சாதிக்காய்-நாட்டு மருந்துக் கடை - 16

நாட்டு மருந்துக் கடை - 16 ஹெல்த் / உணவே மருந்து! அ திகக் காரமும் துவர்ப்பும்கொண்ட சாதிக்காய், நம்ம...

நாட்டு மருந்துக் கடை - 16
ஹெல்த் / உணவே மருந்து!
திகக் காரமும் துவர்ப்பும்கொண்ட சாதிக்காய், நம்மவர்களை மட்டுமல்லாமல் உலகையே வசீகரித்த ஒரு மூலிகை. மலேசியாவில் பினாங்கு மற்றும் நமது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து உலகெங்கும் செல்வாக்கு செலுத்திவரும் சாதிக்காய் குறித்த வரலாற்றுச் செய்திகள் ஏராளம் உள்ளன. இதற்குக் கிடைத்த அதீத வரவேற்பால், அரபுநாட்டு மாலுமிகள் இதை எங்கிருந்து எடுத்து வருகிறார்கள் என்பதையே பல நூறு ஆண்டுகளாக பெரும் ரகசியமாக வைத்திருந்தனராம். சாதிக்காயின் கனி, ஊறுகாயாகப் பயன்படும். இதன் உள் இருக்கும் விதைதான் சாதிக்காய். கனிக்கும் விதைக்கும் இடையே விதையைச் சூழ்ந்து இருக்கும் மெல்லிய தோல் போன்ற பகுதிதான் சாதிபத்திரி. இதில், சாதிக்காய் எனும் விதையும் சாதிபத்திரி இதழும்தான் மணமும் மருத்துவக்குணமும் கொண்டவை.
‘தாதுநட்டம்’ எனும் விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைவு, வயிற்றுப்போக்கு, ‘சுவாசகாசம்’ எனும் ஆஸ்துமா எனப் பல நோய்களுக்கு, சித்த மருத்துவம் சாதிக்காயைப் பெரிதும் பரிந்துரைக்கிறது. சாதிக்காய் அதிகம் பயன்படுவது, ஆண்களுக்குக் காமப் பெருக்கத்துக்கும் குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கை நீக்கவும்தான்.
சாதிக்காயில் அடிமைப்படுத்தும் போதைப்பொருள், அதன் சத்துக்களில் உள்ளதோ என்கிற சந்தேகம்கூட இடையில் வந்தது. ஆனால், பல ஆய்வுகள் செய்து, அது நரம்பு மண்டலத்தில் வேலை செய்தாலும், போதையூட்டும் வஸ்து அல்ல எனக் கண்டறிந்தனர். ‘நரம்பு மண்டலத்தில் நற்பணிஆற்றுவதால், மனநோய்க்கும், மனதை உற்சாகப்படுத்தவும், நினைவாற்றலைப் பெருக்கவும், மனதை பரபரப்பிலிருந்து விடுவிக்கவும், சாதிக்காயைப் பயன்படுத்தலாம்’ என்கிறது இன்றைய அறிவியல்.
‘சாதிக்காய் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்தப் புற்றுநோயைத் தடுப்பதிலும்கூட செயலாற்றுகிறது’ என்கிறது தாய்லாந்தில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள்.
சாதிக்காய், சுக்குத் தூள் சம அளவு, சீரகம் அதற்கு இரண்டு பங்கு என எடுத்துப் பொடிசெய்து, உணவுக்கு முன் மூன்று சிட்டிகை அளவு சாப்பிட, வயிரற்றில் ஏற்படும் வாயுத்தொல்லை மற்றும் அஜீரணம் நீங்கும். அத்தோடு வைரஸ், பாக்டீரியா காரணமாக வரும் அத்தனை வயிற்றுப் போக்குகளுக்கும் சாதிக்காய்த் தூள் சிறந்த மருந்து.
இனிப்புச் சுவையுடன்கூடிய தனித்துவ மணம் சாதிக்காயில் இருப்பதற்கு, அதன் மைரிஸ்டிசின் (Myristicin) எனும் சத்தே காரணம். தோல் சுருக்கம் ஏற்படாமல் இளமையான தோலை முதுமையிலும் பெற்றிருக்க, சாதிக்காயின் மைரிஸ்டிசின் சத்தினை ஆன்டி-ஏஜிங் கிரீம்களில் சேர்க்கின்றனர்.
சாதிக்காய்த் தூளை ஒரு சிட்டிகை பசும்பாலில் கலந்து இரவில் படுக்கும்போது சாப்பிடுவது, மனஅழுத்தத்தைப் போக்கி, நிறைந்த நரம்புவன்மையையும், சீரான தூக்கத்தையும் தரும்.
இன்றைய நவீன யுகத்தில் குழந்தைப்பேறு இன்மை எக்குத்தப்பாகப் பெருகிவருகின்றது. குறிப்பாக, ஆண்களின் சராசரி விந்து எண்ணிக்கை குறைந்துவருகின்றது. கூடவே, விந்து அணுக்களின் இயக்கமும் குறைகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, உடலுறவின் மீதான நாட்டமும் மன அழுத்தத்தாலும் மோசமான உணவுப் பழக்கங்களாலும் பெரிதும் குறையத் தொடங்கி உள்ளது. இந்த எல்லா பிரச்னைகளுக்கும்  சாதிக்காயும் சாதிபத்திரியும் மிகச் சிறந்த மருந்துகள். சித்த, ஆயுர்வேத மருந்துகளில், குழந்தைப்பேறு இல்லாமல் வரும் தம்பதிகளுக்குக் கொடுக்கும் மருந்துகளில் பெரும்பாலும் சாதிக்காயும் சாதிபத்திரியும் அங்கம் வகிக்கும்.
‘காமத்தைத் தூண்டும் மணத்தைக்கொண்டது’ என்று மட்டுமே நெடுங்காலம் இதனை நம்பிவந்த ஐரோப்பியருக்கு, இது உள்ளேயும் வெளியேயும் வேலை செய்யும் அற்புதமான மருந்து என்பது சமீபத்தில்தான் தெரியவந்தது. யுனானி, ஆயுர்வேதம், சித்தா போன்றவை சொன்ன இதன் ஆண்மைப் பெருக்கி விஷயம் வேடிக்கையானது அல்ல, உடலுறவில் வேட்கையை அதிகரிக்கச் செய்யும் தன்மை இதற்கு உண்டு என உணர்ந்துள்ளனர். உடலுறவில் நாட்டம் ஏற்படுத்துவதொடு விந்தணுக்களின் எண்ணிக்கையைப் பெருக்கி ‘ஒலிகோஸ்பெர்மியா’ (Oligospermia) எனப்படும் விந்து திரவத்தின் செயல்திறன், விந்தணு குறைவால் வரும் குழந்தைப்பேறு இன்மை குணமாக உதவிடும் என்கின்றன ஆய்வுகள்.
சாதிக்காய் நல்லன பலவற்றைச் சாதிக்கும் காய்!
- தொடரும்

உடனடி வலி நிவாரணி!
சாதிக்காய், சணல் விதை, ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம், வெண்கொடிவேலி வேர் (அத்தனையையும் முறையாகச் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்) சம அளவு எடுத்து, நன்கு நுண்ணியமாகப் பொடி செய்துவைத்து, வயிற்றுவலி, மாதவிடாய் தீவிர வலி முதல் மைக்ரேன் தலைவலி வரை எல்லா வலிகளுக்கும் கொடுப்பார்கள். மொத்தத்தில் சாதிக்காய் அந்தக்கால உடனடி வலி நிவாரணி.

Related

நாட்டு வைத்தியம் 3025291920795695682

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item