உலக ஹைப்பர்டென்ஷன் தினம் - மே 17....ஹை பி.பி அலர்ட்!
ஹை பி.பி அலர்ட்! உலக ஹைப்பர்டென்ஷன் தினம் - மே 17 உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன? உடல் முழுவதும் ரத்தம் பாய்வதற்கு உதவுவது இதயமும் ரத...

உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன?
உடல் முழுவதும் ரத்தம் பாய்வதற்கு உதவுவது இதயமும் ரத்த நாளங்களும்தான். இதயம் விரிவடையும்போது, உடல் முழுவதும் இருந்து வரும் கெட்ட ரத்தம் மற்றும் நுரையீரலில் இருந்து வரும் நல்ல ரத்தம் இதயத்துக்குள் வருகிறது. சுருங்கும்போது, கெட்ட ரத்தம் நுரையீரலுக்கும், நல்ல ரத்தம் உடல் முழுவதும் உள்ள பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. இதைத்தான், சிஸ்டாலிக், டயஸ்டாலிக் ரத்த அழுத்தம் என அளவிடுகின்றனர். இதயம் சுருங்கும்போது ரத்தம் வெளியேற்றப்படுவது சிஸ்டாலிக் ரத்த அழுத்தம். சிஸ்டாலிக் ரத்த அழுத்த அளவு அதிகமாக இருந்தால், உயர் ரத்த அழுத்தம் (ஹைப்பர்டென்ஷன்) என்கிறோம்.
பொதுவாக, உணவில் உப்பு குறைவாகச் சேர்த்துச் சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு 5,000 மி.கி அளவுக்கு மேல் உப்பை எடுத்துக்கொள்ளக் கூடாது. அப்பளம், வடகம், ஊறுகாய் போன்றவற்றை மிகக் குறைவாகவே பயன்படுத்த வேண்டும். 2,000 மி.கி அளவுக்கு மேல் சோடியம் உப்பு எடுத்துக்கொள்வது கேடு.
ரத்த அழுத்தம் உயர்வதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், மாத்திரை மருந்துகள் இன்றி வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலமாகவே பெரும்பாலானவர்களுக்கு உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்க முடியும்.
Thanks to:- டாக்டர் விகடன்
Post a Comment