கருவேப்பிலை துவையல்---சமையல் குறிப்புகள்,
சமயத்தில் வீட்டில் கருவேப்பிலை அதிகமாக இருக்கலாம். அப்போது இந்த துவையலை செய்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்: கருவேப்பிலை ஒரு கப், சின்...

சமயத்தில் வீட்டில் கருவேப்பிலை அதிகமாக இருக்கலாம். அப்போது இந்த துவையலை செய்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்: கருவேப்பிலை ஒரு கப், சின்ன வெங்காயம் 2, பச்சை மிளகாய் 3, புளி சிறிதளவு, தேங்காய் துருவல் சிறிதளவு, உப்பு, எண்ணெய் 2 ஸ்பூன்.
செய்முறை: கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் இவற்றை ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். ஆறிய பின் மிக்ஸியில் போட்டு, புளி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கர கரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் எண்ணையில் கடுகு தாளித்து கொட்டவும்.
ரசம், சாம்பார் சாதத்திற்கு அருமையான காம்பினேஷன். இட்லிக்கு தொட்டுக்கொள்ளவும் சுவையாக இருக்கும்.
Post a Comment