அறிவுக்கதை ...! படித்ததில் பிடித்தது!

படிப்பினைக் கதைகள் ...! நேரமும், சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம் எனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம். மெத்த படித்த விஞ்ஞானி ஒருவர...


படிப்பினைக் கதைகள் ...!
நேரமும், சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம்
எனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம்.

மெத்த படித்த விஞ்ஞானி ஒருவர்.. தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது..
கடை ஏதும் இல்லை.. கடை குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கிறது..கூட யாரும் வராததால் அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்..
அனைத்து போல்ட்டையும் கழட்டி விட்டு ஸ்டெப்னி எடுக்க போகும் போது கால் இடறி கீழே விழுந்தார்.. கையில் வைத்திருந்த போல்ட்கள் ஒரு குட்டையில் விழுந்து விட்டது..
இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தார்..
அப்பொழுது கிழிந்த ஆடையோடு ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்தான்.. அந்த வழிப்போக்கன், இவரைப்பார்த்து ஐயா என்ன ஆச்சு.. என்றான். இவரோ இவனிடம் சொல்லி என்ன ஆக போகிறது என்று எண்ணிய விஞ்ஞானி ஒன்றும் இல்லை நீங்கள் போகலாம்..என்றார்.
அந்த வழிப்போக்கன் கிளம்ப எத்தனித்தான்.. அந்த விஞ்ஞானிக்கு அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது.. இந்த சாக்கடை குட்டையில் இவனை விட்டால் யாரும் இறங்க மாட்டார்கள், அதனால் இவனை இறங்க சொல்லலாம் என்று எண்ணி அவனிடம், நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், அந்த குட்டையில் விழுந்த என்னுடைய போல்ட்டை எடுத்து தாருங்கள் என்றார்..
ஒ.. இது தான் உங்கள் பிரச்சனையா..? ..நான் அந்த குட்டையில் இறங்கி எடுத்து தர ஆட்சேபனை ஏதும் இல்லை..
ஆனால் அதை விட ஒரு சுலப வழி இருக்கிறது..
மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்களை கழட்டி இந்த சக்கரத்தை மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள்ளுங்கள் என்று சொன்னார்.
தான் இத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தும் நமக்கு இந்த சுலப வழி தெரியாமல் போய் விட்டதே என்றும்..
இவருக்கு மூளை இல்லை என்றும் தப்பாக நினைத்ததற்கு
வெட்கி தலை குனிந்தான்..
நீதி: யாரையும் குறைவாக எண்ணக்கூடாது.,
ஆம்..நண்பர்களே..,
உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு;
உயிரற்ற பறவையோ எறும்புக்கு உணவு.
ஒரு மரத்தில் பல்லாயிரம் தீக்குச்சிகளை உருவாக்கலாம்.
அதே ஒரு தீக்குச்சியினால்
பல்லாயிரம் மரங்களை அழிக்கலாம்.
நேரமும், சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம்
எனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம்.
நல்லதையே நினைப்போம்.. நாளும் நல்லதையே செய்வோம்.

Related

பெட்டகம் சிந்தனை 2667866093654971778

Post a Comment

1 comment

Nandini Sree said...

உங்கள் கதை மிகவும் அருமை. நான் ,சில கதைகளை @ மனம் என்ற புதிய இதழயிலில் படித்தேன் நீங்களும் அந்த தமிழ் இணைய இதழில் மேலும் சில சுவையான செய்திகளை படிக்க


https://play.google.com/store/apps/details?id=manam.ajax.com.manam

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item