அசத்தலான 'லெமன் சிக்கன்' !

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது  வீக் எண்ட். விடுமு...


வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது  வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'லெமன் சிக்கன்' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி.
தேவையானவை:
எலும்பு நீக்கிய சிக்கன்  - அரை கிலோ
தோல் நீக்கிய இஞ்சி - ஒரு சின்ன துண்டு
தோல் நீக்கிய பூண்டு - 10 பல்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்  - 100 கிராம்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
புளிக்காத தயிர் - 100 மில்லி
எலுமிச்சை சாறு  - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 30 மிலி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தயிரை கட்டியில்லாமல் நன்கு அடித்துவைக்கவும். சிக்கனை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி, சுத்தம் செய்து கொள்ளவும். அதனுடன் சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். இஞ்சி, பூண்டை அம்மியில் தட்டிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியவுடன் ஊறவைத்திருக்கும் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். சிக்கன், வெங்காயம் இரண்டும் சேர்த்து சிறிதளவு பொன்நிறமாக வந்தவுடன் தட்டிய இஞ்சி, பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து பச்சை வாசனை நீங்கும்வரை நன்றாக வதக்கி அடுப்பை அணைக்கவும்.
எலுமிச்சை சாறு, கட்டியில்லாமல் நன்கு அடித்து வைத்த தயிர், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சிக்கன் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு மீண்டும் அடுப்பில் வைத்து, மிதமான தீயில் கலவையை இரண்டு நிமிடங்கள் வரை வைத்து கலக்கிவிட்டு, குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும். பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறவும்.
லெமன் சிக்கனை, சாதம் அல்லது சப்பாத்தி வகைகளுடன் சாப்பிடலாம்.
குறிப்பு: எலுமிச்சை சாறு, தயிர் சேர்க்கும்போது அடுப்பை எறிய விட்டால், திரிந்து போக வாய்ப்புள்ளது. எனவேதான், அடுப்பை அணைத்து வைத்து எலுமிச்சை சாறு, தயிர் சேர்த்து கலக்கிவிட்டு பின்னர் அடுப்பில் வைத்து சிறிது நேரம் வேகவிடலாம். லெமன் சிக்கன் செய்யும்போது, இந்த விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ளவது பயன்தரும்.

Related

சமையல் குறிப்புகள்-அசைவம்! 4879706895224747737

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item