவர்கள் மீது 'டி.டி.டி.’ மருந்தைத் தெளித்தல், வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் 'டெல்டாமெத்திரின்’ மருந்தைத் தெளித்தல், மக்கள் நெருக்கடி மிகுந்த குடியிருப்புகளில் 1000 கன அடி இடத்திற்கு 4 அவுன்ஸ் 'கிரிசால்’ வேதிப் பொருளைப் புகையவிடுதல் ஆகிய நடவடிக்கைகள் கொசுக்களை ஒழிக்க உதவும்!//

intha marunthugal poochi kolli marunthu kadaikalil illai enkirargal..enge kedaikum endru koorinal payanullathaga irukum..nandri.

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item