பாஸ்போர்ட் தொடர்பான அத்தனை சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார்

பாஸ்போர்ட் தொடர்பான அத்தனை சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் துணை பாஸ்போர்ட் அதிகாரி க . ருக்மாங்கதன் (பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம், சென...


பாஸ்போர்ட் தொடர்பான அத்தனை சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் துணை
பாஸ்போர்ட் அதிகாரி க . ருக்மாங்கதன் (பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம், சென்னை).
பாஸ்போர்ட் விண்ணப்பித்ததிலிருந்து எத்தனை நாள் கழித்து கிடைக்கும்? கட்டணம் எவ்வளவு?
இரா.ஸ்ரீதர், திருப்பத்தூர்.
''பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள் கிடைக்கும். இதில், போலீஸ் விசாரணைக்கான காலம் சேராது. புது பாஸ்போர்ட் விண்ணப்பிக்க கட்டணம் ரூ.1,000. விரைவாக, உடனடியாக பாஸ்போர்ட் வேண்டும் என்றால் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். இதில் உடனே பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2,500.''
எனது மகள் பிறந்தநாள் 23.4.1994. இது கோயம்புத்தூர் மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் 22.4.1994 என்று உள்ளது. நான் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்தபோது ஒரு நாள் வித்தியாசம் உள்ளதால் தர மறுத்துவிட்டார்கள். பாஸ்போர்ட் பெற நான் என்ன செய்ய வேண்டும்?
- ராஜேந்திரன், கோயம்புத்தூர்.
''முதலில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் சரியான பிறப்பு சான்றிதழை பெறவேண்டும். அந்த சரியான பிறப்பு சான்றிதழைக் கொண்டு பள்ளி, கல்லூரி சான்றிதழ்களில் மாற்றவேண்டும். அதன்பிறகு பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.''
''எனக்கு ஒரு கம்பெனி மூலம் வெளிநாட்டுக்குப் போக வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் படித்தது நான்காம் வகுப்பு. பிறப்பு சான்றுவேண்டும் என்று கேட்கிறார்கள். என்னிடம் அது இல்லை. இந்நிலையில் நான் என்ன சான்று கொடுத்து பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்கலாம்?  
இரா.சுதாகரன், கோயம்புத்தூர்.
''எட்டாம் வகுப்புக்கு குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண்ணப்பிக்கலாம். 26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.''
எனது பாஸ்போர்ட் புத்தகத்தில் செல்வகுமாரி என்பதற்குப் பதிலாக செல்வகுமார் என அச்சாகி உள்ளது. அதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?
செல்வகுமாரி, நத்தமேடு, சிதம்பரம் தாலுகா.
''நீங்கள் கொடுத்த ஆவணத்தில் செல்வகுமாரி என்று இருந்தால், புது பாஸ்போர்ட் கட்டணம் எதுவும் இல்லாமல் வழங்கப்படும். ஆவணத்தில் தவறு இருந்தால் சரியான ஆவணத்துடன் மீண்டும் கட்டணம் கட்டி விண்ணப்பிக்க வேண்டும்.''
எனது தங்கை      பஞ்சாயத்து மூலம் எழுதிவாங்கி இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். எனது தங்கை மகன் கல்வி மாற்றுச் சான்றிதழில் (டிசி) முதல் அப்பாவின் பெயர் உள்ளது. ரேஷன் கார்டில் இரண்டாவது அப்பா பெயர் உள்ளது. பாஸ்போர்ட் எடுப்பதில் ஏதாவது சிக்கல் வருமா?
பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.
''தங்களின் தங்கை மகனின் முதல் அப்பா அதாவது, உயிர்கொடுத்த அப்பாவின் பெயருள்ள சான்றிதழ்களைக் கொடுத்து பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட்டில் ரத்த உறவு கொண்ட பெற்றோர்கள் (பயோலாஜிக்கல் பேரன்ட்ஸ்) பெயர்தான் இடம்பெறும்.''
எனது மகள் திருச்சியில் பி.இ. மூன்றாம் ஆண்டு படிக்கிறாள். எனக்கு புதுச்சேரியில் நிரந்தர முகவரி உள்ளது. திருச்சி முகவரியில் என் மகளுக்கு பாஸ்போர்ட் வாங்கினால் முகவரி மாற்ற வேண்டியது வரும். நாங்கள் எந்த முகவரியில் வாங்குவது என்று கூறவும்?
கே.உஷா கிருஷ்ணமூர்த்தி, புதுச்சேரி.
''ஒருவர் தற்போது எந்த முகவரியில் வசிக்கிறாரோ அந்த முகவரியைக் குறிப்பிட்டுதான் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த வகையில் திருச்சி கல்லூரி முகவரியைக் குறிப்பிட்டு பாஸ்போர்ட் வாங்கிக்கொள்ளலாம். படிப்பு முடிந்தவுடன் நிரந்தர முகவரிக்கான தக்க ஆவணங்களை சமர்ப்பித்து முகவரியை மாற்றிக்கொள்ளலாம். இதற்கு கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும்.''

Related

உபயோகமான தகவல்கள் 913294388392112156

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item