ஈசியா பரோட்டா சுடலாம் வாங்க---சமையல் குறிப்புகள்,

பேச்சிலர்ஸ்க்காகத்தான் இந்த ஈசி பதிவு.வீட்டில் பரோட்டா சுடனும் என்றால் ஒரு சிலர் அதனை பெரிய மலையாகக் கருதி செய்வதேயில்லை.பரோட்டா வெளியில்...



பேச்சிலர்ஸ்க்காகத்தான் இந்த ஈசி பதிவு.வீட்டில் பரோட்டா சுடனும் என்றால் ஒரு சிலர் அதனை பெரிய மலையாகக் கருதி செய்வதேயில்லை.பரோட்டா வெளியில் சாப்பிட்டால் உடல் நலனுக்கு கேடு.நிறைய எண்ணெய் மற்றும் மேற்சாமான் சேர்ப்பாங்கன்னு பயம்.அதனையே நாம் எப்பவாவது வீட்டில் ஆசைக்கு செய்து சாப்பிடலாம் .சிம்பிளாக அரை மணி நேரத்தில் எப்படி பரோட்டா சுடுவது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
தரமான மைதா மாவு - 300 கிராம்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
சீனி - 1 டீஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன் (அல்லது சுவைக்கு)
தண்ணீர் - முக்கால் கப்

ஒரு பவுலில் தண்ணீர்,உப்பு,சீனி போடவும்.பின் மைதா மாவு சேர்க்கவும்.நன்கு கலந்து பிசைந்து எடுக்கவும்.அத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து உருண்டையாக்கி மூடி அரை மணி நேரம் வைக்கவும்.
அரைமணி நேரம் கழித்து கையால் சிறிது நிமிண்டி ஆறு உருண்டைகளாக பிரிக்கவும்.

ஒரு உருண்டையை எடுத்து சிறிய வட்டமாக பரத்தி சிறிது எண்ணெய் தடவி நான்காக  மடித்து வைக்கவும்.ஆறு உருண்டைகளையும்  செய்து கொள்ளவும்.இரண்டாவது ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயை  மடிக்க தடவ பயன் படுத்த வேண்டும்.
பின்பு  சதுரமாக பரத்தி கொள்ளவும்.கையால் கூட பரத்தலாம்.கையால் பரத்தினால் நன்கு பொங்கி வரும்.
தவா சூடானவுடன் பரத்திய சதுர பரோட்டாவை போட்டு வேக விடவும். மேற்புறம் கலர் மாறி வரும்.

திருப்பி போடவும். திட்டு திட்டாக இளஞ்சிவப்பு புள்ளி வரும் பொழுது எண்ணெயை சிறிது சிறிதாக இருபக்கமும் தடவி சுட்டு எடுக்கவும்.அடுப்பை மீடியம் சிம்மில் வைத்து சுட வேண்டும்.மீதியுள்ள ஒர் டேபிள் ஸ்பூன் எண்ணெய் சுடும் பொழுது தடவ பயன்படுத்தலாம்.

ஆக ஆறு பரோட்டா செய்ய மொத்தம் மூன்று டேபிள்ஸ்பூன் எண்ணெய் தேவைப்படும் .

சுட்டு எடுத்த பரோட்டாவை  தட்டி எடுத்து பாரிமாறவும்.அடுக்காக சூப்பராக வரும்.வீச்சு பரோட்டா செய்ய தெரியாதவங்க  செய்து அசத்தலாம்.
சும்மாவே சீனி தொட்டு சாப்பிடலாம்.அல்லது தேங்காய் வெங்காய சட்னி கூட போதும்.அடுத்து சட்னி பதிவு .ஒ.கே வா?
அல்லது எனக்கு குருமா தான் பிடிக்கும் என்றால் சிக்கன் உருளைக்கிழங்கு குருமா சூப்பர் காம்பினேஷன்.

Related

சமையல் குறிப்புகள் 8835243915104034565

Post a Comment

2 comments

Easy (EZ) Editorial Calendar said...

உங்கள் தகவலுக்கு நன்றி.....அடுத்து குருமா குறிப்பு போடுங்க...

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

ப.கந்தசாமி said...

நல்ல குறிப்பு.

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item