ஈசி பெப்பர் சிக்கன்---சமையல் குறிப்புகள்,
சிக்கன் - அரை கிலோ பெரிய வெங்காயம் - இரண்டு தக்காளி - இரண்டு பச்சை மிளகாய் - இரண்டு காய்ந்த மிளகாய் - இரண்டு கொத்தமல்லி தழ...

சிக்கன் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
பச்சை மிளகாய் - இரண்டு
காய்ந்த மிளகாய் - இரண்டு
கொத்தமல்லி தழை - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
பட்டை, லவங்கம், ஏலக்காய் - எல்லாவற்றிலும் இரண்டு
கசகசா - இரண்டு தேக்கரண்டி
சோம்பு - இரண்டு தேக்கரண்டி
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
க்ரஷ்ட் பெப்பர் - இரண்டு தேக்கரண்டி
சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து கழுவி வைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கசகசா, சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய், சேர்த்து தாளிக்கவும்.
ஒரு நிமிடம் கழித்து, வெங்காயம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், சேர்த்து நன்றாக வதக்கவும், பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
தக்காளி சேர்த்து நன்றாக கரையும் வரை வதக்கவும்.
பின் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறவும்.
ஐந்து நிமிடம் கழித்து தேவையான அளவு உப்பு, க்ரஷ்ட் பெப்பர், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
பச்சை வாசனை போனதும், சிக்கன் வேக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
பின் தண்ணீர் நன்றாக வற்றி சிக்கன் வெந்ததும் இறக்கி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். சுவையான பெப்பர் சிக்கன் தயார். இது சப்பாத்தி, தோசை அல்லது சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்
காரம் அதிகம் விரும்பாதவர்கள் மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி மட்டும் சேர்த்து கொள்ளவும். பச்சை மிளகாயோ, காய்ந்த மிளகாயோ சேர்க்க வேண்டாம் மேலும் இதில் உருளைக்கிழங்கை சேர்த்தும் செய்யலாம். உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொண்டு சிக்கனை சேர்த்து தூள் வகைகள் எல்லாம் சேர்த்து கிளறும் நேரத்தில் உருளைக்கிழங்கை சேர்த்து செய்யலாம்.
Post a Comment