கன்றுகளைக் காக்கும் குடற்புழு நீக்கம்!

கன்றுகளைக் காக்கும் குடற்புழு நீக்கம்! சினை மேலாண்மை பற்றிப் பேசும் குறுந்தொடர் - 2கால்நடைமுனைவர் க.கிருஷ்ணகுமார், கு ழந்தை பிறந்த ...

கன்றுகளைக் காக்கும் குடற்புழு நீக்கம்!

சினை மேலாண்மை பற்றிப் பேசும் குறுந்தொடர் - 2கால்நடைமுனைவர் க.கிருஷ்ணகுமார்,


குழந்தை பிறந்த தகவல் தெரிந்தவுடன் நாம் அனைவரும் கேட்பது ‘ஆணா, பெண்ணா, குழந்தை எவ்வளவு எடை’ என்ற கேள்விகள்தான். குழந்தையின் எடை 3 கிலோவுக்கு மேல் இருந்தால், ஆரோக்கியமாக இருக்கின்றது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், பசு கன்று ஈனும்போது கிடாவா, கிடேரியா என்று ஆர்வமோடு பார்க்கும் நாம், அதன் எடை குறித்துக் கவலைப்படுவதில்லை. பிறந்த கன்றையும் எடைபோட்டுப் பார்க்க வேண்டியது அவசியம்.

தாய்ப்பசுவின் எடையில் பத்து சதவிகித அளவு பிறந்த கன்றின் எடை இருக்க வேண்டும். அதாவது பசு 300 கிலோ எடையிலிருந்தால், கன்று குறைந்தபட்சம் 30 கிலோ எடை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக்கன்று ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். ஒருவேளை எடை குறைவாகப் பிறந்திருந்தால் அக்கன்றுக்குக் கூடுதல் கவனம் கொடுத்துப் பராமரிக்க வேண்டும்.

கன்றுபோட்ட அரைமணி நேரத்தில் சீம்பாலைக் குடிக்கவிட வேண்டும். சத்தான சீம்பால்தானே என்று அதையும் அதிகமாகக் குடிக்கவிடக் கூடாது. கன்று அதிகமாகச் சீம்பால் பருகும்போது, கன்றுக்கு ஒவ்வாமை ஏற்படுவதோடு, செரிமானக் கோளாறும் ஏற்பட்டுப் பேதி உண்டாகும். அதேநேரத்தில் கன்றின் எடைக்குத் தகுந்த அளவு சீம்பாலைக் கறந்து புட்டியில் (காய்ச்சாமல்) ஊற்றி புகட்ட வேண்டும். கன்றுபோட்ட
5 நாள்களுக்குள் சீம்பால் நின்றுவிடும். அதன்பிறகு 30 கிலோ எடையுள்ள கன்றுக்குத் தினமும் மூன்று லிட்டர் பால் தேவை. அதை இரண்டாகப் பிரித்துக் காலை, மாலை என இருவேளைகள் கொடுத்து வர வேண்டும்.

அடுத்த முக்கியமான விஷயம், கன்றுகளை நேரடியாகக் காம்புகளைச் சப்பிப் பால் குடிக்கவிடக் கூடாது. பாலைக் கறந்து அதைக் காய்ச்சி, ஆறவைத்து புட்டியில் ஊற்றிக் கன்றுகளுக்குப் புகட்ட வேண்டும். இப்படிச் செய்வதை இயற்கைக்கு முரணானது என்று பலர் நினைக்கலாம். ஆனால், அறிவியல் ரீதியாக இதுதான் சரி. ஒரே வயது கொண்ட கன்றுகளை ஒன்றாகச் சேர்த்துக் கொட்டகையில்விட்டு, தனியாகப் பால் கொடுத்து வளர்ப்பதுதான் சிறந்தது. எங்கள் கால்நடை ஆராய்ச்சிப் பண்ணையில் இப்படித்தான் வளர்க்கிறோம்.

கன்றுகளை நேரடியாகப் பால் குடிக்க விடும்போது, நமக்குத் தெரியாமலேயே பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஒருமுறை திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து ஒரு விவசாயி என்னை அழைத்து, ‘கன்று பால் குடிக்க மாட்டேங்குது டாக்டர்’ என்று சொன்னார். உடனே நான் சென்று தாய்ப்பசுவைப் பரிசோதித்தபோது, அதன் இரண்டு காம்புகளில் சீழ்ப் பிடித்துப் புண்கள் இருந்தன. உடனே, அந்தக் காம்புகளுக்கு மருத்துவம் செய்து, மற்ற இரண்டு காம்புகளிலிருந்து பாலைக் கறந்து அதைக் காய்ச்சி ஆறவைத்து, கன்றுக்குப் புகட்டச் சொன்னேன். அந்தப்பசுவுக்கு மடி நோய் தாக்கியிருக்கிறது. அந்த விஷயம் தெரியாத விவசாயி, கன்றை அப்படியே பால் குடிக்கவிட்டு வந்திருக்கிறார். இதுபோன்ற பாதிப்புகளைத் தவிர்க்கத்தான் கன்றுகளுக்குப் பாலைக் கறந்து தனியாகக் குடிப்பாட்டி வர வேண்டும் என்கிறேன்.

இப்படி காம்புகளில் நோய்த்தொற்று, வீக்கம் போன்ற பல பாதிப்புகள் வர வாய்ப்புகள் உண்டு. கன்றைப் பால் குடிக்க விடும்முன்பு காம்புகளைக் கழுவ நாம் மறந்துவிடுகிறோம். பால் கறக்கும்போதுதான் காம்புகளைக் கழுவுகிறோம். சாணம், மூத்திரத்தில் படுத்து எழும் பசுக்களின் மடியில் கிருமிகள் தொற்ற வாய்ப்புகள் உண்டு. கன்றை, அப்படியே பால் குடிக்க விடும்போது, கன்றுகளுக்கும் கிருமிகள் தொற்றி நோய்கள் உண்டாகும். இன்னொரு விஷயம் பாலைக் கறந்து கொடுக்கும்போது தேவையான அளவு பாலைக் கன்றுக்குக் கொடுக்க முடியும். அதனால், சரிவிகிதச் சத்துகள் கிடைப்பதை உறுதிசெய்ய முடியும்.

பாலைக்கறந்து புகட்டும்போது, பசு எவ்வளவு பால் கொடுக்கிறது என்பதையும் துல்லியமாக அறிய முடியும். தீவனப்பற்றாக்குறை, சினைக்கு வருவது, வேறு ஏதாவது நோய்கள் போன்ற காரணத்தால் பால் சுரப்புக் குறையும். ஆனால், அதை நாம் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. பால் அளவு குறையும்போது, கன்று குடித்திருக்கும் என்று நினைத்துவிடுவோம். கறந்து புகட்டும்போது, பசுவின் ஆரோக்கியம் குறித்தும் தெரிந்துகொள்ள முடியும். பெரும்பாலான பசுக்களுக்கு நோய்த்தொற்று இருப்பதால், பாலைக் கறந்து காய்ச்சி, ஆறவைத்துக் கன்றுகளுக்குக் கொடுப்பதுதான் சிறந்தது.

இப்படிச் சொல்லும்போது, ‘காலங்காலமா நேரடியாத்தான் பால் குடிக்கவிடுறோம். நீங்க மாத்திச்சொல்றீங்களே’ என்று சில விவசாயிகள் கேட்கிறார்கள். நியாயமான கேள்விதான். ஆனால், அன்று இருந்த கொட்டகைச் சுகாதாரம் இப்போது இல்லை. அன்று இருந்த மேய்ச்சல்முறை இப்போது இல்லை. அன்று பசுக்களுக்குச் சினை பிடிப்பதில் பிரச்னை இல்லை. கன்றுகளின் இறப்பு விகிதம் மிகவும் குறைவாகத்தான் இருந்தது. ஆனால், இன்று நிலைமையே தலைகீழாகத்தான் இருக்கிறது. அதனால்தான், அறிவியல் ரீதியான வளர்ப்பு அவசியமாகிறது.

நடைமுறையில் பாலைக் கறந்து காய்ச்சிக் கொடுக்க முடியாதவர்கள், கன்றுக்குத் தேவையான அளவு பாலைக் குடிக்க அனுமதிக்க வேண்டும். ‘எவ்வளவு பாலைக் கறந்தாலும் பசு கன்றுக்காகப் பாலை வைத்திருக்கும்’ என்று சிலர் நம்புகிறார்கள். அது தவறான நம்பிக்கை. கன்று, தீவனத்தை உண்ணத் துவங்கும் வயதுவரை தேவையான அளவு பால் கொடுக்க வேண்டியது அவசியம். தீவனம் எடுத்துக்கொள்ள ஆரம்பித்த பிறகு, உடல் எடையில் 5 சதவிகித அளவு மட்டும் பால் கொடுத்தால் போதும். நன்றாகத் தீவனம் எடுக்க ஆரம்பித்த பிறகு, பால் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளலாம்.

பசுந்தீவனத்தில், வைட்டமின் ஏ சத்தின் உற்பத்திக்கான மூலப்பொருள் ‘கரோட்டீன்’ இருப்பதால், கிடேரிப்பருவத்தில் பசுந்தீவனம் கண்டிப்பாகத் தேவை. இச்சத்து கிடைக்கும்போது கன்றுகளின் உடல் வளர்ச்சி மற்றும் கருப்பை வளர்ச்சி நன்றாக இருக்கும். இதோடு சினைப் பிடிப்பு தன்மை அதிகரிக்கும்.

கன்றுப் பராமரிப்பில் முக்கியமான விஷயம், குடற்புழு நீக்கம். கன்றுப் பருவத்திலிருந்து இதைக் கடைப்பிடித்தால், அதன் வளர்ச்சி நன்றாக இருக்கும். ஆனால், பெரும்பாலான விவசாயிகள், குடற்புழு நீக்கம் குறித்துச் சரியாகத் தெரிந்து வைத்திருப்பதில்லை. கன்றின் வயிற்றிலுள்ள நாடாப்புழுக்கள், உருளைப் புழுக்கள், தட்டைப்புழுக்கள் ஆகியவைதான் குடற்புழுக்கள். இவை கன்றின் வயிற்றில் வளர்ந்து ஊட்டச்சத்துகள், ரத்தம் ஆகியவற்றை உறிஞ்சிவிடும். இதனால், கன்றுகள் பலவகைகளில் பாதிக்கப் படுகின்றன. தீவனம் எடுப்பதில் பிரச்னை, செரிமானக் கோளாறு, வளர்ச்சி குன்றுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதனால், குடற்புழு நீக்கம் அவசியமான ஒன்று.
பிறந்த 5-ம் நாளிலிருந்து 10-ம் நாளுக்குள் குடற்புழு நீக்க மருந்தைக் கொடுக்க வேண்டும். முதல்முறை மருந்து கொடுத்த 15-ம் நாளில் மறுபடியும் கொடுக்க வேண்டும். அதன்பிறகு மாதம் ஒருமுறை குடற்புழு நீக்க மருந்தைக் கொடுத்து வர வேண்டும். கன்றுக்கு ஒரு வயதான பிறகு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்கம் செய்து வர வேண்டும். நாட்டு மாடுகள், கலப்பின மாடுகள் என அனைத்து வகையான மாடுகளுக்கும் குடற்புழு நீக்கம் செய்யலாம்.

கால்நடைகளுக்கான மருந்துகள் விற்கும் கடைகளில் மாத்திரை மற்றும் திரவ வடிவில் குடற்புழு நீக்க மருந்துகள் கிடைக்கின்றன. ஆனால், கால்நடை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வாங்கிப் பயன்படுத்துவது நல்லது. அதேபோல மருந்தின் பெயர், மருந்து கொடுக்கும் நாள், கொடுக்கும் அளவு போன்றவற்றைத் தவறாமல் குறித்து வைக்க வேண்டும்.

இதனால், சரியான காலத்தில் மருந்து கொடுக்க முடியும். குடற்புழு நீக்க மருந்துக்கு மட்டுமல்லாமல் கன்றுக்குப் போடப்படும் ஊசிகள், கொடுக்கும் மருந்துகள் ஆகியவற்றைச் சரியாகக் குறித்து வந்தால், தொடர் வைத்தியம் செய்ய மிகவும் உதவியாக இருக்கும். வழக்கமாக நாம் பார்க்கும் மருத்துவர் இல்லாத நேரங்களில் வேறு கால்நடை மருத்துவரிடம் சிகிச்சை பெற நேர்ந்தால், இந்தக் குறிப்புகள் உதவியாக இருக்கும்.
-கறக்கும்.

கன்றுகளுக்கு எத்தனை நாள்கள் பால் கொடுக்கலாம்?

பிறந்ததிலிருந்து 6-ம் மாதம் வரை இளங்கன்றுப்பருவம், 6-ம் மாதத்திலிருந்து 12-ம் மாதம் வரை வளர்ந்த கன்றுப்பருவம், 12-ம் மாதத்துக்குமேல், கிடேரிப்பருவம், முதல்கன்று ஈன்றபிறகு பசு என நான்கு பருவங்களாக கன்றின் வளர்ச்சியைப் பிரிக்கலாம். இதில் இளங்கன்றுகளுக்கு மூன்று மாதங்கள் வரை பால் மட்டும்தான் உணவு. மேய்ச்சலுக்குச் செல்லும் கன்றுகள், மூன்றாம் மாதத்துக்குப் பிறகு தாமாகவே பசுந்தீவனம் சாப்பிட ஆரம்பித்துவிடும். ஆனால், பண்ணையில் பராமரிக்கும் கன்றுகளுக்கு நாம்தான் தீவனம் கொடுத்துப் பழக்க வேண்டும். கன்றுகள் பசுந்தீவனத்தை எடுத்துக்கொள்ளும் விகிதப்படிப் பாலின் அளவைக் குறைத்துக்கொண்டே வர வேண்டும். ஒரு கட்டத்தில் கன்றுகள் நன்கு தீவனம் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தபிறகு, பால் கொடுப்பதை நிறுத்திவிடலாம்.

சினைப் பிடிக்க வைக்கும் முளைகட்டிய கொள்ளு...

முளைகட்டிய கொண்டைக்கடலை அல்லது முளைகட்டிய கொள்ளு ஆகியவற்றைக் கொடுப்பதன்மூலம் மாடுகளில் வைட்டமின்-ஏ சத்துக்குறைப்பாட்டை நிவர்த்தி செய்யலாம்.

அதேசமயம் மாடுகள் பருவத்துக்கு வரும் சமயங்களில் இப்பயறு வகைகளில் ஏதாவது ஒன்றைத் 100 கிராம் எடுத்து ஊறவைத்து முளைகட்ட வேண்டும். இதை தினமும் ஒருவேளை என 3 மாதங்கள் கொடுத்து வந்தால், கருப்பை திடம் பெற்று கருமுட்டை நன்றாக உற்பத்தியாகும். இதனால், பசுக்கள் உடனடியாகச் சினைக்கு வரும்.

Related

கால்நடை வளர்ப்பு 8796971972741969415

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item